முதல் தவணை தடுப்பூசியிலேயே உருமாறிய கொரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் - ஆய்வு

முதல் தவணை தடுப்பூசியிலேயே உருமாறிய கொரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் - ஆய்வு

கொரோனா வராதவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி மட்டும் போட்டால், போதுமான தடுப்பாற்றல் கிடைக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வராதவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி மட்டும் போட்டால், போதுமான தடுப்பாற்றல் கிடைக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

 • Share this:
  பார்ட்ஸ், ராயல் ப்ரீ ஆகிய ஆஸ்பத்திரிகளில் இங்கிலாந்து சுகாதார பணியாளர்களில் அறிகுறி இல்லாத, சாதாரண அறிகுறிகள் கொண்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு முதல் தவனை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின் அவர்களை பரிசோதனை செய்ததில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த உருமாறிய கொரோனாக்களில் இருந்து போதிய பாதுகாப்பு கிடைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  இதற்குக் காரணம் முதல் தவணை தடுப்பூசி போட்டதுதான் என பைசர் நிறுவனம் கண்டறிந்துள்ளது. லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி, குயின் மேரி பல்கலைக்கழகம், பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.  அதேசமயம் இந்த ஆய்வில் கொரோனா வராதவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி மட்டும் போட்டால், போதுமான தடுப்பாற்றல் கிடைக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆய்வின் மூலம், இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் ரோஸ்மேரி பாய்டன் தெரிவித்தார்.

  கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பு - எச்சரிக்கும் மருத்துவர்கள்

  இந்த ஆய்வுக்கு இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த உருமாறிய கொரோனாக்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், இந்த ஆய்வு முடிவுகள் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் உருவான உருமாறிய கொரோனாக்களுக்கும் பொருந்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

   
  Published by:Sivaranjani E
  First published: