ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தூக்கமின்மை கருவுறுதலில் பாதிப்பை உண்டாக்குகிறதா..? அதிர்ச்சி தரும் ஆய்வு..!

தூக்கமின்மை கருவுறுதலில் பாதிப்பை உண்டாக்குகிறதா..? அதிர்ச்சி தரும் ஆய்வு..!

மன அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பலர் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்காமல் இருப்பது ஹார்மோன்களை பாதிக்கின்றன மற்றும் மாதவிடாய் சுழற்சியில் தொந்தரவு ஏற்படுத்தும்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பலர் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்காமல் இருப்பது ஹார்மோன்களை பாதிக்கின்றன மற்றும் மாதவிடாய் சுழற்சியில் தொந்தரவு ஏற்படுத்தும்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பலர் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்காமல் இருப்பது ஹார்மோன்களை பாதிக்கின்றன மற்றும் மாதவிடாய் சுழற்சியில் தொந்தரவு ஏற்படுத்தும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நம் உடல் சிறந்த முறையில் இயங்க தூக்கம் மிகவும் முக்கியமானது மற்றும் அத்தியாவசியமானது. நல்ல ஆரோக்கியத்திற்கு தூக்கம் பெரிய அளவில் பங்களிக்கிறது. பல்வேறு காரணங்களால் இன்று நம்மில் பலருக்கும் போதுமான அளவு தூக்கம் கிடைப்பதில்லை.

தூக்கம் வராமல் தவிக்கும் பலர் ஒருபக்கம் இருக்க, இன்னும் பலர் தூக்கம் வந்தாலும் கூட அதை அனுபவிக்காமல் டிவி அல்லது மொபைல் பார்ப்பது என்று நேரத்தை வீணே செலவழிக்கின்றனர். தூக்கமின்மை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. இதில் குழந்தையின்மையும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா..? அதிக எடை முதல் குடிப்பழக்கம் வரை பல ஒருவரது கருத்தரிக்கும் திறனை பாதிக்கலாம் என்றாலும், தூக்கமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. ஆம், தூக்கமின்மை கருவுறுதலை பாதிக்கிறது..

கர்ப்பமாக முயற்சிக்கும் பெண்களுக்கு இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை அவர்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கும். தவிர கருவுறுதல் சிகிச்சை எடுத்து கொள்ளும் தம்பதிகள் சிகிச்சை தொடர்பான மனஅழுத்தம் காரணமாக தூக்கமின்மையை கொண்டிருக்கலாம். அவர்களுக்கும் சிகிச்சை பலனளிக்காமல் போகலாம். போதிய தூக்கமில்லாமல் இருக்கும் பெண்களில் குறைவான கருவுறுதல் விகிதங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தூக்கமினை ,sleepless at night

தூக்கமின்மை எவ்வாறு மலட்டுத்தன்மைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது?

மன அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பலர் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்காமல் இருப்பது ஹார்மோன்களை பாதிக்கின்றன மற்றும் மாதவிடாய் சுழற்சியில் தொந்தரவு ஏற்படுத்தும். தூக்கம்-விழிப்பு ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் மூளையின் அதே பகுதி தான் இனப்பெருக்க ஹார்மோன்களையும் ஒழுங்குபடுத்துகிறது.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுமா..? உண்மை என்ன..?

தூக்கமின்மை உடல் அதிக மன அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்ய சிக்கனல் செய்யும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மோசமானது. நாளுக்கு சராசரியாக 7-8 மணிநேரம் தூங்குவது கர்ப்பமாவதற்கான முக்கிய புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜன், லெப்டின் மற்றும் ஃபாலிக்கிள் -சிமுலேட்டிங் ஹார்மோன்கள் (FSH) அளவை மேம்படுத்த பெரிதும் உதவும். ஆனால் தூக்கமின்மை இதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தூக்கமின்மை குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகளை குறைக்காமல் இருக்க உதவும் வழிமுறைகள்:

* தினமும் இரவு 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம்

* தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே கம்ப்யூட்டர், மொபைல், டேப்லெட்டுகள் மற்றும் பிற எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்

* நைட் ஷிப்ட்டில் வேலை செய்பவர் என்றால் முடிந்தவரை மார்னிங் ஷிப்ட்களை கேட்டு வாங்கி பணிகளை தொடருங்கள்

அதிகமாக மது குடிப்பதை தவிர்ப்பது, புகைபழக்கம் இருந்தால் நிறுத்துவது, ஆரோக்கிய டயட்டை பின்பற்றுவது, தினசரி உடற்பயிற்சி செய்வது உள்ளிட்டவை கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமின்றி, நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை அமைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Infertility, Pregnancy, Sleepless