மோசமான வாழ்க்கைமுறை பழக்கங்கள் நாள்பட்ட நோய்களை அதிகரித்து வருகின்றன. அதில் முக்கியமானது சிறுநீரகக்கோளாறு. இதை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக மாறலாம். எனவே அதை முறையான பழக்கங்கள், உடற்பயிற்சிகள் மூலம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அந்த வகையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன பார்க்கலாம்.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்கள் சிறுநீரக செயல்பாட்டை சேதப்படுத்தும். எனவே அவற்றை முறையாக நிர்வகிக்கப்படாவிட்டாலும் நேரடியாக சிறுநீரகத்தை பாதிக்கும். எனவே, உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் இந்த வாழ்க்கை முறை கோளாறுகளை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
நாள்பட்ட சிறுநீரக நோய்களுடன் தொடர்புடைய சோர்வு, பலவீனம் மற்றும் வலி போன்ற பொதுவான அறிகுறிகளையும் குறைக்கிறது. உடற்பயிற்சி இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளும் சிறுநீரக செயலிழப்புகளைத் தவிர்க்க உதவும். டாக்டர். அசுதோஷ் நிரஞ்சன் (டீன் மற்றும் பொது அறுவை சிகிச்சை பேராசிரியர்) நல்ல சிறுநீரக ஆரோக்கியத்திற்கான சில குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்.
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் (உள்ளே அல்லது வெளியே), பனிச்சறுக்கு, ஏரோபிக் நடனம் அல்லது ஜூம்பா போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
· படிக்கட்டுகளில் ஏறுதல், விறுவிறுப்பான நடைபயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சி ஆரம்பநிலையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
· ஜிம்மில் குறைந்த அளவிலான தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் செய்யலாம்.
சிறுநீரக கற்கள் பிரச்சனையிலிருந்து தப்பிக்க பயனுள்ள டிப்ஸ்..!
· சிறுநீரக நோயாளிகள் அடிக்கடி தசை பலவீனம் மற்றும் விரயம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்,.எனவே பளு தூக்குதல் போன்ற எதிர்ப்பு பயிற்சி இதற்கு உதவும்.
· உங்கள் மூட்டுகள் சீராக இயங்குவதற்கும் உங்கள் முழு அளவிலான இயக்கத்தைப் பாதுகாப்பதற்கும் சில ஸ்ட்ரெச்சஸ்களை செய்யப்படலாம்.
· யோகா ஆசனங்களான கௌமுகாசனம், பவன்முக்தாசனம், உத்தன் பாதசனம், நௌகாசனம் மற்றும் புஜங்காசனம் மற்றும் பிராணாயாமம் போன்றவற்றையும் செய்யலாம்.
இந்த பயிற்சிகள் சில நோயாளிகளின் பிரச்சனைகளை மோசமாக்கும் சிக்கல் இருப்பதால் நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் எச்சரிக்கையுடன் செய்யுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Exercise, Kidney Disease, Kidney Failure