• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு இந்த அறிகுறிகள் இருக்குமாம்

கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு இந்த அறிகுறிகள் இருக்குமாம்

காட்சி படம்

காட்சி படம்

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா ?

  • Share this:
கொரோனா தொற்றின் தீவிரம் நாடு முழுவதும் பரவலாக குறைந்து வரும் நிலையில், மக்கள் மூன்றாம் அலையை நினைத்து பீதியில் உள்ளனர். இதனால் பெரும்பாலான மக்கள் அரசு அறிவுறுத்தி வரும் படி, தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்தி கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் 70 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ள நிலையில், இதில் 15 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசியையும் போட்டு கொண்டு உள்ளனர். கோவிட் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்தே அதன் பக்கவிளைவுகள் பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என கூறப்பட்ட அரிதான நரம்பியல் கோளாறு மற்றும் ரத்தம் உறைதலில் சிக்கல் உள்ளிட்டவை மக்களிடையே தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கத்தை ஏற்படுத்தின. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை (கோவிஷீல்ட்) போட்டு கொள்வது பாதுகாப்பானது தான், அபாயம் ஏதும் இல்லை என இந்திய மருத்துவ அறிவியல் கழகம் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, நாட்டில் தற்போது பெரும்பாலும் கோவிஷீல்ட் தடுப்பூசியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வழக்கமான தடுப்பூசிகள் பெரும்பாலான நேரங்களில் லேசான காய்ச்சல் உள்ளிட்ட சிறிய பக்கவிளைவுகளை வெளிக்காட்டும். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு உடல்வலி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், சமீபத்திய அறிக்கை ஒன்று இந்த தடுப்பூசி பல புதிய அறிகுறி அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும் என கூறி இருக்கிறது. அதிக மக்கள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி வருவதால் புதிய பக்க விளைவுகள் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது.

மேல் கை மற்றும் கால்களில் வலி:

தடுப்பூசி எடுத்து கொள்வதால் ஏற்படும் என்று வரையறுக்கப்பட்ட பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்றாலும், கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டு கொண்டவர்களில் சிலர் ஆர்ம்ஸ்களிலும், கால்களிலும் வலி இருப்பதாக கூறி இருக்கிறார்கள். பெரியளவில் வலி இல்லாவிட்டால்இது ஒரு சிறிய பக்கவிளைவாக இருக்க கூடும் என்றாலும் வலியின் தீவிரம் அதிகரித்து காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட சிலர் ஒரு கால் மூட்டில் மட்டுமே வலி அதிகமாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அப்படி இருந்தால் மருத்துவரை பார்ப்பது நல்லது.

வைரஸ் காய்ச்சல் போன்றே சிலஅறிகுறிகள்:

பொதுவாக தடுப்பூசிகள் தடுப்பூசிகள் காய்ச்சல், உடல் வலி, சளி உள்ளிட்ட சில பக்கவிளைவுகளை வெளிப்படுத்தும் என்றாலும், இந்த அறிகுறிகளை எல்லோரும் அனுபவிப்பதில்லை. இதனிடையே ஐரோப்பிய மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மூக்கு ஒழுகும் மற்றும் மூக்கை பாதிக்கும் சில அறிகுறிகள் மற்றும் தும்மல் உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த அறிகுறிகள் தடுப்பூசி எடுப்பதற்கு முன்பு கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

Also read : டீனேஜர்ஸ் இடையே அதிகமாக காணப்படும் தொற்று இதுதான்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

குமட்டல் மற்றும் வாந்தி:

கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு சிலருக்கு வயிற்றுப் பிடிப்புகளுடன்கூடிய குமட்டல் உணர்வு அதனை தொடர்ந்து வாந்தி உள்ளிட்ட பக்க விளைவுகள் சேர்ந்து கொள்ளலாம். இத்தகைய செரிமான பக்க விளைவுகள் முன்பு பிற தடுப்பூசிகளிலும் காணப்பட்டாலும், கோவிஷீல்ட் தடுப்பூசியை பொறுத்த வரை தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு பக்கவிளைவாக சிலருக்கு வாந்தி ஏற்படுவதை காண முடிவதாக நிபுணர்கள் கூறி இருக்கின்றனர்.

பசியின்மை:

சிலர் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு பசியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். 2 முதல் 1 வாரம் வரை பசியின்மையை மக்கள் உணர்வது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்து கொள்வது இந்த அறிகுறியைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், இது பொதுவான பக்க விளைவு அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: