ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இரவு தாமதமாக உறங்குபவரா நீங்கள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இரவு தாமதமாக உறங்குபவரா நீங்கள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

உறக்கம்

உறக்கம்

நமது உடலுக்குள் ஏற்கனவே 24 மணி நேர கடிகாரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதான் உங்கள் உடலில் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கும் முக்கியமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு மனிதருக்கு உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உறக்கம் மிகவும் அவசியமான ஒன்று. மேலும் போதுமான அளவு உறக்கத்தை பற்றியும், உறக்கத்திற்கும் உடலுறுப்புகளுக்குள்ள தொடர்பை பற்றியும் தற்போது வரை மிகபெரிய அளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. உறங்கும்போதுதான் நமது உடலானது முழு ஓய்வுக்கு வந்து அடுத்த நாள் வேலைக்காக தன்னை தயார் படுத்திக் கொள்கிறது. மேலும் தனக்குத் தேவையான சக்தியை சேமித்துக் கொள்வதற்கும் தசைகளை சரி செய்வதற்கும், சேதம் அடைந்த செல்களை சரி செய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் உறக்கம் மிகவும் அவசியமாகிறது.

இரவில் தாமதமாக உறங்கச் செல்வதினால் இதய நோய் ஏற்படும் அபாயம் 25% அதிகரிக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்காக 88,026 நபர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 2006 முதல் 2010 காலகட்டங்களில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சராசரி நபர்களின் வயது 61. இவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான பிரச்னைகள் பற்றி பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த 5.7 வருடஆராய்ச்சியில் நடு இரவிலோ அல்லது அதற்கும் தாமதமாகவோ தூங்குபவர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் 25% அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரவில் சீக்கிரம் உறங்க செல்வதால் இதய பாதிப்புகள் ஏற்படாது:

மேலும் இரவு 10 லிருந்து 11 மணிக்குள் உறங்கச் செல்பவர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது. இரவு 10 லிருந்து 11 மணிக்குள் தூங்க சென்ற நபர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பானது 12 சதவீதம் வரை மட்டுமே இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற நபர்களில் 3,172 நபர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இரவு தாமதமாக உறங்க கூடாது!

நமது உடலுக்குள் ஏற்கனவே 24 மணி நேர கடிகாரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதான் உங்கள் உடலில் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கும் முக்கியமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இரவு மிகவும் தாமதமாக தூங்கச் செல்லும் போது இந்த செயல்முறை பாதிக்கப்படுகிறது.

எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதும் முக்கியமானது!

தூக்கமின்மை என்பது இன்றைக்கு பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்னையாகும். சரியாக தூங்காமல் இருப்பதும் அவர்கள் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி பலருக்கும் கவலை இல்லாமல் இருக்கிறது. அளவுக்கு குறைவாக தூங்கும் போது அது அதிக அளவிலான மன அழுத்தம் மற்றும் இதய கோளாறுகள், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு உடல் பாதைகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.

Also Read : படுத்த உடனே தூங்க வேண்டுமா..? தூக்கமின்மையை போக்க உதவும் 5 உணவுகள்

மேலும் போதுமான அளவு தூக்கம் இல்லை எனில் அவை நமது நரம்பு மண்டலத்தை பாதித்து, இதயத் துடிப்பு முதல் நரம்பு மண்டலம் பாதிக்கிறது. எனவே அளவுக்கு குறைவாக தூங்கும்போது அவை பல்வேறு இதய சம்பந்தப்பட்ட கோளாறுகளை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நன்றாக தூங்குவதற்கு சில குறிப்புகள்

* தினசரி குறிப்பிட்ட நேரத்தில் உறங்க சென்று விட வேண்டும்.

* பகலில் தூங்குவதை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.

* உடல் இயக்கங்களை அதிகரிக்க வேண்டும்.

* உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இரவு உணவை முடித்து விட வேண்டும்.

* ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

* படுக்கை மற்றும் தலையணைகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை இரவு நேரத்தில் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.

First published:

Tags: Health tips, Healthy Life, Sleepless