சாப்பிட்ட உணவு செரிமானம் அடையவில்லையா..? உடனே இதை தண்ணீரில் கொதிக்க வெச்சு குடிங்க... ஷில்பா ஷெட்டி அட்வைஸ்..!

ஷில்பா ஷெட்டி

இந்த தண்ணீர் செரிமானம் மட்டுமன்றி குடல் அழற்சி, வயிற்று கோளாறு , நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் உதவும் எனக்கூறியுள்ளார்.

 • Share this:
  உடலை பராமரிப்பதிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஷில்பா ஷெட்டியை அடித்துக்கொள்ள யராலும் முடியாது. அவருடைய சோஷியல் மீடியா ஆக்டிவிடீஸ் கூட யோகா, ஹெல்தி ட்ரிங்க்ஸ், உடற்பயிற்சி, ஹெல்தி உணவு இப்படியாகத்தான் இருக்கும். அவருடைய ஃபாலோவர்களுக்கு அவை ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் சாப்பிட்ட உணவு செரிமானம் அடையவில்லை எனில் இந்த நீரை பருகுங்கள் என ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அவை என்ன பார்க்கலாம்.

  அந்த வீடியோவில் தண்ணீர், ஒரு கப் ஓமம் , 1 கப் சீரகம், 1 கப் சோம்பு இவை அணைந்த்தையும் ஒரு கடாயில் போட்டு சூடு பதத்திற்கு வறுத்துக்கொள்ளுங்கள். கருகிவிடக்கூடாது. பின் அவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

  தற்போது ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். கொதிநிலை வந்ததும் அதிலிருந்து ஒரு ஸ்பூன் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள். பின் வடிகட்டி  அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து பருகுங்கள்.
  அவ்வளவுதான் இந்த பானம். மீதமிருக்கும் பொடியை டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் வீதம் பயன்படுத்துங்கள். இதுதான் ஷில்பா ஷெட்டி சொன்ன அந்த செரிமான பானம்.

  இந்த தண்ணீர் செரிமானம் மட்டுமன்றி குடல் அழற்சி, வயிற்று கோளாறு , நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் உதவும் எனக்கூறியுள்ளார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: