"இதெல்லாம் ஹெர்பெஸ் நோய் அறிகுறிகள்"- முன்னெச்சரிக்கை பதிவு!

ஒருமுறை ஹெர்பெஸ் நோய் தொற்று ஏற்பட்டவருக்கு அதனை அவரது உடலில் இருந்து நீக்குவது மிகவும் கடினம்.

ஒருமுறை ஹெர்பெஸ் நோய் தொற்று ஏற்பட்டவருக்கு அதனை அவரது உடலில் இருந்து நீக்குவது மிகவும் கடினம்.

  • Share this:
அக்கி எனப்படும் ஹெர்பெஸ் நோய் ஒரு தொற்று நோய் வகையாகும். இது பெரும்பாலும் வாய் சுற்றி உள்ள பகுதிகளில் ஏற்படும். ஆனால் உடலில் பிற பகுதிகளிலும் ஏற்படலாம். இதனால் வலி மிகுந்த புண்களை ஏற்படுத்தும். இதனை இரண்டு வகை ஹெர்பெஸ்களாக பிரிக்கலாம்.

ஓரல் ஹெர்பெஸ்:

முகம் அல்லது வாயில் ஏற்படக் கூடியது. இதனால் சிறிய புண்கள் அல்லது காய்ச்சல் கொப்பளங்கள் ஏற்படலாம். சில நேரங்களில் தொண்டை புண் ஏற்படும்.

ஜெனிட்டல் ஹெர்பெஸ்:

இது உடலுறவு கொள்ளும் போது பரவக் கூடியது. இது குறைவான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இதனால் சிறிய புண்கள் ஏற்படும். அவை இரண்டு அல்லது நான்கு வாரங்களில் சரியாகிவிடும். இது ஏற்படும் முன் ஒருவருக்கு கூச்ச உணர்வோ வலியோ ஏற்படும். இந்த தொற்று குழந்தை பிறக்கும் போது குழந்தைக்கும் எளிதில் பரவும் என கூறுகின்றனர்.

நோய் ஏற்படுவதற்கான காரணம்:

நோய் தொற்று உள்ளவருடன் தொடர்பில் இருக்கும்போது பரவுகிறது. ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்ட பிறகு நரம்பு செல்கள் மூலம் உடலுக்குள் நுழைந்து ஒவரது உடலில் வாழ்நாள் முழுக்க இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சூரிய ஒளி படுதல் அல்லது மன அழுத்தம் ஆகிய காரணங்களால் இது ஏற்படக் கூடும்.

அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்:

ஹெர்பெஸ் நோய் தொற்று ஏற்படும் பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் இருக்காது. சொறி அல்லது புண் போன்ற அடையாளம் இருக்கும்.

ஒரு சிலருக்கு தலைவலி, காய்ச்சல், தசைகளில் வலி உள்ளிட்ட தீவிர பாதிப்பு ஏற்படக் கூடும். ஆனால் பொதுவாக முகம் மற்றும் வாயில் சேதத்தை ஏற்படுத்தும். சிலருக்கு கண்களை பாதிக்கக் கூடியதாக இருக்கும். சிலருக்கு மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக உள்ள புதிதாக பிறந்த குழந்தை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், எயிட்ஸ் உள்ளவர்களுக்கு இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். அல்சைமர், பைபோலர் டிஸ்ஸார்டர் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடும். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மரபணு சார்ந்து அது தீவிரமாக மாறலாம்.

ஹெர்பெஸ் சிம்பிளெக்ஸ் வைரஸ் (Herpes Simplex Virus)ல் இரண்டு வகையுள்ளன.

HSV-1 வகையானது வாய், தொண்டை, முகம், கண், மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்

HSV-2 வகையானது முதன்மை அனோஜெனிட்டல் தொற்றை ஏற்படுத்தக்கூடும்.

ஓரோஃபேசியல் ஹெர்பெஸ் ஆனது நோய் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவரை பரிசோனை செய்வதன் மூலம் அறியலாம். ஆனால் அசாதாரணமான அறிகுறிகள் உள்ள பெரியவர்களிடம் நோய் பாதிப்பை கண்டறிவது கடினம். மேலும், பொதுவான அறிகுறிகள் இல்லாததால் ஜெனிட்டல் ஹெர்பெஸை கண்டறிவது மிகக் கடினம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்காத்துக் கொள்வது எப்படி ?

ஒருமுறை ஹெர்பெஸ் நோய் தொற்று ஏற்பட்டவருக்கு அதனை அவரது உடலில் இருந்து நீக்குவது மிகவும் கடினம். தற்காத்துக்கொள்வது ஒன்றே வழி.

நோய் தொற்று உள்ளவர்களுடன் எந்த முறையிலும் உடலுறவு கொள்வதை தவிர்ப்பது நல்லது

உடலுறவு கொள்ளும்போது காண்டம் பயன்படுத்துவது சிறந்தது

நோய் பாதித்தவர் ஆண்டிவைரல் மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது நோய் பரவுவதைத் தடுக்கும்

பேராசிட்டமல் Paracetamol (acetaminophen) மற்றும் topical lidocaine ஆகியவற்றை நோய் அறிகுறி உள்ளவர்கள் பயன்படுத்தலாம். Aciclovir, valaciclovir போன்ற ஆண்டிவைரஸ் மருந்துகளை எடுத்துக்கொண்டால் அறிகுறிகள் கொண்ட நோய் தொற்றின் பாதிப்பை குறைக்க உதவும்.
Published by:Archana R
First published: