Home /News /lifestyle /

அதிக நேரம் தூங்குவோருக்கு காத்திருக்கு அபாயம்... இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

அதிக நேரம் தூங்குவோருக்கு காத்திருக்கு அபாயம்... இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

தூக்கம்

தூக்கம்

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு“ என்று சொல்வதற்கு ஏற்ப, அளவுக்கு மீறி தூங்குபவர்களுக்கு பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இரவில் 9 மணி நேரத்திற்கு மேலாக தூங்கும் நபர்களுக்கு இதய நோய், நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே அளவுக்கு மீறி தூங்குவதை நாம் உடனடியாக நிறுத்தி கொள்ளவேண்டும்.

ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நல்ல தூக்கம் அவசியம் என்பார்கள். பெரியவர்களாக இருந்தால் சராசரியாக இரவில் 7-8 மணி நேரமும், குழந்தைகளாக இருந்தால் 10 மணி நேரத்திற்கு மேலாக தூக்கம் என்பது அவசியம் இருக்க வேண்டும். அப்போது தான் மன அழுத்தம் இல்லாமல் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு“ என்று சொல்வதற்கு ஏற்ப, அளவுக்கு மீறி தூங்குபவர்களுக்கு பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுகிறது.

குறிப்பாக இரவில் 9 மணி நேரத்திற்கு மேலாக தூங்கும் நபர்களுக்கு இதய நோய், நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், வேறு என்னென்ன பிரச்சனைகளையெல்லாம் நாம் சந்திக்க நேரிடும் என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்வோம்.

அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்:

முதுகுவலி:

நம்மில் பலருக்கு தூங்கி எழும் போது, பொதுவாக முதுகுவலியும் சேர்ந்துவரக்கூடும். இந்த வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான செயலாகும். பொதுவாக ஒருவர் மெத்தையில் நீண்ட நேரம் ஓய்வெடுக்கும் போது உங்களது தசைகள் அனைத்தும் சோர்வாகும் போது முதுகுவலி பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதனை சரிசெய்ய பிசியோதெரபி போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.



ஆனால் இதனையெல்லாம் மேற்கொள்ளாமல் எப்போதும் வலியினால் சும்மா படுத்துக்கிடப்பது என்பது உங்களது உடல்நலத்தைப்பெரிதும் பாதிக்கும். எனவே முதுகுவலி உள்ளவர்கள் அதிக நேரம் தூங்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பக்கவிளைவு மூளைகளில் உள்ள நரம்புக்கடத்தியைப் பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

“நமக்கு அஜீரணம் தானே“ என அலட்சியமாக இருக்காதீங்க... அது மாரடைப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம்

மன அழுத்தம் :

வாழ்க்கையில் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக தூக்கமில்லாத நேரத்தில் பல விஷயங்கள் குறித்து யோசித்து மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பொதுவாக இதுப்போன்ற மன அழுத்தம் உள்ளவர்களில் தோராயமாக 15 சதவீத நபர்கள் அதிகமான தூங்குவதன் காரணமாகத் தான் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிக நேரம் தூங்குவதும் மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது.



நீரிழிவு நோய்:

அதிக நேரம் தூங்கி எழும் போது, அந்நாள் முழுவதும் நாம் சோர்வாக இருப்பது போன்று உணர்வோம். மேலும் உடலில் குறைவான ஆற்றல் இருக்கும் சமயத்தில் தேவையற்ற உணவுகளைச் சாப்பிடும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்கிறது. எனவே முடிந்தவரை ஆரோக்கியமான தூக்க சுழற்சி முறையை நாம் பராமரிப்பது அவசியமான ஒன்று.

இந்த 3 இலை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்..?

உடல் பருமன் அதிகரிப்பு:

அதிக நேரம் தூங்குவதால் உடல் எடையானது அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறுது. எனவே தினமும் 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 9-10 மணி நேரம் தூங்குபவர்கள் ஆறு ஆண்டு காலத்தில் 21% மக்களின் எடை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

தலைவலி:

அதிக நேரம் தூங்கும் போது உடலின் மனநிலை மற்றும் தூக்கத்தை ஒழுங்குப்படுத்தும் செரோடோனின் அளவு குறைகிறது. எனவே செரோடோனினஇ அளவு சமநிலை இல்லாத போது ஒற்றைத்தலைவலி மற்றும் தலைவலி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.



சோர்வு:

அதிக தூக்கம் உங்களை சோர்வடைய செய்யும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. குறிப்பாக, இரவில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்கள் எழுந்திருப்பதில் சிரமப்படுகிறார்கள். இதோடு அவர்கள் பகலில் சோர்வாகவும் சோம்பலாகவும் இருப்பார்கள். எனவே நம்முடைய வாழ்க்கையில் அதிக நேரம் தூங்குவதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sleep

அடுத்த செய்தி