உடலின் இரண்டாவது மூளை என குடலை செல்வது உண்டு. காரணம் நல்வாழ்வு உணர்ச்சி, நோயெதிர்ப்பு அமைப்பு, நாள்பட்ட நோய், தூக்க சுழற்சி மற்றும் உடலில் உள்ள அனைத்து அமைப்புகளுடனும் குடலுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. உங்கள் குடல் நன்றாக இருக்கும் பட்சத்தில் உடலின் பிற பாகங்களும் நன்றாக இருக்கும். மேலும் உணவை ஆற்றலாக மாற்றுவது, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவது போன்ற முக்கியமான வேலைகளை செய்கிறது.
மனித உடலில் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றான குடல் ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். குடல் ஆரோக்கியம் கெடுவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கமும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதுவே பின்னாளில் செரிமான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.
குடல் ஆரோக்கியம் ஏன் முக்கியமானது?
உங்கள் குடல் செரிமானம் முதல் மூளை மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை குடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அது உடல் மூலமாக உங்களுக்கு பல வகையிலும் சிக்கனல் அனுப்புகிறது. ஆரோக்கியமற்ற குடல் உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் வயிற்று அசௌகரியங்கள், சோர்வு, உணவு பசி, தற்செயலான எடை மாற்றங்கள், தோல் பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமை, ஒற்றைத் தலைவலி போன்றவற்றுக்கு காரணமாக அமையும்.
நாங்கள் இந்த கட்டுரையில் ஒரு சில அறிகுறிகள் குடலில் என்ன மாதிரியான பிரச்சனைகளை உங்களுக்கு அறிவிக்க நினைக்கின்றன என்பதைப் பற்றி கொடுத்துள்ளோம்...
நாள்பட்ட வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம் என்ன?
நாள்பட்ட வயிற்றுப்போக்கு, இது உயிரணுக்களுக்கு இடையில் இடைவெளிகளை உருவாக்கி பகுதியளவு செரிமானம் செய்யப்பட்ட உணவு, நச்சுகள் ஆகியவற்றை திசுக்களுக்குள் நுழைய அனுமதிக்கிறது. இது குடலில் வீக்கம் மற்றும் பாக்டீரியா மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
கோடை காலத்தில் லிச்சி பழத்தை ஏன் அதிகம் சாப்பிடணும் தெரியுமா? முக்கியமான 5 காரணங்கள் இதோ..!
இதற்கு சிகிச்சையளிக்க, வீக்கத்தை ஊக்குவிக்கும் உணவுகள் அல்லது ஆல்கஹால், அதிக சர்க்கரை அல்லது அதிக நிறைவுற்ற உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், குடல் ஆரோக்கியத்தை மீண்டும் உருவாக்க உங்கள் உணவில் சத்தான, பதப்படுத்தப்படாத மற்றும் அழற்சி எதிர்ப்பு உணவுகளைச் சேர்க்கவும்.
நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி ஏற்படுவது:
உங்கள் செரிமான மண்டலத்தில் அமிலத்தின் செறிவு அதிகமாக இருப்பதால் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். து மிக வேகமாக சாப்பிடுவது, அதிக காரமான உணவுகள் அல்லது காபி, சாக்லேட்டுகள் அல்லது க்ரீஸ் உணவுகள் போன்ற சில குறிப்பிட்ட உணவுகள் காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனையை தவிர்க்க உணவை சிறிது, சிறிதாக 2 அல்லது 3 மணி நேர இடைவெளிகளில் எடுத்துக்கொள்ளலாம். மேலும் உறங்கச் சென்ற பிறகு பிரச்சனைகளை கொடுக்க கூடிய இரவு உணவுகளை தவிர்ப்பது நல்லது.
எனவே குடல் நலமே உடல் நலம் என்பதை உணர்ந்து சத்தான உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது, வாழ்க்கை முறையை சீராக்கிக் கொள்வது மிகவும் முக்கியமானது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.