புகைப்பிடிப்பதால் கண் பார்வை பறிபோகும் ஆபத்து! ஆய்வில் தகவல்

புகையிலை உட்செலுத்தப்படுவதால் நிறப் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வை மங்களாகத் தெரிவது போன்ற பிரச்னைகள் வரும் எனக் கூறியுள்ளது.

news18
Updated: February 20, 2019, 5:09 PM IST
புகைப்பிடிப்பதால் கண் பார்வை பறிபோகும் ஆபத்து! ஆய்வில் தகவல்
மாதிரிப் படம்
news18
Updated: February 20, 2019, 5:09 PM IST
அதிகப்படியான புகைப் பழக்கத்தால் இதயக் கோளாறுகள், புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படும் என பல ஆய்வுகள் எச்சரித்துள்ள நிலையில் புதிதாக நடத்திய ஆய்வில் ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட சிகெரட் பிடிப்பதால் கண்பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள இந்த ஆய்வில் தொடர் புகையிலை உட்செலுத்தப்படுவதால் நிறப் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வை மங்களாகத் தெரிவது போன்ற பிரச்னைகள் வரும் எனக் கூறியுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் 25 முதல் 45 வயதிற்கு உட்பட்ட 15க்கும் குறைவான சிகெரட் பிடிக்கும் 71 பேரிடமும், 20க்கும் அதிகமான சிகெரட் பிடிக்கும் 63 பேரிடமும் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதில் 63 பேருக்கு நிறத்தை சரியாகக் கண்டறியத் தெரியவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.


ஜர்னல் சைக்காட்ரி ரிசர்ச் என்கிற தளத்தில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய வண்ணங்கள் தெரிவதில் குறைபாடு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளது. சிகெரட்டில் இருக்கும் நியூட்ரோடாக்சிக் என்கிற கெமிக்கல், பார்வையின் வண்ணத் திரையை நேரடியாகப் பாதித்து செயலிழக்கச் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ரட்ஜர்ஸ் பிஹேவியரல் ஹெல்த் கேர் ஆராய்ச்சியில் ஒருவரான ஸ்டீவன் சில்வர்ஸ்டெய்ன், "தொடர் புகைப்பழக்கம் , அல்லது அதிகப்படியான புகைப்பழக்கம் கொண்டோருக்கு பார்வையின் விழித்திரைகள் மங்கி பார்வைக் குறைபாடுகள் அதிகரிக்கும்" எனக் கூறினார்.

இதுகுறித்து ஸ்டீவ் விளக்குகையில், ”கிகெரட் புகைப்பழக்கம் மூளையின் மேல் படிந்திருக்கும் தடிமனான லேயரை பலவீனமாக்குகிறது. அதன் தொடர்ச்சியாக மனிதனின் உணர்சிகள், ஞாபகத் திறன் போன்ற செயல்பாடுகளைச் செய்யக் கூடிய மூளையின் முன் மடலை பாதிக்கிறது. இதனால் அதோடு தொடர்புடைய பார்வையையும் பாதிக்கிறது. கண் பார்த்து மூளைக்கு இடும் கட்டளையும் செயலிழக்கிறது “ என கூறுகிறார்.

Loading...

Also see:

First published: February 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...