• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • துரியன் பழத்தோலில் இருந்து பேண்டேஜ் கண்டுபிடித்த அறிவியலாளர்கள்...

துரியன் பழத்தோலில் இருந்து பேண்டேஜ் கண்டுபிடித்த அறிவியலாளர்கள்...

துரியன் பழத்தோலில் இருந்து பேண்டேஜ்

துரியன் பழத்தோலில் இருந்து பேண்டேஜ்

பழத்தின் தோல் மற்றும் விதைகள், சாப்பிட முடியாது என்பதால், அதிகளவில் கழிவுகளாக கீழே விசப்படுவதாக தெரிவித்த அவர், இது சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சிங்கப்பூரில் அதிகம் தூக்கியெறியப்படும் துரியன் பழத்தோலில் இருந்து ஆன்டி-பாக்டீரியல் பேண்டேஜ்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் அதிகம் சாப்பிடப்படும் துரியன் பழங்களின் தோல், வீணாக செல்வதை அறிந்த விஞ்ஞானிகள், அதனை உபயோகமானதாக மாற்ற முடிவு செய்தனர். இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTU) விஞ்ஞானிகள், துரியன் பழத்தோல் கழிவுகளில் இருந்து ஆன்டி பாக்டீரியா ஜெல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

துரியன் பழ தோலில் இருக்கும் உமிகளில் இருந்து செல்லூலோஸ் பவுடரை உருவாக்கினர். பின்னர், அதனை கிளிசரால் என்ற திரவத்துடன் கலந்தபோது, மென்மையான ஹைட்ரஜல் ஜெல் உருவானது. அதனை பேண்டேஜ்ஜாக மாற்றி அசத்தியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு குறித்து பேசிய, சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் இயக்குநர் பேராசிரியர் வில்லியம் சென், சிங்கப்பூரில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 12 மில்லியன் துரியன் பழங்கள் உட்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

பழத்தின் தோல் மற்றும் விதைகள், சாப்பிட முடியாது என்பதால், அதிகளவில் கழிவுகளாக கீழே விசப்படுவதாக தெரிவித்த அவர், இது சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை மருத்துவ ரீதியில் உபயோகமானதாக மாற்ற முடிவு செய்ததாக தெரிவித்த சென், துரியன் பழக்கழிவுகளில் இருந்து ஆன்டி பாக்டீரியல் ஹைட்ரஜல் உருவாக்கப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதற்காக பல்வேறு ஆய்வுகளை ஆய்வு செய்தபோது துரியன் பழக்கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டதாகவும், இதன் அடிப்படையிலேயே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.



இதேபோல், மற்ற பழங்கள் மற்றும் காய்கறிக்கழிவுகளில் இருந்தும் ஆன்டி பாக்டீரியல் ஜெல் தயாரிக்க முடியும் என்றும் சென் தெரிவித்தார். குறிப்பாக, சோயா பீன்ஸில் இருந்து இத்தகைய ஆன்டி பாக்டீரியல் ஜெல்லை உருவாக்க முடியும் எனத் தெரிவித்த அவர், வழக்கமான பேண்டேஜ்களுடன் ஒப்பிடும்போது ஆர்கனோ ஹைட்ரோஜெல் காயமடைந்த பகுதிகளை ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் எனத் தெரிவித்தார். இந்த ஜெல்லை பயன்படுத்துபவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து சீக்கிரம் குணமடைவார்கள் என்றும் சென் தெரிவித்தார்.

டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..?

இதுபோன்ற பழக்கழிவுகளில் இருந்து ஆன்டி பாக்டீரியல் ஜெல் உருவாக்குவது குறித்து பேசிய ஆய்வாளர்கள், பழக்கழிவுப் பொருட்கள் மற்றும் ஈஸ்ட்களில் இருந்து உருவாக்கப்படும் ஆன்டி பாக்டீரியல் ஜெல்லின் தயாரிப்பு செலவுகள் மிகக் குறைவானது என்றும் தெரிவித்தனர். வழக்கமாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேண்டேஜ்கள் தாமிர அயனிகள் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகக் கலவைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.



துரியன் பழத்தோலில் இருந்து ஆன்டி பாக்டீரியல் ஜெல் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பேசிய சிங்கப்பூர் வியாபாரி ஒருவர், நாள் ஒன்றுக்கு 1800 கிலோ துரியன் பழங்களை விற்பனை செய்வதாக தெரிவித்தார். இப்போது, இந்த பழத்தின் தோலில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜெல் காரணமாக, கழிவுகள் கூட மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படும் என்பதில் மகிழ்ச்சி எனக் குறிபிட்டார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: