• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வொர்க் ஃப்ரம் ஹோமால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் - தவிர்க்க என்ன செய்யலாம்!

வொர்க் ஃப்ரம் ஹோமால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் - தவிர்க்க என்ன செய்யலாம்!

வீட்டில் இருந்தே வேலை

வீட்டில் இருந்தே வேலை

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது எப்போதும் படுக்கையில் உட்கார கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனென்றால் எதிர்காலத்தில் உங்கள் முதுகில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட இது வழிவகுக்கும்

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக மீண்டும் மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கி உள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ளும் வொர்க் ஃப்ரம் ஹோம் (WFH) முறைக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். இந்நிலையில் உட்காரும் வசதி, லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை சரியான உயரத்தில் வைத்து கொண்டு வேலை செய்யும் முறை உள்ளிட்ட வசதிகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது கிடைக்காது. எனவே வொர்க் ஃப்ரம் ஹோமில் வேலை பார்க்கும் போது அலுவலக வேலைகளை முடிக்க நீண்ட நேரத்தை செலவழிப்பது என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது.

குறிப்பாக வொயிட் காலர் வேலையில் உள்ளோர் படுக்கைகள், நாற்காலிகள் அல்லது சோபாவில் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு, நாளொன்றுக்கு பல மணி நேரங்கள் தங்கள் லேப்டாப்பில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முறையான பணியிட வசதியின்றி வீட்டிலிருந்து செய்யும் அலுவலக வேலைகளின் போது, முறையற்ற ஒரு வேலை அமைப்பால் தீவிர உடல்வலி, உடல் சோர்வு,முதுகு வலி போன்று உடல்நல கோளாறுகள் ஏராளம் ஏற்படும்.

நல்ல நாற்காலி:

பொதுவாக வொர்க் ஃப்ரம் ஹோம் நபர்களின் முதல் தேர்வு வீட்டிலிருக்கும் படுக்கையாகவே இருக்கிறது. ஆனால் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது எப்போதும் படுக்கையில் உட்கார கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனென்றால் எதிர்காலத்தில் உங்கள் முதுகில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட இது வழிவகுக்கும். சந்தையில் ஏராளமான ஸ்டைல்களில் தற்போது அலுவலக நாற்காலிகள் கிடைக்கின்றன. இதில் உங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற மற்றும் வசதியான நாற்காலியை தேர்வு செய்து வாங்கிப் பயன்படுத்தலாம். உயரம் குறைந்த நாற்காலியில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். எனவே தனக்கு சரியான நாற்காலியை தேடி கண்டுபிடிப்பது ஒரு வொர்க் ஃப்ரம் ஹோம் நபருக்கு மிகவும் முக்கியம்.

உங்கள் உடலை சரியாக வைக்கவும்

வேலை செய்யும் போது உடல் சரியான ஒரு நிலையில் இருப்பது அவசியம். மவுசை பிடிக்கும் போது, கீ போர்டில் டைப் செய்யும் போது என உங்கள் தோள்கள், முழங்கைகள், முன்கைகள் மற்றும் உங்கள் மணிக்கட்டு உள்ளிட்டவற்றை ரிலாக்ஸாக வைத்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்யும் போது முழங்கால்கள் இடுப்பு மட்டத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். டேபிளை விட மிகவும் குறைந்த உயரத்தில் உட்கார்ந்து வேலை செய்ய நேரிட்டால் அப்போது சப்போர்ட்டுக்கு குஷன்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

கண் பார்வை:

தொடர்ந்து பல மணி நேரங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்த்து கொண்டிருந்தால் கண் பார்வை வெகுவாக பாதிக்கப்படும். அதிலும் லேப்டாப் என்றால் அதன் ஸ்கிரீனை மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி சாய்த்து அதை பார்த்து கொண்டே வேலை செய்வது கண்பார்வையை மட்டுமல்லாமல் கழுத்து பகுதியையும் பாதிக்கும். எப்போதுமே உங்கள் லேப்டாப் ஸ்கிரீன் உங்கள் கண்ணிற்கு நேர் கோட்டில் இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். நிமிர்ந்தோ அல்லது குனிந்தோ லேப்டாப் ஸ்கிரீனை பார்த்து வேலை செய்யும் படி இருக்க கூடாது. இந்த சிக்கலை சரிசெய்ய எக்ஸ்டெர்னல் மவுஸ் மற்றும் கீபோர்ட் வாங்கி பயன்படுத்தலாம்.

உடல் அசைவுகள்:

வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறை உங்கள் தலையை கடிகார திசை மற்றும் அதற்கு எதிர் திசை என குறைந்தது 10 முறை சுழற்ற வேண்டும். இது கழுத்தை ஸ்ட்ரெச் செய்யவும், கழுத்து மற்றும் தோள்பட்டையில் உள்ள இறுக்கத்தை அகற்றவும் உதவும். உடல் அசைவுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க, நீங்கள் பணிபுரியும் ஒவ்வொரு முறையும் நிலைகளை மாற்றவும். பல மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க இது மிகவும் முக்கியமானது.

இடைவெளி முக்கியம்..

அலுவலகத்திலிருந்து வேலைகளை செய்வதை விட வீட்டிலிருந்து வேலை செய்வது மிகவும் கடினமானது. அன்றாட வேலை அட்டவணைக்கு இடையே அடிக்கடி தேவையான நேரத்தில் தயங்காமல் இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தண்ணீர் குடிக்க எழுவது, வேலைகள் குறித்து திட்டமிடும் அல்லதுய் யோசிக்கும் நேரத்தில் ரூமில் நடப்பது என்று இருந்தால் வேலையில் சிறப்பாக கவனம் செலுத்த உதவும். விரைவான பிரேக்குகள் ஆற்றலை நேர்மறையாக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: