ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நச்சுக்காற்று மற்றும் காற்று மாசுபாடு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது..? நிபுணர்களின் கருத்து!

நச்சுக்காற்று மற்றும் காற்று மாசுபாடு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது..? நிபுணர்களின் கருத்து!

காற்று மாசுபாடு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது.?

காற்று மாசுபாடு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது.?

காற்று மாசுபாட்டின் காரணமாக மலட்டுத்தன்மை தூண்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி என்றால் நச்சு காற்றில் இருக்கும் கேடுவிளைவிக்கும் மாசுக்கள் உடலுக்குள் இருக்கும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்துகின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பருவமழைக்கு பிறகு வரும் மாதங்களில் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை குறைவதால் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக இருக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பல முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் காற்று மாசுபாடு நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, பாலியல் ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிப்பதாக நிபுணர் எச்சரித்து வருகின்றனர். தூய்மையற்ற நச்சுக்காற்று நுரையீரலை மட்டுமன்றி பாலியல் வாழ்க்கையை பல வழிகளில் பாதிக்கிறது. காற்றுமாசு மற்றும் நச்சுப்புகை மண்டலம் உள்ளிட்டவை மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.

இந்நிலையில் இதை பற்றி மேலும் பல தகவல்களை பிர்லா ஃபெர்ட்டிலிட்டி & IVF-ன் மகப்பேறு மருத்துவர் டாக்டர் வினிதா தாஸ் மற்றும் மணிப்பால் மருத்துவமனை நுரையீரல் நிபுணர் டாக்டர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். டாக்டர் பியூஷ் கோயல் பேசுகையில், தூசி மற்றும் புகை போன்றவற்றல் மாசுபட்ட காற்று என்பது சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் கலவையாக இருக்கிறது. தவிர மாசுபட்ட காற்றில் கேடுவிளைவிக்கும் கெமிக்கல்கள் உள்ளன. இவற்றில் பல நீராவிகளுடன் சேர்ந்து கேன்சரை ஏற்படுத்த கூடியவை. இதன் விளைவாக PM 2.5 மற்றும் PM 10 உள்ளிட்ட நுண்துகள் உருவாகி காற்றானது மேலும் மாசுபடுகிறது.

இந்த முடியின் விட்டத்தை விட 20 மடங்கு குறைவாக இருக்கும் இந்த நுண்துகள் மாசுகள் எளிதாக மற்றும் ஆழமாக நுரையீரலின் உள்ளே செல்ல கூடும். இதன் விளைவாக ஒருகட்டத்தில் இந்த கேடு விளைவிக்கும் நுண்துகள்கள் ரத்தத்தில் கலந்து உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்கிறது. இது மூளையின் பல சிறிய நாளங்களில் அடைப்பையும் ஏற்படுத்துகிறது. உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் இந்த பாதிக்கப்பட்ட ரத்த விநியோகம் செல்வதால் பக்கவாதம், மாரடைப்பு, இதய பிரச்சனைகள் மற்றும் குழந்தையின்மை சிக்கல் ஏற்பட கூடும் என்கிறார்.

Also Read : இந்த உணவுகளை சாப்பிட்டால் மலட்டு தன்மை உண்டாகுமாம்... எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

தூண்டப்படும் மலட்டுத்தன்மை:

காற்று மாசுபாட்டின் காரணமாக மலட்டுத்தன்மை தூண்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி என்றால் நச்சு காற்றில் இருக்கும் கேடுவிளைவிக்கும் மாசுக்கள் உடலுக்குள் இருக்கும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக விறைப்புத்தன்மையில் குறைபாடு மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.

தவிர ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் ரத்த விநியோகத்தின் முழு பொறிமுறையையும் இவை பாதிக்கின்றன. இதனால் பாலின வேறுபாடின்றி கருத்தரிப்பை கடினமாக்குதாக குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள். புகைப்பழக்கம் எந்த அளவிற்கு மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறதோ அதே அளவிற்கு காற்றுமாசுபடும் முழு இனப்பெருக்க செயல்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

காற்று மாசுபாடு - கருவுறாமை இடையிலான தொடர்பு..

டாக்டர் வினிதா தாஸ் பேசுகையில், நுண்துகள் பொருள் என குறிப்பிடப்படும் Particulate matter-ல் தாமிரம், ஈயம், துத்தநாகம், கிரவுண்ட் லெவல் ஓசோன் (O3), பென்சோ (a) பைரீன் (BaP) மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) போன்ற மிகவும் சிக்கலான மாசுபடுத்திகள் அடங்கி இருக்கின்றன. இந்த மாசுகளுக்கு முக்கிய காரணமாக போக்குவரத்து மற்றும் தொழில்துறை இருக்கின்றன. காற்று மாசுபாடு ஆண் மற்றும் பெண் கேமடோஜெனீசிஸில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி கேமட்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, மரபணு மற்றும் எபிஜெனெடிக் உள்ளிட்டவற்றின் தரத்தையும் பாதித்து கரு வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார். மேலும் அதிக கருக்கலைப்பு விகிதம் போக்குவரத்து மாசுபாடுகளுடன் தொடர்புடையதாக இருப்பதாகவும் ஆய்வுகள் வெளிப்படுத்தி இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஆண்களில் விந்தணு உருவாக்கத்தில் காற்று மாசுபடுத்திகளின் தாக்கம் பல ஆய்வுகளில் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக PM2.5 வெளிப்பாடு விந்தணுவின் சரியான வளர்ச்சி மற்றும் இயக்கத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கும் காற்று மாசுபாட்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்றாலும் இன்னும் வலுவான தரவு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவருமே தான் காரணம் : IVF நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிற விளைவுகள்:

நச்சுக் காற்றை சுவாசிப்பதால் மூச்சுக்குழாய் அழற்சி, தீவிர ஆஸ்துமா, ஆல்வியோலி சேதம், சுவாச எரிச்சல், நரம்பு மண்டல பிரச்சனைகள் உள்ளிட்ட பல கோளாறுகள் ஏற்படும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Air pollution, Fertility, Smog