ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) மருத்துவர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் ஸ்மால்-செல் லங் கேன்சரானது (SCLC) முக்கியமாக அதிகம் புகைபிடிக்கும் குறியீடு (high smoking index) கொண்ட ஆண்களின் ஆரோக்கியத்தையே அதிகம் பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
SCLC என்பது புற்றுநோயின் மிகவும் தீவிரமான வடிவமாக கருதப்படுகிறது. ஏனெனில் பொதுவாக இது மிகவும் தீவிரமாகும் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் போகிறது. எனவே இதனால் பாதிக்கப்படுவோர் உயிர்வாழும் விகிதம் குறைவாகவே இருக்கும். இருப்பினும் இந்த வகை கேன்சரை ஆரம்ப கட்டங்களிலேயே கண்டறிந்து விட்டால் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
நுரையீரல் புற்றுநோயின் இந்த வகையில் (SCLC), சுவாசக் குழாய்களில் தொடங்கி நுரையீரலின் திசுக்களில் வீரியம் மிக்க கேன்சர் செல்கள் உருவாகின்றன. அவை மிக விரைவாக வளர்ந்து, பெரிய கட்டிகளை உருவாக்கி உடல் முழுவதும் பரவுகின்றன. இதனிடையே 2008 மற்றும் 2020க்கு இடையில், எய்ம்ஸின் நுரையீரல் புற்றுநோய் மருத்துவமனை 361 SCLC நோயாளிகளை நிர்வகித்துள்ளது. லுங் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இதில் சுமார் 80% நோயாளிகள் புகைப்பழக்கத்தை நீண்டநாட்களுக்கு முன் கைவிட்டவர்கள் மற்றும் தற்காலிகமாக நிறுத்தியவர்கள் ஆவர். சுமார் 20% SCLC நோயாளிகள் புகைபிடிக்காதவர்கள்.
அந்த 80% நோயாளிகளில் சுமார் 65% பேர் மிக அதிகமாக புகைப்பிடிப்பவர்களாக இருந்துள்ளதை (ஸ்மோக்கிங் இன்டெக்ஸ் லெவல் 300) இந்த ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இதன் மூலம் SCLC வகை நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபழக்கம் ஒரு பெரிய மிகப்பெரிய காரணி என்பது வலுவாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனிடையே புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட SCLC பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான சரியான காரணங்களைக் கண்டறிவது கடினம். எனினும் சுற்றுப்புறக் காற்றில் 2.5 மிமீ (பிஎம் 2.5) துகள்கள் நீண்ட நேரம் வெளிப்படுவது நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதோடு தொடர்புடையது என்பதற்கான சான்றுகள் உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாக இந்த ஆய்வில் பங்கேற்க வைக்கபட்ட 361 நோயாளிகளும் 46-70 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read : உடலுறவில் ஈடுபடாமலே இந்த 6 வழிகளில் பாலியல் தொற்று (STD) பரவலாம்..!
கடந்த சில ஆண்டுகளாக SCLC பாதிப்புகள் குறைந்து வருவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்யுள்ளது. இந்த கேன்சரில் நோய் கண்டறிதல் விஷயத்தில் முன்னேற்றங்கள் இருந்தாலும், உறுதியான நோயறிதலில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது. இதனால் நோயாளிகள் உயிர் வாழும் விகிதம் மோசமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்ற 361 நோயாளிகளில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டுமே ஓரளவு சரியான நேரத்தில் புற்றுநோய் சார்ந்த சிகிச்சையை பெற்றனர். 33.6 சதவீத நோயாளிகள் முதலில் காசநோய்கான சிகிச்சையை பெற்றுள்ளனர்.
26.7 சதவீத நோயாளிகளுக்கு பாதிப்புகள் தீவிரமடைந்த பிறகே உரிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கல்வியறிவு இல்லாதது பின்னணி காரணமாகவும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் ஆய்வில் உள்ள நுரையீரல் புற்றுநோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் கல்வியறிவு இல்லாதவர்கள் அல்லது பிரைமரி லெவல் வரை மட்டுமே படித்தவர்கள். எனவே இவர்களின் குறைந்த விழிப்புணர்வு புகை பழக்கத்திலும் எதிரொலித்திருக்கலாம் என்று அனுமானிப்பதாக ஆய்வு கூறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lungs Cancer, Men's health, Smoking