Home /News /lifestyle /

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்குமோ என சந்தேகமா..? வாய் மற்றும் மூச்சுக்காற்றில் இந்த அறிகுறியை கவனியுங்கள்

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்குமோ என சந்தேகமா..? வாய் மற்றும் மூச்சுக்காற்றில் இந்த அறிகுறியை கவனியுங்கள்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

தற்போது நீரிழிவு நோய்க்கான புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் வாய் மற்றும் மூச்சுக் காற்றில் ஏற்படும் மாறுதல்களை ஒட்டி இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் மாறியுள்ளது. வாழ்க்கைமுறையில் குறைபாடு மற்றும் தவறான உணவுப் பழக்கங்களால் நீரிழிவு நோய் ஏற்பட்டாலும் காலப்போக்கில் இது பல்வேறு ஆபத்துகளையும் உருவாக்கும். கோவிட் தொற்று பாதிப்பை மிகவும் தீவிரமாக்கும் ஒரு இணை நோயாகவும் நீரிழிவு நோய் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே தற்போதைய கோவிட் தொற்று பாதிப்பு நேரத்தில், நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்க வேண்டும், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் மற்றும் நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டவர்கள் சரியான முறையில் மருந்துகள், உணவுக்கட்டுப்பாடு என்று நீரிழிவு நோய்யை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

தற்போது நீரிழிவு நோய்க்கான புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் வாய் மற்றும் மூச்சுக் காற்றில் ஏற்படும் மாறுதல்களை ஒட்டி இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேயோ கிளினிக் கூற்றுப்படி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது வாய்ப்பகுதியில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும் என்று அறியப்படுகிறது. குருகிராமில் உள்ள ஆர்டீமிஸ் மருத்துவமனையின் என்டோகிரைனாலாஜி துறைத் தலைவரான டாக்டர் தீரஜ் கபூர், நீரிழிவு என்பது சிஸ்டமிக் நோய். இது உடலில் இருக்கும் எல்லா பாகங்களையும் உறுப்புகளையும் பாதிக்கும்.

நீரிழிவு நோய் பற்றி பேசும்போது கண்கள் பாதிப்பு, கிட்னி, நரம்புகள் மட்டுமல்லாமல், இனி வாய் மற்றும் சுவாசம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயால் வாய்ப் பகுதியிலும் பிரச்சனைகள் அல்லது அறிகுறிகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது. எனவே வாய் மற்றும் சுவாசத்தில் ஏற்படும் மாற்றங்கள் நீரிழிவு நோயுடன் தொடர்பு உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



ஒரு சிலர் நீரிழிவை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், சற்றென்று எல்லாம் கைமீறி சென்றுவிடும். அவருக்கு யூரின் இன்ஃபெக்சன் அல்லது பற்கள் அல்லது ஈறுகள் அல்லது வாய் பகுதியில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

கொரோனாவிடம் இருந்து நுரையீரலை காப்பாற்றும் சுவாசப் பயிற்சி : செய்வது எப்படி?

மூச்சில் துர்நாற்றம், வாய் துர்நாற்றம் அடிக்கிறதா என்பதையும் பார்க்கவேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது சுவாசம் புத்துணர்ச்சியாக இருக்காது. அது மட்டுமின்றி பற்களில் சிதைவு அல்லது வாய்ப்புண் ஆகியவையும் ஏற்படும்.

டயபீடிக்கீட்டோ அசிடோசிஸ் என்பது கீட்டோன்கள் உருவாவதால் ஏற்படும் அவசரகால டயாபடீஸ் என்று கூறப்படும் ஒரு நோயாகும். இதனால் மூச்சு காற்றில் துர்நாற்றம் வீசும் அல்லது பழம் வாசனை அடிக்கும்.



ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவு 250 முதல் 300 க்கு மேல் அதிகமாகும் போது, அவர்களுக்கு மூச்சுக் காற்றில் பழ வாசனை வீசினால், அந்த நபரின் ரத்தத்தில் கீட்டோன்கள் இருப்பதாக கூறலாம். ஒரு நபருக்குப் பொதுவாக வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவது என்பது மிகவும் கவலைப் படக்கூடிய ஒரு விஷயமாகம்

அறிகுறிகளை சரியாக உணராமல் சரியான சிகிச்சை அளிக்காமல் அப்படியே விடும்போது இதய நோய், பக்கவாதம், கிட்னி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகலாம். ‌‌இதில் சரியான நோயறிதல் மற்றும் தடுப்பு முறை ஆகியவைதான் நீரிழிவை பொருத்தவரை இந்திய மருத்துவத் துறையில் மிகப் பெரும் சவாலாக இருக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Health tips

அடுத்த செய்தி