Home /News /lifestyle /

தோள்பட்டை வலியை ஏன் புறக்கணிக்க கூடாது? நிபுணர்களின் அறிவுறுத்தல்கள்

தோள்பட்டை வலியை ஏன் புறக்கணிக்க கூடாது? நிபுணர்களின் அறிவுறுத்தல்கள்

தோள்பட்டை வலி

தோள்பட்டை வலி

Shoulder Pain | மூட்டுகள் அல்லது தசைகளில் ஏற்படும் எந்த வித வலியையும் நீண்ட நாள் வளர விட கூடாது. தாங்க கூடிய அளவில் வலி இருக்கும் போதே மருத்துவர்களிடம் சென்று உடனடியாக பரிசோதித்து கொள்ள வேண்டும்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தோள்பட்டை வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஒருவேளை நீங்கள் இரவு ஒரு மோசமான பொஷிசனில் தூங்கியிருக்கலாம், தீவிரமான வொர்க்அவுட்டின் தோள்பட்டையில் காயப்பட்டிருக்கலாம் அல்லது வயது காரணிகளால் தோள்பட்டையில் வலியை அனுபவிக்க நேரிடலாம்.

    சிலருக்கு தோள்பட்டை வலி என்பது தினசரி பிரச்சனையாக இருக்க கூடும். திடீரென வலிக்க ஆரம்பித்து சில மணிநேரங்களில் தானே சரியாகி விட கூடும். ஆனால் சிலர் இது போன்ற தோள்பட்டை வலியை சீரியசாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் எந்த ஒரு தோள்பட்டை வலியையும் தீவிரமற்ற ஒன்று என குறைவாக எடை போட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மூட்டுகள் அல்லது தசைகளில் ஏற்படும் எந்த வித வலியையும் நீண்ட நாள் வளர விட கூடாது. தாங்க கூடிய அளவில் வலி இருக்கும் போதே மருத்துவர்களிடம் சென்று உடனடியாக பரிசோதித்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள். வலியானது தீவிரமாகும் நிலையில் தோள்பட்டையிலிருந்து கை பகுதிகளுக்கு பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

    தோள்பட்டை வலி

    உரிய மருத்துவரிடம் பரிசோதிக்கப்படாத வரை தோள்பட்டை வலி என்பது எதையும் குறிக்கும். தோள்களில் ஏற்படும் நாள்பட்ட வலி குறித்து பிரபல ஆர்த்ரோஸ்கோபி ஆலோசகர் பூர்ணச்சந்திர தேஜஸ்வி கூறுகையில், 2 நாட்கள் வரை தோள்பட்டையில் நீடிக்கும் வலி நீங்கள் தவறான பொசிஷனில் தூங்கியிருப்பதை குறிக்கலாம். ஆனால் வலி நீடித்தால் தீவிரமான ஒன்றை குறிக்க கூடும்.

    Read More : கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.. ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் போன்ற அபாயங்கள் அதிகரிக்க காரணம் இதுதான்


    ஒரு குறிப்பிட்ட அளவிலான இயக்கம் இருந்தால், தசைநாண் அழற்சி, புர்சிடிஸ், எலும்பு முறிவு, மூட்டுவலி அல்லது தோள்பட்டை நரம்புகளுக்கு எதிரான அழுத்தும் உள்ளிட்டவை வலி உணர்வுக்கு காரணமாக இருக்கலாம். Frozen shoulder எனப்படும் தோள்பட்டை மூட்டில் ஏற்படும் விறைப்பு மற்றும் வலியால் வகைப்படுத்தப்படும் நிலைக்கு உடல்செயல்பாடுகள் இன்றி உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை காரணம் என்றார். இந்த நிலையில் தோள்பட்டை வலியோடு சேர்த்து கையை முழுமையாக தூக்க இயலாது.



    என்ன காரணம்?

    பலரது தோள்பட்டை மூட்டு வலிக்கு (shoulder joint pain) அதிகப்படியான உடல் உழைப்பு முக்கிய காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். இதுதவிர தசைநார் அழற்சி அல்லது அதிக பயன்பாட்டினால் ஏற்படும் அழற்சி, மருத்துவ ரீதியாக சரி செய்யப்பட வேண்டிய தோள்பட்டை மூட்டின் உறுதியற்ற தன்மை, தோள்பட்டை இடப்பெயர்வு, காலர்போன் அல்லது கை எலும்பு முறிவுகள், கிழிந்த தசைநாண்கள் மற்றும் கீல்வாதம் உள்ளிட்டவையும் காரணமாக இருக்கின்றன. தோள்பட்டை வலிக்கான மற்றொரு பொதுவான காரணம், கட்டுப்பாடற்ற நீரிழிவு.

    தோள்பட்டை வலியை ஏன் அலட்சியம் செய்ய கூடாது?

    தோள்பட்டை வலி என்பது பொதுவான பிரச்சனையாகும், இது பொது மக்களில் 4% முதல் 26% வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பகால சிகிச்சை மற்றும் நோயறிதல் உள்ளிட்டவை தோள்பட்டை வலிக்கு சிகிச்சையளிக்க மற்றும் விரைவாக குணப்படுத்த சிறந்த வழி. உடனடியாக கவனிக்காவிட்டால் தோள்பட்டையில் நீண்ட கால காயங்கள் ஏற்படலாம். நமது தோள்பட்டை மூட்டுகள் எழுத, டைப் செய்ய, பொருட்களை இழுக்க, தூக்க, எடுத்து செல்ல என பல செயல்களை செய்ய உதவுகிறது. எனவே முடிந்தவரை நம் தோள்பட்டைகளை நெகிழ்வாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். தோள்பட்டை வலியை புறக்கணிக்க கூடாததற்கு முக்கிய காரணம், உரிய நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது மோசமடைய கூடும்.

    தோள்பட்டை வலி ஒரு பொதுவான பிரச்சனையாக காணப்படும் பல நோய்கள் குறித்து குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் (மூட்டுகளின் முறிவை ஏற்படுத்தும் நோய்), ரொட்டேட்டர் கஃப் இஞ்சூரி, ரூமேட்டாய்டு ஆர்த்ரைடிஸ் (அழற்சி மூட்டு நோய்), புர்சிடிஸ் (மூட்டு வீக்கம்) உள்ளிட்டவை தோள்பட்டை ஜாயின்ட் வலியுடன் தொடங்கும் சில நோய்கள். தவிர ஒருவர் தோள்பட்டையில் அதிக வலியை அனுபவித்தால், அது முறிந்த தசைநார், தோள்பட்டை விறைப்பு, சுளுக்கு, இடம்பெயர் தோள்பட்டை, உடைந்த தோள்பட்டை மற்றும் உடைந்த கை எலும்பு காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Health, Lifestyle, Shoulder Pain

    அடுத்த செய்தி