முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உயிருக்கே ஆபத்தாகும் டெங்கு அறிகுறிகள்… ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்..!

உயிருக்கே ஆபத்தாகும் டெங்கு அறிகுறிகள்… ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்..!

டெங்கு

டெங்கு

டெங்கு காய்ச்சல் யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. டெங்கு தொற்று பரவலானது லேசான அறிகுறிகளை ஏற்படுத்துவதால், மக்கள் பொதுவாக வீட்டிலேயே சிகிச்சை பெற விரும்புவார்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

இந்த ஆண்டு மழைக்காலம் ஆரம்பமானதில் இருந்து டெங்கு நோய்த்தொற்று பாதிப்புகள் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மக்கள் இந்த சூழ்நிலையை சமாளிப்பது என்பது சற்று கடினமாக மாறியுள்ளது.

மேலும், தற்போது DENV-2 என்ற ஒரு புதிய விகாரத்துடன், டெங்கு நோய்த்தொற்று மிகவும் கடுமையானதாக மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் இது மிகவும் தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்துவதோடு இந்த நோய் பாதிப்பால் ஒருவர் மருத்துவமனையில் சேர வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

தீவிரமடைந்தால் உயிரிழப்பை ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சல்:

டெங்கு காய்ச்சல் யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. டெங்கு தொற்று பரவலானது லேசான அறிகுறிகளை ஏற்படுத்துவதால், மக்கள் பொதுவாக வீட்டிலேயே சிகிச்சை பெற விரும்புவார்கள். இருப்பினும், டெங்கு தொற்று கடுமையான திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கடுமையான டெங்குவால் பாதிக்கப்படலாம். மேலும் ஒருவர் ஏற்கனவே ஒரு வகை டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டு, அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டிருந்தாலும் கூட, மீண்டும் வேறு ஒரு விகாரத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, டெங்கு Flaviviridae குடும்பத்தைச் சேர்ந்தது. இது DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 எனப்படும் வைரஸின் நான்கு தனித்துவமான செரோடைப்களை உருவாக்குகிறது. அனைத்து விகாரங்களை ஒப்பிடும்போது, DENV 2 அல்லது திரிபு D2 மட்டும் மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகிறது. மேலும் உயிருக்கு ஆபத்தான இரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சிக்கு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒரு நோயாளி மிகவும் தீவிரமான கட்டத்தை அடையாளம் என்பதால், டெங்கு அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். தொற்று தொடங்கிய 3-7 நாட்களுக்குள் நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து விழிப்புடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் உடல் டெங்கு அதிர்ச்சி நோய்க்குறியால் பாதிக்கப்படலாம் :

டெங்கு தொற்று தீவிரமடைந்தால், அது டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலாகவும், டெங்கு ஷாக் சிண்ட்ரோமாகவும் மாறி, மரணத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் நான்கு வகையான டெங்கு வைரஸ்கள் இருப்பதால், ஒரு நபர் இந்த வைரஸ்களில் ஏதேனும் ஒன்றால் அல்லது எல்லா வகைகளாலும் பாதிக்கப்படலாம். நீங்கள் ஒரு செரோடைப் வைரஸால் பாதிக்கப்பட்டவுடன், அதற்கு எதிராக நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் நீங்கள் மற்ற விகாரங்களால் பாதிக்கப்படக் கூடிய அபாயத்தில் இருக்கிறீர்கள். வெவ்வேறு டெங்கு விகாரங்களால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலுக்கு ஆளாக்கலாம் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நீங்கள் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலால் (DHF) பாதிக்கப்படும் போது, உங்கள் உடல் அதிர்ச்சிக்கு உள்ளாகலாம். டெங்கு ஷாக் சிண்ட்ரோம் (DSS) என்பது கடுமையான டெங்கு நோய்த்தொற்றின் கடைசி கட்டமாகும். இது அதிகப்படியான இரத்தப்போக்கு, இரத்த ஓட்ட அமைப்பு சீர்குலைத்தல், திரவம் குவிப்பு மற்றும் பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இதன் அறிகுறிகளில் வயிற்று வலி, குமட்டல், தலைவலி, அடிக்கடி வாந்தி, தோலின் கீழ் இரத்தப்போக்கு மற்றும் பல அடங்கும். இரத்த நாளங்களில் இருந்து புரதம் நிறைந்த, திரவக் கூறு கசிவதால், உடல் அதிர்ச்சிக்குள்ளாகிறது.

குளிர்காலத்தில் அதிகரிக்கும் சைனஸ் பிரச்சனை : உங்கள் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு..!

இரத்தக் கசிவு ஆபத்தான முறையில் பிளேட்லெட் அளவைக் குறைக்க வழிவகுக்கும்:

கடுமையான டெங்கு நோய்த்தொற்றுகள் இரத்த நாளங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், இது இரத்த கசிவு மற்றும் தோலின் மேற்பரப்பில் குவிவதற்கு வழிவகுக்கும். டெங்கு கொசு ஒரு நபரைக் கடிக்கும்போது, ​​​​அது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்குவது மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தில் நுழைந்து, வைரஸின் இனப்பெருக்கத்தை செயல்படுத்துகிறது. இது ஒரு பாதிக்கப்பட்ட பிளேட்லெட்டுகள் மூலம் ஆரோக்கியமான பிளேட்லெட்டுகளை சேதப்படுத்த அனுமதிக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு பாதுகாப்புகளை குழப்பி அவற்றை தாக்குகிறது. இது பிளேட்லெட் எண்ணிக்கையில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இந்த நிலை, 'த்ரோம்போசைட்டோபீனியா' என்றும் அழைக்கப்படுகிறது. இது நேரடியாக எலும்பு மஜ்ஜை ஒடுக்கம் அல்லது தன்னுடல் தாக்க எதிர்வினை காரணமாக ஏற்படுகிறது.

சுவாசக் கோளாறு ஏற்படும்:

கடுமையான டெங்கு நோய்த்தொற்றுகள் வரும்போது, ​​அது சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். மூச்சுத் திணறல், மார்பு வலி முதல் உடலில் குறைந்த ஆக்ஸிஜன் அளவு வரை, கடுமையான டெங்கு தீவிர நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் தேவைப்படும்போது நடவடிக்கை எடுக்கவும். அதுமட்டுமின்றி, கடுமையான டெங்கு மற்ற உறுப்புகளையும் பாதிக்கலாம். அதனால்தான் முக்கியமான கட்டத்தில் கண்காணிப்பு என்பது மிகவும் அவசியம்.

உடனடி சிகிச்சை முக்கியமானது:

கடுமையான டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, இரத்தமாற்றம், ஆக்ஸிஜன் சிகிச்சை, எலக்ட்ரோலைட் சிகிச்சை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பலவிதமான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். லேசான அறிகுறிகளைக் கையாள்பவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை சாப்பிடலாம். டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சுவாசக் கோளாறு மற்றும் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தால், அவர்களுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்க முடியும்.

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அல்லது தடுப்பூசி ஏதேனும் இருக்கிறதா?

தற்போது டெங்குவுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் எதுவும் இல்லை. டெங்குவிற்கு எதிரான முதல் தடுப்பூசி டெங்குவாக்ஸியா (CYD-TDV) ஆகும். இது 2015 இல் உரிமம் பெற்றது மற்றும் சில நாடுகளில் 9 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி WHO-வால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெங்கு வைரஸ் DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 என நான்கு செரோடைப்களைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது கிடைக்கக்கூடிய தடுப்பூசி ஒரு செரோடைப்பிற்கு எதிராக மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இது மற்ற மூன்றிற்கு எதிராக நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்காது. எனவே அவை குறைந்த செயல்திறன் கொண்டவையாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Dengue fever