• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கணுமா ? வீட்டிலேயே இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்..

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கணுமா ? வீட்டிலேயே இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த எந்தவொரு வயதினரும் வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். 

 • Share this:
  கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் அனைவருக்கும் ஒரு வித மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.இளைய தலைமுறையினர் வீட்டிலிருந்து வேலை செய்வதில் மும்முரமாக இருந்தாலும், வீட்டிலேயே ஒரு எளிய வொர்க்அவுட்டைக் மேற்கொண்டு அவர்களின் உடற்பயிற்சி வழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.

  ஆனால் வயதானவர்கள் அதிக செயலற்ற நிலையில் இருக்கும்போது அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்காணிக்க முடியாது. கொரோனா பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில் அவர்கள் மருத்துவ சிகிச்சையை புறக்கணித்து வருகின்றனர்.

  இது அவர்களின் இதய ஆரோக்கியத்தின் அபாயத்தை முற்றிலுமாக உயர்த்தக்கூடும். இதய நோயைத் தடுப்பது வாழ்க்கை முறையை மாற்றுவது மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குவதைப் பொறுத்ததாகும். அவ்வாறு இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த எந்தவொரு வயதினரும் வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

  1. டயட் : உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு வழக்கத்தை பின்பற்றுங்கள். குறிப்பாக ஜங்-புட் உணவுகளை சாப்பிடுவதை குறைத்து விட்டு நிறைய பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் சிவப்பு இறைச்சியும் உங்கள் இதயத்திற்கு நல்லது. அதேபோல, போதுமான அளவு தண்ணீரை தவறாமல் குடிக்கவும்.

  2. வழக்கத்தை ஏற்படுத்துதல் : சரியான வழக்கத்தை உருவாக்கி பின்பற்றவும். சரியான நேரங்களில் தூங்குதல் மற்றும் எழுந்திருக்கும் நடைமுறை அதற்கேற்ப வேலை செய்ய உங்கள் உடலை சமப்படுத்த உதவுகிறது. போதுமான இடைவெளிகளை எடுப்பது அல்லது வார இறுதி நாட்களில் ஓய்வெடுப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

  3. சமூகமயமாக்க டிஜிட்டல் பயன்முறையைப் பயன்படுத்தவும் : தனிமைப்படுத்தப்படுவது மனச்சோர்வு உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது உங்கள் இதயத்தையும் பாதிக்கிறது. அந்த சமயங்களில் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் வீடியோ காலில் பேசுங்கள். ஜூம்-மாநாட்டு அழைப்புகளுக்குச் சென்று மெய்நிகர் கற்றல் வகுப்புகளில் சேரலாம்.

  4. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது : புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இது உங்களை நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக்கும்.

  Also Read : உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கீங்களா ? ஆரோக்கியமான வெயிட் லாஸ் சாலட் ரெசிபி இதோ..

  5. உங்கள் எடையைப் அடிக்கடி கவனியுங்கள் : ஆரோக்கியமான எடை மற்றும் பிஎம்ஐ பதிவைப் பராமரிக்கவும். ஆரோக்கியமான உடல் உங்கள் இதயத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மற்றும் பிற நோய்களின் சாத்தியத்தை குறைக்க உதவும்.

  6. உங்கள் உடற்தகுதிக்கான பயிற்சி : எந்தவொரு உடற்பயிற்சியும் உங்கள் ஆரோக்கியத்தை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். ஒரு நாளில் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் அல்லது நடனம் போன்ற உடற்பயிற்சிகளை தினசரி செய்யுங்கள். நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

  7. வேலைக்கு இடையில் இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள் : வேலைகளுக்கு நடுவில் சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்வது உங்கள் மன அழுத்தத்தை நிதானமாகவும், கட்டுப்படுத்தவும் உதவும். இது உங்கள் இதயத்திற்கு நல்லது.   9. பரிந்துரைக்கப்பட்ட மருந்தைப் பின்பற்றுங்கள் : இதய நிலைகள், நீரிழிவு நோய், அதிக பிபி மற்றும் அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகளை கொண்டவர்கள் தங்கள் மருந்துகளைப் சரியான முறையில் பின்பற்றி தொடர வேண்டும்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: