இந்தியக் கலாச்சாரத்தில் மாதவிலக்கு என்பது வெளியே பேசப்படக் கூடாத விஷயமாக முன்பு இருந்தது. ஆனால், இன்றைய கால மாற்றத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக மாதவிலக்கு குறித்து மிக விரிவான விவாதங்கள் வெளிப்படையாக நடைபெற்று வருகின்றன. அதன் விளைவாக, பெண்கள் மாதவிலக்கை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் நாப்கின், டேம்போன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து நமக்கு தெரிய வந்துள்ளது. அத்தகைய பொருட்களில் ஒன்றுதான் மாதவிலக்கு கால கப்.
நாப்கின்கள் பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இருப்பதாலும், அதைத்தான் பரவலாக எல்லோரும் பயன்படுத்துகின்றனர் என்பதாலும் அதுதான் முன்னணியில் இருக்கிறது. ஆனால், அளவில் சிறியதாக, பார்ப்பதற்கு ஃபனல் போல உள்ள ரப்பர் அல்லது சிலிகான் மூலம் தயாரிக்கப்பட்ட கப் உதவியுடன் மாதவிலக்கை எதிர்கொள்ள முடியும் என்பது பலருக்கு தெரியவில்லை.
அப்படியே இந்த மென்சுரல் கப் குறித்து தெரிந்திருந்தாலும், அது நல்லதா, கெட்டதா என்ற தயக்கத்துடன் பலர் அதை ஒதுக்கிவிடுகின்றனர். இந்தச் செய்தியில் மாதவிலக்கு கப் என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது, அதனால் பின்விளைவுகள் உண்டா என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பருவ வயது பெண்கள் கப் பயன்படுத்தலாமா?
பருவ வயதில் உள்ள பெண்கள் மாதவிலக்கு கால கப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார் மருத்துவர் தனாயா. பெண்களுக்கு அது சௌகரியமாக இருந்தால் பயன்படுத்துவதில் தவறில்லை என்றார் அவர். குறிப்பாக, 14 வயது சிறுமி கூட இதை பயன்படுத்தி வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.
உங்களுக்கான கப் சைஸ் தேர்வு செய்வது எப்படி
சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்கள் என்றால் அவர்கள் பெரிய சைஸ் கப் பயன்படுத்த வேண்டும். அதுவே சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு மீடியம் சைஸ் கப் போதுமானது. இளம் வயது பெண்களுக்கு சின்ன கப் போதுமானது. அதைவிட சின்ன வயதினருக்கு மிகச் சிறிய கப் இருக்கிறது.
கருத்தரிக்க கருமுட்டை வெளிவரும் நாளை எப்படி கண்டறிவது? அறிகுறிகள் எப்படி இருக்கும்?
பெண் உறுப்புக்குள் கப் சென்றுவிடுமா?
பெண்ணுறுப்பு என்பது திறந்தவெளி துளை கொண்டதைப் போன்ற உறுப்பு அல்ல. அது ஒரு குழாய் போன்ற அமைப்பு கொண்டது. அதிலும் பெண்ணுறுப்பின் உள்ளே கர்ப்பப்பை வாய்க்கான தடுப்புச்சுவர் இருக்கும். ஆகவே ஒருபோதும் கப் உள்ளே சென்றுவிட வாய்ப்பில்லை. அது மட்டுமின்றி மாதவிலக்கு கால கப்பின் நுனிப் பகுதியில் இருக்கும் ரப்பரை பிடித்து இழுத்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே எடுக்கலாம்.
சந்தேகங்களுக்கு தீர்வு
மாதவிலக்கு கப் குறித்த சந்தேகங்களுக்கு அனாடமி வீடியோ முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்து சந்தேகங்கள் தெளிவடைந்த பின்னர், உங்களுக்கு விருப்பம் என்றால்இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.