எடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த ஸ்மிருதி இராணி!

குறிப்பாக 40 வயதை எட்டிய பெண்களுக்கு மாதவிடாய் முடியும் காலகட்டம் என்பதால் சீரற்ற ஹார்மோன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.

news18
Updated: June 11, 2019, 4:24 PM IST
எடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த ஸ்மிருதி இராணி!
ஸ்மிருதி இராணி
news18
Updated: June 11, 2019, 4:24 PM IST
சமீபத்தில் அமேதியில் ராகுலை எதிர்த்து வெற்றி கண்ட ஸ்மிருதி இராணி முன்பைவிட தற்போதுதான் இன்னும் கூடுதலாகக் கவனிக்கப்படுகிறார். சமூக ஊடகங்களில் கிண்டல், விமர்சனங்களையும் சிரித்துக் கொண்டே எதிர்கொள்ளும் வலிமைக் கொண்டவர்.

சமீபத்தில் பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தையும் சமீபத்திய புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’எதுவும் நிரந்தரமில்லை’ என்பது போல் குறிப்பிட்டிருந்தார். இது அவரின் உடல் பருமன் குறித்து விமர்சனம் செய்வோருக்குத் தக்க பதிலாக இருந்தது.

 


Loading...
View this post on Instagram
 

Kya se kya ho gaye dekhte dekhte 🤦‍♀ when #thoughtfulthursday ‘weighs’ on you 🤪😆 @darshanajardosh


A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on


இது ஸ்மிருதி இராணிக்கு மட்டுமான பிரச்னை இல்லை. திருமணமான பல பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக உடற்பயிற்சிக் கூடங்களில் இளம் பெண்களைக் காட்டிலும் முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களைதான் அதிகமாகக் காணக்கூடும். உடல் பருமன் அடைதல் என்பது சில உடல் ரீதியான மாற்றங்கள் மற்றும் பிரச்னைகளால் ஏற்படக் கூடியது.

வளர்சிதை மாற்றம் குறைதல்

வயது அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய வளர்சிதை மாற்றங்கள் நிகழ்வது குறைந்து கொண்டே வரும். வளர்சிதை மாற்றம் குறைந்தால் கலோரிகள் எரியும் சக்தியும் குறைந்துவிடும். இதனால் கூடுதல் கலோரிகள் உடல் எடையை அதிகரித்துவிடும். இதைத் தவிர்க்க போதுமான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.ஹார்மோன் சமநிலையின்மை

பெண்களுக்குப் பூப்படையும் போதும், கர்ப்பகாலத்திலும், மாதவிலக்கு முடியும் காலகட்டத்திலும் ஹார்மோன் சமநிலையில் இருக்காது. குறிப்பாக 40 வயதை எட்டிய பெண்களுக்கு மாதவிடாய் முடியும் காலகட்டம் என்பதால் சீரற்ற ஹார்மோன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.

மன அழுத்தம்

பொதுவாக வயதாகிவிட்டாலே பெண்கள் பல பிரச்னைகளை நினைத்து வருந்துவார்கள். பெற்ற பிள்ளைகள், குடும்பம், பணப் பிரச்னை என அனைத்தையும் நினைத்து மன அழுத்தத்திற்குள்ளாவார்கள். அந்த சமயத்தில் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரக்கும். இது உடல் பருமன் அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணம். அதைத் தொடர்ந்து இதயப் பிரச்னைகள், மற்ற உடல் நலக் குறைவுப் பிரச்னைகள் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கும்.

உடல் உழைப்பு இல்லாமை

வயதாகிவிட்டாலே உடல் சோர்வால் அதிகமாக வேலையில் ஈடுபட மாட்டார்கள். போதுமான உடல் உழைப்பு இல்லை எனில் உடல் எடை அதிகரிக்கும். முடிந்தவரை உடல் உழைப்பு செய்தால் உடல் பருமனைத் தவிர்க்கலாம்.

தசைப் பிடிப்பு குறைதல்

வயதானாலே தசைப் பிடிப்புக் குறைந்து இலகுவாகும். உடலில் தசைகள்தான் கலோரிகளை எரிக்க உதவும். அந்த தசைப் பிடிப்புகளே குறைந்தால் கலோரிகள் கூடுதலாகச் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...