Home /News /lifestyle /

காலை உணவை தவிர்த்தால் 'டிமென்ஷியா' பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு : இனி மிஸ் பண்ணிடாதீங்க...

காலை உணவை தவிர்த்தால் 'டிமென்ஷியா' பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு : இனி மிஸ் பண்ணிடாதீங்க...

டிமென்ஷியா

டிமென்ஷியா

மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள், ஒழுங்கற்ற உணவு முறைகள் மற்றும் உடல் உழைப்பு / செயல்பாடு இல்லாமை - இவை அனைத்தும் உங்களை டிமென்ஷியாவிற்குள் தள்ளும்.

டிமென்ஷியா தொடர்பான விழிப்புணர்வும் புரிதலும் - கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது. ஏனெனில் டிமென்ஷியாவின் தொடக்கத்தை முன்னரே கண்டறிந்து, சில சரியான நடவடிக்கைகளை கையாள்வதன் மூலம் இதை திறம்பட நிர்வகிக்க முடிகிறது.

டிமென்ஷியா - என்றால் என்ன?

டிமென்ஷியா என்பது ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளில் தலையிடும் அளவிலான அறிவாற்றல் சார்ந்த செயலிழப்பை ஏற்படுத்தும் ஒரு பாதிப்பு ஆகும். இன்னும் எளிமையாக கூறவேண்டுமென்றால், இது ஒருவரின் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் பகுத்தறிதல் திறனில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இருப்பினும் டிமென்ஷியாவின் அறிகுறிகள் 60 வயதிற்கு பிற்பகுதியில் தான் தோன்றவே ஆரம்பிக்கின்றன, ஆனால் 30 மற்றும் 40 வயதுகளுக்கு இடையே நாம் என்ன செய்கிறோம் என்பதே, 60 வயதில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.



டிமென்ஷியா பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும் காரணங்கள் என்னென்ன?

மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள், ஒழுங்கற்ற உணவு முறைகள் மற்றும் உடல் உழைப்பு / செயல்பாடு இல்லாமை - இவை அனைத்தும் உங்களை டிமென்ஷியாவிற்குள் தள்ளும். டிமென்ஷியா என்பது நமது மூளையின் செயல்பாட்டை பாதிக்கத் தொடங்கும் ஒரு அடித்தளமாகும். இது சிறிய சிறிய விஷயங்களில் இருந்து தொடங்குகிறது, மேலும் நாம் 60 வயதிற்குள் நுழையும் போது சிக்கல்கள் பெரிதாகின்றன.

நடைப்பயிற்சி தொப்பையை குறைக்க உதவுமா..? இப்படி நடந்தால் மட்டுமே சாத்தியம்..!

காலை உணவை தவிர்பவர்களுக்கு ஒரு அலெர்ட்!

ஒரு சமீபத்திய ஆய்வறிக்கையின் படி, காலை உணவைத் தவிர்க்கும் பழக்கமானது டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, ஒரு நாளின் முதல் உணவைத் தவறவிடுவது பிற்கால வாழ்க்கையில் டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும் என்பதை நிரூபிக்கிறது. குறிப்பிட்ட ஆய்வின் முடிவுகள், ஜப்பனீஸ் ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் சயின்சஸ் ஆஃப் ஹெல்த்-சோஷியல் சர்வீசஸ்-இல் (Japanese Journal of Human Sciences of Health-Social Services) வெளியிடப்பட்டுள்ளது.



இந்த ஆய்வு எப்படி, எங்கு, யாரைக்கொண்டு நடத்தப்பட்டது?

வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களுக்கும், டிமென்ஷியாவிற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்வதை நோக்கமாக கொண்ட இந்த ஆய்வு ஜப்பானில் உள்ள ஒரு நகர்ப்புறத்திற்கு அருகிலுள்ள ஒரு விவசாய சமூகத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது, இதில் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 525 முதியவர்கள் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில், பாலினம் மற்றும் வயதை பொருட்படுத்தாமல், காலை உணவை உட்கொள்ளாதவர்களுக்கு டிமென்ஷியா உருவாகும் அபாயம் நான்கு மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.



டிமென்ஷியா அபாயத்தை குறைக்க ஒருவர் என்னென்ன சாப்பிட வேண்டும்?

டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்க, உங்கள் உணவில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை சேர்ப்பது அவசியம். குறிப்பாக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு உணவு, டிமென்ஷியா உட்பட பல நாள்பட்ட நோய்களை எதிர்த்துப் போராட உதவும். சிகாகோவில் உள்ள ரஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட 'மைண்ட்' (Mediterranean-DASH Intervention for Neurodegenerative Delay - MIND) டயட்டின் படி, முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் சீட்ஸ், ஆரோக்கியமான கொழுப்பு, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவைகளை ஒருவர் தன் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breakfast, Dementia Disease

அடுத்த செய்தி