ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

50 வயதில் IVF முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்... பல எதிர்ப்புகளை மீறி எப்படி சாத்தியமானது..?

50 வயதில் IVF முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்... பல எதிர்ப்புகளை மீறி எப்படி சாத்தியமானது..?

50 வயதில் IVF முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்

50 வயதில் IVF முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்

வாழக்கை துணை யாருமின்றி 50 வயதில் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார் கெல்லி கிளார்க் (Kelly Clarke) என்ற பெண்மணி. இவருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாழ்க்கையில் நமது இன்ப துன்பத்தை பங்கு போட கண்டிப்பாக ஒரு துணை அவசியம். ஆயிரம் சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நெருக்கடியான நேரத்தில் தோள் கொடுத்து நம்முடன் துணை நிற்க, வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல ஒரு லைஃப் பார்ட்னர் நம் எல்லோருக்கும் அவசியம்.

வாழ்க்கையை துணை இல்லாமல் கழிப்பது கஷ்டம் என்றால் வாழ்க்கை தினை இன்று ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது எவ்வளவு சவாலான வேலை என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். அதிலும் ஒரு பெண் சிங்கிள் பேரென்டாக இருப்பது அவருக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்த கூடும். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தானாக விருப்பபட்டு சிங்கிள் பேரன்ட் ஆகி இருக்கிறார். அதுவும் 50 வயதில்.. ஆம் சரியாக தான் படித்தீர்கள்.

வாழக்கை துணை யாருமின்றி 50 வயதில் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார் கெல்லி கிளார்க் (Kelly Clarke) என்ற பெண்மணி. இவருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் இவருக்கான சரியான மற்றும் சிறந்த வாழ்க்கை துணை கடைசி வரை அமையவில்லை. எனவே தனது 50-ஆவது பிறந்த நாளில் தனது குழந்தை ஆசையை நிறைவேற்றி கொள்ள ஒரு மிக பெரிய முடிவை எடுத்தார். அது தான் IVF முறையை பயன்படுத்தி ஒரு குழந்தையை பெற்றெடுப்பது.

இவர் இளமையில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா.! Kelly Clarke சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்துள்ளார். மறைந்த இளவரசி டயானா, கேட் மோஸ் மற்றும் டாம் ஜோன்ஸ் உள்ளிட்ட பல ஏ-லிஸ்ட் VVIP-க்களுக்கு விமானத்தில் பணிப்பெண்ணாக சர்விஸ் செய்துள்ளார். இவரது தோழிகள் பலர் குடும்பம், குழந்தை என்று செட்டிலாகி விட்ட நிலையில் இவருக்கு ஏனோ திருமண வாழ்வு அமையவில்லை. எனினும் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டதால் எப்படியாவது தாயாகி விட வேண்டும் என்ற ஆசை இவருக்குள் வேரூன்றியது. இதன் விளைவே 50 வயதில் IVF-ஐ இவர் நாட முடிவு செய்ததன் காரணம்.

Also Read : கர்ப்பம் உறுதியானதும் இத்தனை டெஸ்ட் எடுக்கனுமா..? ஏன் இதெல்லாம் எடுக்கனும் தெரியுமா..?

எனினும் IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொள்ளும் கெல்லி கிளார்க்கின் அதிரடி முடிவுக்கு அவரது நலம் விரும்பிகள், அன்புக்குரியவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களால் முடிந்த வரை எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வயதிற்கு மேல் குழந்தை பெற்று அதை எப்படி உன்னால் வளர்க்க முடியும் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் அனைவரின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் தனது ஆசையை நிறைவேற்றி கொள்ள கிரீஸ் நாட்டிற்கு பறந்து சென்றார்,

இறுதியாக தாயாக வேண்டும் என்ற தனது நீண்ட கால ஆசையை மார்ச் 2021-ல் தனது மகள் Lyla Rae-ஐ இந்த பூமிக்கு வரவேற்றதன் மூலம் நிறைவேற்றி கொண்டார். இதுபற்றி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தகவல்களை ஷேர் செய்து கொண்ட கெல்லி கிளார்க், 50 வயதில் ஒரு தாயாக மாற முடிவு செய்ததற்காக நான் பெரிய அளவிலான எதிர்ப்பை சந்தித்தேன். என் குடும்பத்தினர் என்னைப் பற்றியும், சிகிச்சைக்காக நன்கொடையாளரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் கவலைப்பட்டனர். ஆனால் என் முடிவு சரி தான் என்று நாம் உறுதியாக நம்பினேன் என்றார்.

மேலும் 50 வயதில் குழந்தையை பெற்று கொள்வதில் உள்ள சௌகரியம் என்னவென்றால் வெளியூர் பயணம் அல்லது பார்ட்டி செய்வதெல்லாம் பற்றி சிந்திக்காமல் குழந்தையுடன் முழு நேரத்தையும் செலவிட முடியும் என்று கூறி இருக்கிறார் கெல்லி. தற்போது எனது மகள் Lyla Rae வளரும் ஒவ்வொரு தருணத்தையும் தவறவிடாமல் பார்த்து மகிழ்கிறேன். தவிர என்னுடைய வாழ்க்கை அனுபவத்தின் இவளை எனது இளமைப் பருவத்தில் இருந்ததை விட இப்போது சிறப்பாக வழிநடத்த முடியும் என்பதை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். எனது முழுக்கவனமும் இவள் மீது இருப்பதால் எனது ஆசை நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, வாழ்க்கை உற்சாகமாக செல்கிறது என்று பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: IVF Treatment, Pregnancy