Home /News /lifestyle /

நீண்ட கால ஸ்டீராய்டு பயன்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைப்பது எப்படி..?

நீண்ட கால ஸ்டீராய்டு பயன்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைப்பது எப்படி..?

காட்சி படம்

காட்சி படம்

Side Effects Of Steroid Use : ஸ்டீராய்டுகளின் நீண்டகால பயன்பாடு உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு பயன்படுத்தி, அதனால் ஏற்பட்ட பல பின்விளைவுகள் சலசலப்புக்கு வழிவகுத்தது. மேலும் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளை பயன்படுத்தியது கடும் சுகாதார சவால்களை ஏற்படுத்தியது.

கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஸ்டீராய்டு பயன்பாடு பிரபலமடையவில்லை. மாறாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டுகளை பயன்படுத்தியதால் கடும் விளைவுகள் முதல் பூஞ்சை தொற்று வரை பல பக்கவிளைவுகள் ஏற்பட்டன. எனினும் ஸ்டீராய்டு மருத்துவ துறையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலின் பாதுகாப்பு அமைப்பு சரியாக செயல்படாத நிலை மற்றும் திசு சேதத்தை ஏற்படுத்தும் பல மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க ஸ்டீராய்டு பயன்படுகிறது.

பிரபல நுரையீரல் நிபுணர் டாக்டர். சுனில் குமார் பேசுகையில், ஸ்டீராய்டுகள் (கார்டிகோஸ்டீராய்டுகள்) என்பது பலவித மருத்துவ நிலைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஆகும். கடும் ஆஸ்துமா, நுரையீரல் நோய், சுவாச கோளாறு நோய்க்குறி (RDS) மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) போன்ற பல நுரையீரல் நிலைகள் உள்ளவர்களுக்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் ஸ்டீராய்டுகளும் அடங்கும்.

தவிர இதய தசை வீக்கம், மூளைக்காய்ச்சல், வாஸ்குலிடிஸ், மூட்டுவலி, மயோசிடிஸ், டெர்மடிடிஸ், அழற்சி குடல் நோய்கள் மற்றும் சில புற்றுநோய்கள் கூட ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் என்கிறார்.பொதுவாக குறைவான பக்க விளைவுகளுக்காக ஸ்டீராய்டுகள் குறுகிய கால பயன்பாட்டிற்காக பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் ஸ்டீராய்டுகளின் அதிகப்படியான பயன்பாடு அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.



நீண்ட கால ஸ்டீராய்டு பயன்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளை எவ்வாறு குறைப்பது.? ஸ்டீராய்டுகளின் நீண்டகால பயன்பாடு உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கலாம். அதிக அளவு ஸ்டீராய்டு எடுத்து கொள்பவர் என்றால் பக்கவிளைவுகளை சரி பார்க்க உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். நீடித்த பயன்பாட்டின் சாத்தியமான ஆபத்துகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும். குறைந்த அளவு ஆபத்துடன் (பக்கவிளைவு), அதிக நன்மைகளைப் பெறுவதே இந்த ஸ்டீராய்டு மருந்துகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

also read : வயதானவர்கள் இதை செய்தால் போதும்! புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 61% குறைக்குமாம்..

கார்டிகோஸ்டிராய்டு சிகிச்சையை தொடங்கும் போது குறைந்த அளவு அல்லது குறுகிய காலத்திற்கு பயன்படுத்துதல், வாய்வழியே கார்டிகோஸ்டீராய்டுகளை உட்கொள்வது பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் சுனில் குமார். அதே போல நீண்ட கால கார்டிகோஸ்டீராய்டு சிகிச்சை ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கலை ஏற்படுத்த கூடும் என்பதால், எலும்புகளை பாதுகாக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். டோஸேஜை படிப்படியாகக் குறைக்க உங்கள் மருத்துவர்களைக் கேட்கலாம்.



ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை மதிப்பிட bone ஸ்கேன் (DEXA), வழக்கமான சர்க்கரை பரிசோதனை மற்றும் நீரிழிவு நோய்க்கான HbA1c டெஸ்ட் உள்ளிட்டவற்றை சீரான இடைவெளியில் மேற்கொள்ளவும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். நீண்டகால ஸ்டீராய்டு பயன்பாட்டின் அபாயத்தை குறைக்க ஆரோக்கியமான சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை தவறாமல் பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

also read : இதய பாதிப்பை உணர்த்தும் இந்த அறிகுறிகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்..!



நீண்டகால ஸ்டீராய்டு பயன்பாட்டின் பக்கவிளைவுகள்..

நீரிழிவு, கண்புரை, ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு அடர்த்தி இழப்பு) அல்லது தொற்று ஆகியவற்றின் அபாயத்தை நீண்டகால ஸ்டீராய்டு பயன்பாடு அதிகரிக்கலாம். தவிர உடல் பருமன். தோல் மெலிதல், முடி கொட்டுதல், இரைப்பை அழற்சி, இரைப்பை புண்கள், மனநிலை மாற்றங்கள் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல், அவாஸ்குலா நெக்ரோசிஸ் உள்ளிட்ட பல பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Corona, Health, Steroids

அடுத்த செய்தி