முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா..? மருத்துவர்களின் விளக்கம்

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா..? மருத்துவர்களின் விளக்கம்

லேசான உடற்பயிற்சிகளைச் செய்யவும்: வயிறு உப்புசத்தை உணரும் போது ​​நடைபயிற்சி அல்லது யோகா போன்ற லேசான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் உடலை நகர்த்துவதன் வழியாக வயிற்று தசைகளை சுருக்கி, இரைப்பைக் குழாயிலிருந்து அதிகப்படியான வாயுவை வெளியேற்றும். இது சில நிமிடங்களில் உங்களை இலகுவாகவும் நிதானமாகவும் உணர வைக்கும்.

லேசான உடற்பயிற்சிகளைச் செய்யவும்: வயிறு உப்புசத்தை உணரும் போது ​​நடைபயிற்சி அல்லது யோகா போன்ற லேசான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் உடலை நகர்த்துவதன் வழியாக வயிற்று தசைகளை சுருக்கி, இரைப்பைக் குழாயிலிருந்து அதிகப்படியான வாயுவை வெளியேற்றும். இது சில நிமிடங்களில் உங்களை இலகுவாகவும் நிதானமாகவும் உணர வைக்கும்.

பெண்களுக்கும் மாதவிடாய் சுழற்சியின் போது வலி ஏற்படாது. சிலருக்கு குறைந்த அளவிலேயே வலி உண்டாகும். இத்தகைய பெண்கள் அதிக தாக்கம் உள்ள உடற்பயிற்சிகளைத் தவிர்த்து, எளிமையான, சுலபமாக செய்யக்கூடிய பயிற்சிகளை கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். சிலருக்கு தாங்க முடியாத வலி, சில தீவிரமான உடல் சோர்வு, மேலும் சிலருக்கு அடிக்கடி மன நிலையில் மாற்றம் ஆகியவை ஏற்படும். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது மாதவிடாய் வலியை குறைக்க உதவும். ஆனால், மாதவிடாய் ஏற்படும் போது உடற்பயிற்சி செய்யலாமா என்ற சந்தேகம் பல பெண்களுக்கு உண்டு. அதைப் பற்றி சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளார் ஊட்டச்சத்து நிபுணரான நான்சி தேஹ்ரா.

“மாதவிடாய் காலத்தில் PMS என்ற மாதவிடாய் ஏற்படும் முன்பான நாட்களில் ஏற்படும் அறிகுறிகள், உதிரப் போக்கு, மற்றும் வழியைத் தாங்கிக் கொள்ளும் திறன் ஆகியவை ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.

யாரெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம் - யாரெல்லாம் செய்யக்கூடாது

உடற்பயிற்சி செய்யலாமா செய்யக்கூடாதா என்பது PMS தாக்கத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. எல்லா பெண்களுக்கும் மாதவிடாய் சுழற்சியின் போது வலி ஏற்படாது. சிலருக்கு குறைந்த அளவிலேயே வலி உண்டாகும். இத்தகைய பெண்கள் அதிக தாக்கம் உள்ள உடற்பயிற்சிகளைத் தவிர்த்து, எளிமையான, சுலபமாக செய்யக்கூடிய பயிற்சிகளை கொள்ளலாம். PMS ஆல் அதிக பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள், மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆனால், உடலை ரிலாக்ஸ் செய்ய உதவும் எளிமையான யோகா பயிற்சிகள், மற்றும் ஸ்ட்ரெட்சிங் ஆகியவற்றை செய்யலாம்.

மாதவிடாய் நாட்களில் என்ன பயற்சிகளை செய்யலாம்

உடற்பயிற்சி என்றாலே, ஜிம்மில் கடினமான பயிற்சிகளை மேற்கொள்வதோ போலவோ, பளு தூக்குதல், ஸ்கிப்பிங், நீண்ட தூரம் ரன்னிங் செய்வது போலவோ தான் உடனடியாக நினைக்கத் தோன்றும். ஆனால், மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் பிற அசௌகரியங்களை குறைக்க, ஆற்றலை அதிகரிக்க நடை பயிற்சி, சைக்ளிங், ஸ்ட்ரெட்சிங் ஆகியவற்றை செய்யலாம். குறைந்தது 20 நிமிட நடை பயிற்சி, இடுப்பு மற்றும் கீழ் முதுகுப் பகுதி ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், ஆகியவை வலியை குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிடக் கூடாத 7 வகை உணவுகளை தெரிந்துகொள்ளுங்கள்

மேலே உள்ளது பொதுவான பரிந்துரைகள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் முழுவதுமாக ஓய்வெடுக்க நினைப்பார்கள். சில பெண்களுக்கு எவ்வளவு தீவிரமான வலி இருந்தாலும் தாங்கிக்கொள்ளும் திறன் உள்ளது. ஒரு சிலருக்கு கடினமான செயல்பாடுகளால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே, உங்கள் உடலுக்கும், மனதுக்கும் என்ன தேவைப்படுகிறதோ அதை கவனித்து அதற்கு ஏற்றார் போல செயல்படுங்கள்.

பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது கிடைக்கும் பலன்கள் மாதவிடாய் காலத்திலும் அதிக பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கி கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும் என்றும், மாதவிடாய் வலி குறையும் மற்றும் மாதவிடாய் நாட்களை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்றும் நிபுணர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Exercise, Periods, Periods pain, Workout