முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த 3 இடங்களில் வலி இருக்கிறதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்!

இந்த 3 இடங்களில் வலி இருக்கிறதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்!

கால் வலி

கால் வலி

கொழுப்பு, கொலஸ்டிரால் ஆர்ட்டரிகளின் சுவர்களில் சேர்வதால், ரத்த ஓட்டம் தடைபடும். இந்த நிலைக்கு அதிரோக்ளோரோசிஸ் என்று பெயர். பெரிஃபெரல் நோய் என்பது, கால்களுக்கு இந்த ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஆர்ட்டரிகள் சுருங்குவதைக் குறிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முறையற்ற உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறை இவை இரண்டுமே நாட்பட்ட நோய்கள் மற்றும் தீவிரமான இதய பாதிப்புகளை உண்டாக்கி வருகின்றன. இதில் முக்கியமான பங்கு நாம் சாப்பிடும் உணவில் இருக்கிறது. உடலில் உற்பத்தி ஆனாலும், ஆரோக்கியமான செல்கள் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது இதய நோய்கள் உண்டாகிறது. சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு இருக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

பொதுவாக ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு தனிப்பட்ட அறிகுறிகள் இல்லை. இருப்பினும் உடலும் ஒரு சில இடங்களில் அசௌகரியம் மற்றும் வலி ஏற்படலாம். கொலஸ்ட்ரால் ஆர்ட்டரிகளை பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோயை உண்டாக்கலாம். மேலும், உடலின் குறிப்பிட்ட பாகங்களில் உங்களுக்கு வலி ஏற்பட்டால் உங்கள் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியும்.

பெரிஃபெரல் ஆரட்டரி நோய் :

கொழுப்பு, கொலஸ்டிரால் ஆர்ட்டரிகளின் சுவர்களில் சேர்வதால், ரத்த ஓட்டம் தடைபடும். இந்த நிலைக்கு அதிரோக்ளோரோசிஸ் என்று பெயர். பெரிஃபெரல் நோய் என்பது, கால்களுக்கு இந்த ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஆர்ட்டரிகள் சுருங்குவதைக் குறிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, கைகள் மற்றும் கால்களில் போதிய அளவு ரத்த ஓட்டம் இருக்காது.

அதிக கொலஸ்டிராலால் ஏற்படும் வலி :

அமெரிக்க இதய அசொசியஷன் குறிப்பிட்டுள்ளபடி, உங்களுக்கு அதிக கொலஸ்டிரால் இருக்கும் போது, PAD நோய் எற்படும் அபாயம் உள்ளது. இதனால், உங்களுடைய இடுப்புப் பகுதி, தொடை மற்றும் கெண்டைக் கால் பகுதிகளில் வலி ஏற்படும். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும் போது, நீண்ட தூரம் நடக்கும் போது, படிகள் ஏறும் போது, மேற்கூறிய பகுதிகளில் வலி மற்றும் தசைபிடிப்பு ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் கேன்சர் வருமா..? இந்த 5 பாதிப்புகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

இந்த வலியும் அசௌகரியமும், சில நிமிடங்கள் தான் நீடிக்கும். உடலுக்கு வேலை கொடுக்கும் போது வலி ஏற்படும், ஓய்வாக இருக்கும் போது, நீங்கிவிடும். உடற்பயிற்சி செய்யும் போது, அல்லது உடல் தசைகள் இயங்கும் அளவுக்கு வேலை செய்யும் போது, தசைகளுக்கு அதிக ரத்தம் தேவை. கொலஸ்டிரால் ரத்த ஓட்டத்தை தடை செய்வதால், போதிய ரத்தம் கிடைக்காத தசைகளில் வலி ஏற்படுகிறது. ஓய்வெடுக்கும் போது, இது தானாகவே குறைந்து விடும்.

கொலஸ்டிரால் மூலம் PAD ஏற்படும் அபாயம் இருப்பவர்களுக்கு, கால்களில் வலி, வீக்கம், மரத்து போகும் உணர்வு, காயங்கள் ஆறாமல் இருப்பது, பலவீனம், கால்களில் நிறம் மாறுதல், முடி கொட்டுவது, நகங்கள் உடைவது, கைகளில் வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படலாம்.

கொலஸ்டிரால் அளவைக் குறைப்பது எப்படி?

* வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் கொலஸ்டிரால் அளவைக் குறைத்து நோய்கள் வராமல் தடுக்கும்.

* ட்ரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும்

* சிவப்பு இறைச்சி மற்றும் முழு கொழுப்பு உள்ள பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்

* நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் உள்ள உணவை அதிகம் சாப்பிட வேண்டும்

* நாள் முழுவதும் அமர்ந்தே இருக்காமல், சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்

First published:

Tags: Cholesterol