• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இரவு தூக்கத்தை அலட்சியப்படுத்துகிறீர்களா..? மூளை , நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என எச்சரிக்கும் ஆய்வு

இரவு தூக்கத்தை அலட்சியப்படுத்துகிறீர்களா..? மூளை , நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என எச்சரிக்கும் ஆய்வு

இரவு தூக்கத்தை அலட்சியப்படுத்துகிறீர்களா..?

இரவு தூக்கத்தை அலட்சியப்படுத்துகிறீர்களா..?

எப்படி நாம் கடிகாரத்தை அடிப்படையாக வைத்து பெரும்பாலான செயல்களை செய்கின்றோமோ சிர்கார்டியன் ரிதம் என்று கூறப்படும் நம் உடலுக்கும் ஒரு கடிகாரம் இருக்கின்றது.

  • Share this:
நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எவ்வளவு முக்கியமோ, உடற்பயிற்சி செய்வது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு இரவு நேரத்தில் நன்றாக உறங்குவதும் இன்றியமையாததாகும். நீங்கள் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்கள் என்றால் உங்கள் மூளையும் நோய் எதிர்ப்பு சக்தியும் பெரிதாக பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படி நாம் கடிகாரத்தை அடிப்படையாக வைத்து பெரும்பாலான செயல்களை செய்கின்றோமோ சிர்கார்டியன் ரிதம் என்று கூறப்படும் நம் உடலுக்கும் ஒரு கடிகாரம் இருக்கின்றது. நாம் தினமும் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒரு மணி நேரம் குறைவாக தூங்கினால் கூட உடல் உறுப்புகளின் கடிகார சுழற்சி பாதிக்கப்படும். தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குவதும், தூக்கத்திற்கான ஒரு ரொட்டீனை தொடர்ந்து கடைப்பிடிப்பதும் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை மிகச் சிறந்த முறையில் செயல்படுத்த உதவும்.

தூக்கம் என்பது நம் உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும் ஓய்வு மட்டுமே கிடையாது. போதுமான அளவு தூக்கம் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் படுக்கை மற்றும் மெத்தை தயாரிப்பாளரான, சவோயர் நிறுவனத்தின் தூக்க நிபுணர் மற்றும், ஸ்லீப் ஃபார் சக்சஸின் இணை ஆசிரியருமான டாக்டர் ரெபேக்கா ராபின்ஸ் தூக்கத்தைப் பற்றிய நடத்திய ஆய்வு பற்றி தி டெலிகிராப்பிடம் பகிர்ந்து கொண்டார்.

அதில் போதிய அளவு தூங்கவில்லை என்றால் மூளை நச்சுக்களை உற்பத்தி செய்யும். தொடர்ச்சியாக இந்த நச்சுக்கள் உற்பத்தியாகும் போது மூளை மற்றும் நரம்புகள் பாதிக்கப்பட்டு அல்சைமர் டிமென்ஷியா உள்ளிட்ட மூளை குறைபாட்டு நோய்கள் உருவாகலாம். இதுவே நீங்கள் தினமும் போதுமான அளவு தூங்கும் போது மூளை இந்த நச்சுக்களை உற்பத்தி செய்யாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு செரிப்ரல் திரவத்தையும் உற்பத்தி செய்யும். திரவம் மூளையை சலவை செய்து மூளையில் உருவாகி இருக்கும் நச்சுக்களை அகற்றும் பணியைச் செய்கிறது என தெரிவித்துள்ளார்.ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பயிற்சியாளரும், ப்ரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் தூக்கம் மற்றும் சர்க்காடியன் பிரிவில் இணை விஞ்ஞானியுமான ராபின்ஸ் ஒரு நிலையான தூங்கும் வழக்கத்தை (sleep routine) நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். நீங்கள் தூங்கச்செல்லும் நேரம் அல்லது எவ்வளவு மணிநேரங்கள் தூங்குகிறீர்கள் என்பதில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட தாக்கத்தை விளைவிக்கும். உதாரணமாக, நேற்றை விட இன்று ஒரு மணி நேரம் குறைவாகத் தூங்கினால், உங்கள் மூளைக்கு உங்கள் தூக்கத்தைக் குறித்து சிக்னல்கள் அனுப்பப்படும்.

இனிமேல் இப்படி கால் மேல் கால் போட்டு உட்காராதீர்கள்... அப்புறம் இந்த பிரச்சனையெல்லாம் சந்தீப்பீங்க..!

இந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு உங்கள் மூளை தயார்படுத்தும். எனவே, அடுத்த நாள் நீங்கள் தூங்குவது மிகவும் கடினமாக உணர்வீர்கள், என்று ராபின்ஸ் கூறியுள்ளார். மேலும் தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிய புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது என்று தெரிவித்துள்ள ராபின்ஸ், நம் உடல் சைட்டோகீன்ஸ் எனப்படும் ஒரு விதமான புரதத்தை உற்பத்தி செய்கிறது. இந்த புரதம், நாம் தூங்கும் போது, உடலில் உள்ள தொற்று அல்லது அழற்சி ஆகியவற்றை சரி செய்கிறது.சரியாகத் தூங்காதவர்களுக்கு, ரினோவைரஸ் போன்ற SARS-Cov-2 வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. நாம் உறங்கும் போது, உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கிடைக்கிறது. ஆனால், உடல் உறுப்புகள் அதன் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கின்றன. தூங்கும் போது, உடல் உறுப்புகளில் ஏற்படும் சிறியஅளவிலான பாதிப்புகளை உடல் தானே சரி செய்து கொண்டுவிடும். இதனால், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

ஆங்கிலத்தில் ‘Nap’ எனப்படும் மதிய நேரத்தின் பத்து முதல் பதினைந்து நிமிட தூக்கம் நம்மை சுறுசுறுப்பாக்கி, புத்துணர்ச்சியாக உணரச் செய்யும். அதே போல, ஒவ்வொரு நாளும், குறைந்தபட்சமாக 7 முதல் 8 மணிநேரங்கள் தூங்குவது, தலை முதல் கால் வரை நம்மை ஆரோக்கியமாகவும், மன ரீதியாக உற்சாகமாகவும் வைத்திருக்கும். ஆனால், 7 மணிநேரத்துக்கும் குறைவாகத் தூங்கும் போது, உடல் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: