செக்ஸ் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய நாளாக பிப்ரவரி 12ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த முக்கியத்துவங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லவும், அவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
பொதுவாக செக்ஸ் குறித்து பேசுவதற்கு தயக்கம் நிலவுகிற காரணத்தால், பாலியல் ரீதியிலான நோய்கள், செக்ஸ் குறைபாடு மற்றும் பெண்களுக்கான பிறப்புறுப்பு சிதைவு போன்ற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தவறான அர்த்தங்களை கற்பித்துக் கொள்கின்றனர்.
செக்ஸ் ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தம்
பொதுமக்கள் மத்தியில் மோசமான அல்லது முறையற்ற செக்ஸ் பிரச்சினைகள் நிலவுவதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தான் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மூளையின் பிடியூச்சுவரி கிளாண்ட் என்ற பகுதியில் இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கான ஹார்மோன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்றும், இது தனது நிலையை மாற்றிக் கொண்டு உடலில் செரோடினின் அளவை குறைப்பதோடு, கோர்டிசோல் அளவை அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோர்டிசோல் அளவு அதிகரிக்கும்போது உடலில் செக்ஸ் உணர்வுக்கான ஹார்மோன் உற்பத்தி குறைகிறது அல்லது சிதைக்கப்படுகிறது.
ஆண், பெண் சந்திக்கும் பிரச்சினைகள்
மன அழுத்தம் என்பது ஆண், பெண் இருவரையுமே பாதிக்கும் என்றாலும் கூட, அவர்களது உடலிலும், மனதிலும் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் ஒரே மாதிரியாக இருந்துவிடாது. ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறானவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read : குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி குறித்து எப்போது, எப்படி கற்பிக்கலாம்
செக்ஸ் பிரச்சினைகள் குறித்து பேசும்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தால் ஏற்பட்டுள்ள மனஅழுத்தம் குறித்து பேசாமல் இருந்துவிட முடியாது. நீண்டகாலமாக சமூகத்தில் நிலவும் கொரோனா குறித்த அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு ஒருவித மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஆண், பெண் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தை குறைக்கும் வழிமுறைகள்
* நம் உடலை மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக உடலில் பாலுணர்வுக்கு அடிப்படையான செரோடினின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். *நன்றாக சாப்பிடுவது, நன்றாக உறங்குவது, போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக செரோடினின் அளவை அதிகரிக்க முடியும்.
* சிலருக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடுவது அல்லது நண்பர்களை சந்திப்பு அல்லது புத்தகம் வாசிப்பது போன்ற பழக்கங்கள் மூலம் மன அழுத்தம் குறையும்.
* மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது ஆகிய பழக்கவழக்கங்களை குறைப்பதன் மூலமாகவும், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதன் மூலமாகவும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
* டிரான்ஸ் பேட் கொழுப்பு வகைகள், நிறையூட்டப்பட்ட சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.