• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • எப்போதும் மெதுவாக நடக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்? எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்!

எப்போதும் மெதுவாக நடக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்? எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

அறிகுறிகள் உருவாகுவதற்கு முன்பே அல்சைமர் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பை ஒருவர் நடந்து செல்லும் வேகத்தை கொண்டே கணித்துவிட முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  • Share this:
ஒவ்வொருவருக்கும் தனித்தனி நடை பாணி உண்டு. ஒரு சிலர் வேகமாக நடப்பார்கள், சிலர் மெதுவாக நடப்பார்கள், சிலர் கை, கால்களை நன்கு வீசியபடி வேகமாகவும், சிலர் வேலை இருக்கிறதோ இல்லையோ அதிவேகமாகவும் நடப்பார்கள். ஒரு சிலர் வேகமாக நடந்து என்ன சாதிக்க போகிறோம் என்ற எண்ணத்தில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்து கொண்டே மிகவும் மெதுவாக நடப்பார்கள்.

அவரவர் நடந்து செல்லும் முறை அவர்களின் அன்றாட செயல்பாட்டையும் பொறுத்தது. பெரும்பாலும் மெதுவாக எப்போதாவது வேகமாக நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளவர்கள் பிற்காலத்தில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், மெதுவாக நடப்பது(Slow walkers) பிற்கால வாழ்க்கையில் நோய்வாய்ப்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.பொதுவாக மெதுவாக நடப்பது ஒருவர் செல்லும் இலக்கை தாமதப்படுத்துவது மட்டுமல்ல அப்பழக்கம் அவரது உடல்நலத்திற்கு சில மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். மக்களின் நடக்கும் முறை பற்றி மதிப்பிட மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள், மெதுவாக நடப்பது ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தீங்கு விளைவிக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் கூறி உள்ளனர். தவிர மெதுவாக நடந்து செல்லும் நடுத்தர வயது மக்கள் வேகமாக நடப்பவர்களை விட பலவீனமான நுரையீரல், பற்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளை கொண்டுள்ளனர் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

அறிகுறிகள் உருவாகுவதற்கு முன்பே அல்சைமர் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பை ஒருவர் நடந்து செல்லும் வேகத்தை கொண்டே கணித்துவிட முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் எப்போதும் மெதுவாக நடப்பவர்களின் உடல் மற்றும் மூளையில் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி, அவர்களுக்கு குறைந்த மூளை அளவு, குறைந்த மூளை மேற்பரப்பு காணப்படுவது தெரிய வந்துள்ளது.

கருக்கலைப்பு உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தும் மசோதாவுக்கு ஒப்புதல்

உதாரணமாக மெதுவாக நடப்பவர்களுக்கு தற்போது 40 வயது தான் என்றால், பார்ப்பதற்கு அவரால் இன்னும் அதிக வயதானவர்கள் போல தோற்றமளிப்பார்கள் என்றும் ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதே போல ஜமா நெட்வொர்க் ஓபன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஒருவர் மூன்று வயதில் இருக்கும் போது அவர்களின் மூளையைப் பார்த்து நடுத்தர வயதில் அவர் எவ்வளவு வேகமாக நடப்பார் என்பதை ஆராய்ச்சியாளர்கள் எளிதில் மதிப்பீடு செய்ய முடியும் என்று தெரியவந்துள்ளது.இதய நோய் அபாயம் அதிகம்..

வேகமாக நடப்பவர்களுடன் ஒப்பிடும் போது மெதுவாக நடப்பவர்கள் (ஆண் அல்லது பெண் )இதயம் சம்பந்தமான நோயால் இறப்பதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம்.மேலும் மெதுவாக நடப்பவர்கள் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் தொடர்புடைய காரணங்களால் இறப்பதற்கு 2.9 மடங்கு வாய்ப்பு அதிகம் என்று பாரிஸை தளமாகக் கொண்ட மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான இன்செர்மின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயமாக இருக்கலாம்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்..

மெதுவாக நடக்கும் பழக்கத்தை உயிர் அபாயத்துடன் இணைத்துள்ள பல ஆய்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும், சீரான அளவு உடலுழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: