Home /News /lifestyle /

பாலியல் தொற்று நோயால் ஏற்படும் ’PID பாதிப்பு’ கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்குமா..?

பாலியல் தொற்று நோயால் ஏற்படும் ’PID பாதிப்பு’ கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்குமா..?

பெண்கள் ஆரோக்கியம்

பெண்கள் ஆரோக்கியம்

பாலியல் தொற்று நோயால் தான் பெல்விக் அழற்சி நோய் உண்டாகிறது என்பதால் பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது நோய் தொற்று பாதித்த நபருடன் உடலுறவில் ஈடுபடுவது, ஒன்றுக்கும் ஏற்பட்ட நபர்களுடன் பாலியல் உடலுறவு ஆகியவைதான் காரணமாக இருக்கிறது.

கருத்தரிப்பதில் சிக்கல் எதிர்கொள்ளும் பெண்களுக்கு PID எனப்படும் pelvic inflammatory disease தான் முக்கிய காரணமாக காணப்படுகிறது. இதனால், ஐந்தில் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பாலியல் நோய்த் தொற்றால் ஏற்படக்கூடிய PID என்பதன் அறிகுறிகள் மற்றும் தீர்வு என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பெண்ணுக்கு எப்போது கரு உருவாவதில் சிக்கல் ஏற்படுகிறது என்பதை நிர்ணயிக்க முடியும்?

இன்ஃபெர்டிலிட்டி எனப்படும் கருவுறுதலில் ஏற்படும் பிரச்சினை, இயற்கையான முறையில் கருத்தடை பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபட்டும் பன்னிரண்டு மாதங்களுக்கு மேல் கருத்தரிக்காமல் இருப்பது இன்ஃபெர்டிலிட்டி என்று கூறப்படுகிறது. பாலியல் நோய் தொற்றுகளான கொனோரியா, கிளாமிடியா ஆகியவை PID எனப்படும் பெல்விக் இன்ஃப்ளமேட்டரி நோயை உருவாக்குவதற்கு முக்கிய காரணங்களாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



பாலியல் நோயால் உண்டாகும் PID என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

பெண்களின் ரீபுரொடக்டிவ் உறுப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தி அந்த உறுப்புகளின் செயல்பாடுகளை பாதித்து கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்தும். தீவிரமான நோய் தொற்று உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிக்கலாம்.

பெண்களின் பிறப்பு உறுப்புகளில் ஏற்படக்கூடிய தொற்றுகள் பாலியல் நோயை உருவாக்குகிறது. பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து செர்விக்ஸ் என்ற பகுதி கருப்பையின் வாய் வரை நீள்கிறது. இதன் வழியாக தொற்று நோய் கருப்பைக்குள் இருக்கும் உறுப்புகளுக்கும் பரவுகிறது.

பெண்குயின் கார்னர் 13 : தைராய்டு மாத்திரையை பாதியிலேயே நிறுத்துவது சரியா ? இதனால் கரு நிற்பதில் சிக்கல் வருமா ? மருத்துவரின் விளக்கம்

இந்த நோய் தொற்று கவனிக்கப்படாமல் போகும் பொழுது கர்ப்பப்பை சுவர், பெலோபியன் டியூப், முட்டைகள் உள்ளிட்ட கருப்பையின் அனைத்து பகுதிகளையும் பாதித்து. கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

பாலியல் நோய்த் தொற்றுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாத போது 10 முதல் 15 சதவிகித பெண்களுக்கு பிஐடி எனப்படும் பெல்விக் அழற்சி நோய் ஏற்படுகிறது. சிலருக்கு தீவிரமான பாதிப்பு முதல் சிலருக்கு நிரந்தரமான பாதிப்பு வரை ஏற்பட்டு அவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்கு பிரச்சனைகளை உண்டாக்குகிறது.



இதன் அறிகுறிகள் என்ன

  • பிறப்புறுப்பில் எரிச்சல்

  • அடிக்கடி திரவம் வெளியேற்றம்

  • அடிவயிற்றுவலி

  • மாதவிடாய் இல்லாத போதும் ரத்தப்போக்கு

  • பாலியல் உறவுக்கு பின்பு ரத்தப்போக்கு ஏற்படுவது


PID ஐ தடுப்பது எப்படி

பாலியல் தொற்று நோயால் தான் பெல்விக் அழற்சி நோய் உண்டாகிறது என்பதால் பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது நோய் தொற்று பாதித்த நபருடன் உடலுறவில் ஈடுபடுவது, ஒன்றுக்கும் ஏற்பட்ட நபர்களுடன் பாலியல் உடலுறவு ஆகியவைதான் காரணமாக இருக்கிறது. இருபத்தி ஐந்து வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குத்தான் பிஐடி நோய் தொற்று அதிகம் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. 25 வயதுக்கு உட்பட்ட பெண்களின் செர்விக்ஸ் நோய் தொற்றை எதிர்த்துப் போராடும் அளவுக்கு முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



இதற்கான சிகிச்சைஎன்ன

பிஐடி என்பதற்கான சிகிச்சை இதனை தடுப்பதே என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். பாலியல் நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது இதற்கான முக்கிய சிகிச்சையாக கருதப்படுகிறது. பாலியல் நோய் தொற்று ஏற்படும் போது அதற்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை குறிப்பிட்ட காலம் வரை எடுத்துக் கொள்வது தொற்றை நீக்க உதவுகிறது.‌ பாலியல நோய்த்தொற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லை என்றால் குழந்தை பெற முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வேறு சில உடல்நல உபாதைகளையும் ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
Published by:Sivaranjani E
First published:

Tags: Infertility, Uterus Care, Women Health

அடுத்த செய்தி