தற்போதைய காலகட்டத்தில் புகைபிடிக்கும் பலரிடையே பரவலாக காணப்படுகிறது. இப்பழக்கம் கடும் ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. புகைபழக்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்குமே பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நுரையீரல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் நோய்களை மட்டுமின்றி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. புகைபிடிக்கும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் சிக்கல் மற்றும் குறைந்த விந்தணு எண்ணிக்கைக்கு வழிவகுக்கும். அதே சமயம் பெண்களில் கருவுறாமை, எக்டோபிக் கர்ப்பம், முன்கூட்டிய பிறப்பு, குறைந்த எடை, தன்னிச்சையான கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்த கூடும். கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க புகைபழக்கத்தை கைவிடுவது காலத்தின் தேவையாக உள்ளது.
புகைபழக்கம் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் முட்டை மற்றும் விந்தணுக்களில் உள்ள மரபணு பொருட்களை சேதப்படுத்துகிறது. புகைபழக்கம் ஒருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது மற்றும் ஒரு தம்பதியர் கருத்தரிக்க கடினமான சூழலை ஏற்படுத்துகிறது.
இப்பழக்கத்தால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி கூறும் நிபுணர்கள், புகைபிடித்தலால் கருவுறுதலை ஏற்படுத்தும் ஆண்களின் விந்தணுவில் உள்ள டிஎன்ஏ சேதமடைகிறது. மேலும் விறைப்பு தன்மையின் செயலிழப்புக்கு (ED -erectile dysfunction) காரணமாக இருக்கலாம். அதாவது உடலுறவின் போது விறைப்பு தன்மையை பராமரிக்க இயலாமையை ஏற்படுத்தி இனப்பெருக்கத்தை பாதிக்கிறது. அதே போல பெண்களில் கருப்பை செயல்பாட்டை சீர்குலைக்கிறது. புகைபிடிக்கும் பழக்கம் பெண்களில் முட்டை எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் கருவுறக்கூடிய முதிர்ந்த முட்டைகளின் (mature eggs) எண்ணிக்கையை குறைக்கிறது. புகைபிடிக்கும் பெண்கள் மெனோபாஸ் காலத்திற்கு சீக்கிரமே நுழைகிறார்கள்.
காஸ்ட் அயர்ன் பாத்திரங்களை துரு பிடிக்காமல் பாதுகாப்பது எப்படி..? உங்களுக்கான டிப்ஸ்
கர்ப்ப காலத்தில் புகைபிடிப்பது கருவில் உள்ள திசுக்களை சேதப்படுத்தும். இது இடம்மாறிய கர்ப்பம், குழந்தையின் நுரையீரல் சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பது, உதடு பிளவு அல்லது கருச்சிதைவு போன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பிரபல ஆலோசகர் மற்றும் மகப்பேறு மருத்துவரான டாக்டர் ப்ரீத்திகா ஷெட்டி கூறுகையில், சிகரெட்டில் உள்ள நச்சுகள் இனப்பெருக்க அமைப்புடன் சேர்ந்து முழு உடலையும் பாதிக்கின்றன. புகைபிடித்தல் விந்தணுவின் அளவு, விந்தணு அடர்த்தி உள்ளிட்ட விந்து தர குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படவிந்தணுவால் பெண்ணின் முட்டையை கருத்தரிக்க வைக்க முடியாது. புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடும் போது புகைப்பிடிப்பவர்களிடம் கருவுறாமை விகிதம் அதிகமாக உள்ளது.
நீண்ட காலமாக புகைபிடிக்கும் பெண்களுக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. ஆண்களை விட இவர்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கருத்தரிப்பதில் சிரமம், முட்டைகளின் தரம் மோசமாக இருப்பது, முன்கூட்டிய பிரசவம், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் காணப்படும். அதே போல ருப்பை வாய் புற்றுநோய்க்கான மிகவும் நன்கு அறியப்பட்ட ஆபத்து காரணியாக புகைப்பழக்கம் உள்ளது.
எனவே புகைபிடிப்பவர்கள் விரைவில் அப்பழக்கத்தை நிறுத்த அறிவுறுத்தி உள்ளார். புகைப்பழக்கத்தை நிறுத்துவது ஒருவரின் கருவுறுதலை அதிகரிக்கவும், கருத்தரிக்கும் வாய்ப்புகளை மேம்படுத்தவும், கருச்சிதைவு மற்றும் குழந்தைகளின் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தையும் குறைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Infertility, Smoking