Home /News /lifestyle /

மார்பக புற்றுநோயை இனிமேல் எளிதாக கண்டறியலாம் : உமிழ்நீர் சோதனை மட்டுமே போதுமானது..!

மார்பக புற்றுநோயை இனிமேல் எளிதாக கண்டறியலாம் : உமிழ்நீர் சோதனை மட்டுமே போதுமானது..!

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோயின் அபாயத்தைக் கண்டறிய உதவும் புதிய வழிக்கான இந்த ஆய்வு 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ளது மற்றும் இதில் சுமார் 2,500 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இப்போது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் கண்டறிவது மிகவும் எளிது. அதற்கு ஒரு எளிமையான உமிழ்நீர் சோதனை போதுமாம். இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு விஞ்ஞானிகள் குழு, மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்தை துல்லியமாக கணிக்கக்கூடிய உமிழ்நீர் பரிசோதனையை உருவாக்கியுள்ளது என்று டெய்லி மெயில் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோயின் அபாயத்தைக் கண்டறிய உதவும் புதிய வழிக்கான இந்த ஆய்வு 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ளது மற்றும் இதில் சுமார் 2,500 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 644 பேருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் "புதிய" உமிழ்நீர் பரிசோதனை, உடன் நிலையான மருத்துவ உதவி மற்றும் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர்பான தகவல்கள் மற்றும் மார்பக அடர்த்தியின் அளவீடு போன்றவைகளும் குறிப்பிட்ட ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், 50 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் கரேத் எவன்ஸ், “ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் அனைவரும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால், அது மார்பகப் புற்றுநோய்களில் கால் பகுதியைத் தடுத்து, ஆண்டுக்கு 2,000 பெண்களின் உயிரைக் காப்பாற்றும். அதிக ஆபத்தில் உள்ள இளம் பெண்களுக்கு வருடாந்திர மேமோகிராம்கள் (Mammograms) வழங்கப்பட்டால், அது வருடத்திற்கு நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவும். 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்" என்று கூறி உள்ளார்.



யுகே சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித், இந்த சோதனையை "நம்பிக்கையளிக்கும்" புதிய ஆராய்ச்சி என்று வரவேற்றார். மேலும் "நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க இது போன்ற புதுமையான ஆராய்ச்சிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று அவர் கூறி உள்ளார்.

ஜெனடிக்ஸ் இன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 பெண்களில் ஒருவருக்கு பிஆர்சிஏ1 (BRCA1) அல்லது பிஆர்சிஏ2 (BRCA2) மரபணுக்களில் பிறழ்வுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது அவர்களின் நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம். மேலும் இந்த ஆய்வில், மார்பக புற்றுநோய் மற்றும் பிஆர்சிஏ பிறழ்வு உள்ள ஒன்பது பெண்களில், ஏற்கனவே உள்ள மரபணு சோதனை மூலம் வெறும் மூன்று பேருக்கு மட்டுமே நோயின் இருப்பை கண்டுபிடிக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

யார் யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய கூடாது..?

அதிக மேமோகிராம் ஸ்கிரீனிங் ஆனது அதிக ஆபத்துள்ள பெண்களுக்கு மட்டுமல்ல, குறைந்த ஆபத்துள்ள பெண்களில் ஐந்தில் ஒருவருக்கும் இது தேவை என்றும் இந்த குழு கண்டறிந்துள்ளது. எனவே, 50 வயதிற்குட்பட்ட மேமோகிராம்களுக்கு தகுதி பெறுவதற்கு முன்பே, 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மத்தியில் இந்த புதிய சோதனை அறிமுகப்பட வேண்டும் என்றும் இந்த குழு வாதிகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breast cancer

அடுத்த செய்தி