“பெரிய தலைவலியாப் போச்சு” என்று தொல்லை கொடுத்த விஷயங்களுக்கு மக்கள் சலிப்பாகச் சொல்லுவதை கேள்விப்படாத ஆளே இருக்க முடியாது. தலைவலி மனிதர்களை எந்த அளவிற்கு துன்புறுத்துகிறது என்பதை இந்த வாசகமே நன்கு உணர்த்துகிறது.
அப்படி, தலைவலியால் துன்புற்ற 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவரைப் பார்க்க வந்தார். தனக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக தலைவலி இருப்பதாகவும், காலையில் கண்விழிக்கும்போதே தலைவலியுடன்தான் எழுவதாகவும் கூறிய அந்த நபர், “செய்யாத வைத்தியமில்லை, போடாத மாத்திரை இல்லை” என்று சொல்லிக் கொண்டேபோனர். அவர் கூறுவதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர், அதற்காக அவர் மேற்கொண்ட மருத்துவத்தைப் பற்றியும் கேட்டறிந்தார். மேலும், அவரின் வாழ்வியல் முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர், “தினமும் காலையில் எழும்போது எந்தப் பக்கம் தலைவலி அதிகமாக இருக்கும்” என்று கேட்டார் மருத்துவர். “தினமும் ஒரே பக்கம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஏதாவது ஒரு பக்கம் அதிகமாக இருக்கும்” என்று கூறினார் அந்த நபர். “சரி இன்றைக்கு எந்தப் பக்கம் தலை வலிக்கிறது என்று கேட்டார் மருத்துவர்”, “வலதுபுறம்” என்று கூறினார் அவர்.
“சரி, தூங்கும்போது ஃபேன் போட்டு தூங்குறீங்களா?” என்று கேட்டார் மருத்துவர். “ஆமாங்க டாக்டர், தினமும் காத்தாடி போட்டுதான் தூங்குவேன். சீலிங் ஃபேன்” என்று கூறினார். “சரி, இன்று கண்விழிக்கும்போது எந்த பொஸிஷனில் படுத்திருந்தீங்க” என்று கேட்டார் மருத்துவர். “எடது பக்கம் திரும்பி படுத்திருந்தேன்” என்றார்.
“தூங்கும்போது போத்திக்கொண்டு தூங்குவீங்களா” என்றார் மருத்துவர். “ஆமாம், ஆனால் முகத்தை மட்டும் மூட மாட்டேன். முகத்தை மூடினால் மூச்சு முட்டும்” என்றார். “சரி இனிமேல் நீங்கள் தூங்கும்போது உங்கள் காதுகளை துணியால் போர்த்திக் கொண்டு தூங்குங்கள் அல்லது காதில் பஞ்சை வைத்துக் கொண்டு தூங்குங்கள். தூங்கும்போது, காத்து காது வழியாக உள்ளே போகவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மருத்துவர் கூறினார்.
சரி, எனக்கு தலைவலி அதிகமாக இருக்கிறது இப்போது எனக்கு ஊசி போடுங்கள் அல்லது மாத்திரை கொடுக்குங்கள் என்று கூறினார் அந்த நபர். அவருக்கு மாத்திரை ஒன்றை எழுதிக் கொடுத்து, அனுப்பி வைத்தார்.
Muat Read : 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டை பெறலாம்... என்னென்ன ஆவணங்கள் தேவை!
சில நாட்கள் கழித்து, அந்த நபர் மருத்துவரைப் பார்க்க வந்தார். உள்ளே வந்ததும் தனது இரண்டு கரங்களையும் உயர்த்தி அந்த மருத்துவருக்கு நன்றி கூறி கும்பிட்டார். “தனக்கு தலை வலிக்கல்லை” என்று கூறிய அவர், “நீங்கள் கூறியதுபோல போர்வையால் காதுகளை மூடிக்கொண்டு தூங்கினேன். தலைவலி வரவில்லை” என்றார். “உங்களுக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் இனியும், தூங்கும்போது காதுகளில் காற்று போகாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டால் தலைவலி வராமல் தடுத்துவிடலாம்” என்று கூறினார் மருத்துவர். “அட இது தெரியாம போச்சே டாக்டர்... என்று கூறி மீண்டும் ஒருமுறை நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் அந்தநபர். அதன்பின்னர் காதுகளில் காற்று புகாமல் பார்த்துக் கொண்டார். அதன் பின்னர் அவருக்கு தலைவலி வரவில்லை.
Read More : 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் என்ன படிக்கலாம் - மாணவர்களுக்கு ஓர் ஆலோசனை!
நம்மில் சிலர் இதுபோன்ற தலைவலியால் துன்புறுவோம். காதுகளில் காற்று புகாமல் கவனமாகத் தூங்கினால், இந்த வகை தலைவலி வராமல் நம்மால் தடுக்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headache, Health tips