ஒரு நாளைக்கு ஐந்து காஃபிக்கு மேல் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா...? அதிர்ச்சி தரும் ஆய்வு

காஃபி அருந்துவதால் ஒரு வித உற்சாகம், சுறுசுறுப்பு ஏற்படுகிறது என பங்கேற்பாளர்கள் கூறியுள்ளனர்.

Sivaranjani E | news18
Updated: May 13, 2019, 1:48 PM IST
ஒரு நாளைக்கு ஐந்து காஃபிக்கு மேல் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா...? அதிர்ச்சி தரும் ஆய்வு
காஃபி
Sivaranjani E | news18
Updated: May 13, 2019, 1:48 PM IST
ஒரு நாளைக்கு ஆறு காஃபியோ அல்லது அதற்கு மேற்பட்டோ காஃபி அருந்தினால் இதய நோய் ஏற்படும் ஆபத்து 22% இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.


அமெரிக்க ஜர்னல் ஆஃப் க்ளினிகள் நியூட்ரீஷியனில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் அதிகமான காஃபி அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு நோயாளி இறப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறது அந்த ஆய்வு.
அதிகமாக காஃபி அருந்துவோரிடம் ஏன் அதிகமாக அருந்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் ஒரு வித உற்சாகம், சுறுசுறுப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அப்படி அதிகமாகக் குடித்தால் உடலுக்கு ஆபத்தும் அதிகரிக்கும் என இதன் மூத்த ஆராய்ச்சியாளர் ஹைப்போனென் ( Hypponen) தெரிவித்துள்ளார்.


Loading...


”உலக சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி இதய நோய் என்பது மிகவும் ஆபத்தானது எனக் குறிப்பிடுகிறது. இது நாம் அதிகமாக அருந்தும் கஃபைனால் ஏற்படுகிறது என்றால் அதைக் குறைத்துக் கொள்வது அவசியம்” என எச்சரிக்கிறார் ஹைப்போனென்.


இந்த ஆய்வில் 37 - 73 வயது கொண்டவர்களில் 3,47077 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு இதய நோய் வரும் அறிகுறியும், இதய நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
First published: May 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...