ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாவதால் ஏற்படும் மூளை பாதிப்பு : அலர்ட் ரிப்போர்ட்..!

ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.

ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாவதால் ஏற்படும் மூளை பாதிப்பு : அலர்ட் ரிப்போர்ட்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 20, 2020, 7:06 AM IST
  • Share this:
ஸ்மார்ட்ஃபோன்களை அதிகம் பயன்படுத்துவது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜெர்மனியில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்களை அதிகம் பயன்படுத்துபவர்களது மூளையின் வடிவம் மற்றும் அளவில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சிக்கு 48 பேரின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பதிவு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 22 பேர் ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையானவர்கள்.

இந்த ஆய்வின் முடிவில் ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையானவர்களின் மூளையில் உள்ள கிரே மேட்டர் என்னும் பகுதி, எதிர்த்தரப்பைக் காட்டிலும் குறைவாகக் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக போதைக்கு அடிமையானவர்களின் மூளையில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்படுமோ அதே வகையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது ஆராய்ச்சியாளர்களையே அதிர வைத்துள்ளது.


First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்