ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்குயின் கார்னர் 3 : மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண்கள் கொழு கொழுவென குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா..?

பெண்குயின் கார்னர் 3 : மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண்கள் கொழு கொழுவென குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா..?

நம்முடைய உயரத்திற்கேற்ற எடை இருக்கிறோமா என்பதை கண்டுபிடிக்க BMI சூத்திரம் உள்ளது. அதை வைத்து நாம் எவ்வளவு எடை ஏறலாம்? அல்லது எவ்வளவு எடை குறைய வேண்டும்? என்பதை கண்டுபிடிக்கலாம்.

நம்முடைய உயரத்திற்கேற்ற எடை இருக்கிறோமா என்பதை கண்டுபிடிக்க BMI சூத்திரம் உள்ளது. அதை வைத்து நாம் எவ்வளவு எடை ஏறலாம்? அல்லது எவ்வளவு எடை குறைய வேண்டும்? என்பதை கண்டுபிடிக்கலாம்.

நம்முடைய உயரத்திற்கேற்ற எடை இருக்கிறோமா என்பதை கண்டுபிடிக்க BMI சூத்திரம் உள்ளது. அதை வைத்து நாம் எவ்வளவு எடை ஏறலாம்? அல்லது எவ்வளவு எடை குறைய வேண்டும்? என்பதை கண்டுபிடிக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொழு கொழு கன்னங்கள் வேண்டும்!!!!.

ஆறு மாதங்களுக்கு முன் ரியா என்னைச்சந்திக்க வந்திருந்தார். இளம் தொழில்முனைவர். 31வயது. "திருமணம் நிச்சயமாகி இருக்கிறது டாக்டர்!!! " என்றார்.

"வாழ்த்துகள்!!! ரியா!! திருமண வாழ்க்கையிலும் உங்களுக்கு வெற்றி தான் என்றேன்".

"ஆனால், எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. நான் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன். அத்தோடு மாதம் 2 கிலோ இளைத்துக்கொண்டே வருகிறேன்" என்று கூறினார்.

மருத்துவமனையில் சோதித்த போது 43.5 கிலோ இருந்தார். அவருடைய உயரம் 165 சென்டி மீட்டர். நம்முடைய உயரத்திற்கேற்ற எடை இருக்கிறோமா என்பதை கண்டுபிடிக்க BMI சூத்திரம் உள்ளது. அதை வைத்து நாம் எவ்வளவு எடை ஏறலாம்? அல்லது எவ்வளவு எடை குறைய வேண்டும்? என்பதை கண்டுபிடிக்கலாம். மிக ஆரோக்கியமான BMI 25 வரை. பரவாயில்லை என்பது 30 வரை.

இந்த திருமணத்தில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்று கேட்டேன்.

" இல்ல டாக்டர்!! மாப்பிள்ளை எனக்கு அறிமுகமானவர்தான். ஆறு மாதங்கள் கழித்து திருமணம். அதற்குள் எனக்கு எடை கூட வேண்டும்." என்றார் ரியா.

ஒரு அடிப்படை பரிசோதனையாக தைராய்டு, சர்க்கரை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, சிறுநீரகத்தின் வேலை, வயிறு அல்ட்ரா சவுண்ட் முதலியவற்றை முடித்தோம். எல்லாமே சரியாக இருந்தது. அவருடைய மாதாந்திர சுழற்சியிலும் (periods) எந்த பிரச்சினையும் இல்லை.

ரியாவின் எடை குறைவுக்கு முக்கிய காரணம் வேலைப்பளு, மன அழுத்தம், சரியாக உணவு உட்கொள்ளாதது மற்றும் குறைவான தூக்கம் என்று எனக்கு புரிந்தது.அவருக்கு மருந்து எதுவும் தேவையில்லை என்பதால் எந்த மருந்தையும் நான் கொடுக்கவில்லை.

ரியா தன் வேலைப்பளுவை குறைக்க திட்டமிடுவதாக கூறினார்.

மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளை ஒரு மன நல ஆலோசகர்(psychologist) மூலம் பெற்றுக் கொண்டார்.

இதற்குப்பிறகு ஒரு நாளைக்கு தூக்கம் 6- 8 மணி நேரம் என்பது மெதுவாக அவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. தூங்குவதற்கு முன்பாக சிறிது நேரம் மனதை அமைதிப்படுத்தும் இனிய இசையை கேட்டு, நல்ல நினைவுகளை மனதில் நிரப்பி, பிறகு நிம்மதியாக உறங்குவதாக கூறினார்.

பெண்குயின் கார்னர் 2 : இப்போது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துள்ளீர்களா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

ரியா சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்:

பால், இனிப்புகள், அசைவ உணவு மற்றும் தினமும் ஒரு முட்டை. இது தவிர இடையிடையே தேன் கலந்த பழக்கலவைகள் . உணவோடு சேர்த்து இனிப்பு, பன்னீர், தயிர், சீஸ் போன்ற எந்த பால் பொருட்களையும் அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம். பழங்களில் மா பலா வாழை அதிக கலோரிகளை கொண்டது. நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.

சாப்பிடும் முறை:

உண்ணும் போது உணவில் கவனத்தை வைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

மிதமான உடற்பயிற்சி

- 15 நிமிடங்கள் நடைப்பயிற்சியும்

- 15 நிமிடங்கள் யோகாவும் செய்யலாம்.

முதல் ஒரு மாதத்தில் எடை குறைவது நின்றது.

அடுத்த மாதத்தில் ஒரு கிலோ மட்டுமே கூடியிருந்தார் ரியா. அடுத்து வந்த மாதங்களில் எடை அதிகரிப்பு கூடுதலாக இருந்தது. திருமணத்திற்கு முன்பு 52 கிலோ இருப்பதாக செய்தி அனுப்பியிருந்தார்.

சில நாட்களுக்கு முன், கொழுகொழு கன்னங்கள் மகிழ்ச்சியின் பூரிப்பில் மின்ன திருமண புகைப்படங்களை புலனத்தில் (whatsapp)பகிர்ந்திருந்தார். நிறைவாக இருந்தது!!!

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, Pregnancy diet, பெண்குயின் கார்னர்