• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புகைப்பிடிப்பவரா நீங்கள்?: உலக சுகாதார அமைப்பு உங்களுக்காக வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

புகைப்பிடிப்பவரா நீங்கள்?: உலக சுகாதார அமைப்பு உங்களுக்காக வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

  • Share this:
புகைப்பிடிப்பவர்களுக்கு 50% கூடுதலாக தீவிர கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. இருப்பினும் இந்தியா போன்ற மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த சிறிது காலம் தேவைப்படும். இது போன்ற சூழலில் முகக் கவசம், சமூக விலகல் போன்ற பாதுகப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆக வேண்டிய நிலையில் தான் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகப்படியான உயிரிழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று குறித்த எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு 50% கூடுதலாக தீவிர கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Commit to Quit’ என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று வராமல் தடுக்க புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தவிர இதய நோய்கள், புற்றுநோய், சுவாச நோய்கள் வருவதையும் புகைப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் தவிர்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Read More:   இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 33 வயது பெண்ணுடன் ரகசிய திருமணம்!

உலக சுகாதார அமைப்பின் புகையிலைக்கு எதிரான பிரச்சாரத்தில் சேர்ந்து புகையிலை இல்லாத சூழல்களை உருவாக்குவதற்கு அனைத்து நாடுகளும் தங்கள் பங்கை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  புகையிலை பழக்கத்திலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு, தேவையான தகவல்கள் மற்றும் கருவிகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளனர்.

இதற்காக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், வீ சார், மெசெஞ்சர் உட்பட சமூக வலைத்தளங்களில் தினசரி நோட்டிஃபிகேஷன், டிப்ஸ் மற்றும் தேவையான ஊக்க தகவல்களை ‘Commit to Quit’ சாலஞ்ச் தினசரி வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Read More:   ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என அமைச்சரிடம் புகார் கூறிய இளைஞர்!

இந்தியாவில் இ-சிகரெட்டுகள் உட்பட சூடான புகையிலை பொருட்களை தடை செய்ததற்காக 2019ம் ஆண்டு சிறப்பு விருதினை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் புகைபிடித்தல், கொரோனா வைரஸைக் கையிலிருந்து வாய்க்கு பரப்புவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: