உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்தே இருந்தாலும் கொரோனா வரும் - ஆய்வு

உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்தே இருந்தாலும் கொரோனா வரும் - ஆய்வு

கொரோனா

ஒவ்வொரு வாரமும் 150 நிமிடங்களுக்கு மேல் உடல் செயல்பாடுகளைக் மேற்கொள்ளும் நபர்களை காட்டிலும், உடலுக்கு எந்த வேலைகளையும் கொடுக்காமல் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இரண்டு மடங்கு அதிகரிப்பு.

  • Share this:
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான ஆய்வில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு உட்கார்ந்த வாழ்க்கை முறை மிகவும் கடுமையான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுடன் தொடர்புடையது என்றும் வைரஸ் நோயால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல உடல் செயல்பாடு இல்லாத நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கும், இறப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்றும் ஆய்வில் கூறப்படுகிறது.

உலகளாவிய தொற்றுநோய்க்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து உடலுக்கு எந்த விதமான செயல்பாடுகளையும் கொடுக்காத அமெரிக்கர்கள் பலர் கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாக கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

எந்தவித உடல் செயல்பாடுகளையும் கொடுக்காத நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், உடல் செயல்பாடு வழிகாட்டுதல்களை தொடர்ந்து மேற்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களில் இறப்பு எண்ணிக்கை கூட அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.



இந்த ஆய்வு பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மேம்பட்ட வயது மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட வரலாறு இருப்பவர்களுக்கு மட்டுமே கடுமையான நோய் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து காரணியாக உடல் செயலற்ற தன்மை பார்க்கப்படுகிறது என்பதைக் சுட்டி காட்டியுள்ளனர். அதேசமயம் கடுமையான COVID-19 நோய்த்தொற்றுக்கான வேறு சில ஆபத்து காரணிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இருதய நோய் ஆகியவை அடங்கும்.

வயது மற்றும் உறுப்பு மாற்று வரலாற்றைத் தவிர, அடையாளம் காணப்பட்ட எந்தவொரு அடிப்படை மருத்துவ நிலைமைகள் மற்றும் ஆபத்து காரணிகளைக் காட்டிலும் கடுமையான கொரோனா விளைவுகளுக்கு தொடர்ந்து செயலற்ற நிலையில் இருப்பது அதாவது உடலுக்கு எந்த வேலையும் கொடுக்கலாம் இருப்பது ஒரு வலுவான ஆபத்து காரணியாக இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உண்மையில், புகைபிடித்தல், உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் , இருதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பொதுவாக குறிப்பிடப்பட்ட ஆபத்து காரணிகளுடன் ஒப்பிடும்போது, உடல் செயலற்ற தன்மை அனைத்து விளைவுகளிலும் கொரோனா பரவக்குவதற்கான வலுவான ஆபத்து காரணியாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.



கொரோனா நோய்த்தொற்றின் அபாயத்தை எந்த காரணிகள் அதிகரிக்கின்றன?

கடுமையான கொரோனா நோய்த்தொற்றுக்கு பல ஆபத்து காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் மேம்பட்ட வயது, ஆண் பாலினம் மற்றும் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இருதய நோய் போன்ற சில அடிப்படை மருத்துவ நிலைமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், கடுமையான COVID-19 உடன் தொடர்புடைய பல நீண்ட கால நிலைமைகளுக்கு மேற்கண்டவை நன்கு அறியப்பட்ட ஆபத்து காரணிகளாக இருந்தாலும், உடல் செயலற்ற தன்மை அவற்றில் ஒரு காரணியாக குறிப்பிடப்படவில்லை.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது தடுப்பூசி போட்டு கொள்ளலாமா?

நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையில் அதன் சாத்தியமான தாக்கத்தை ஆராய்வதற்காக, குழு 2020 ஜனவரி முதல் அக்டோபருக்கு இடையில், மருத்துவமனையின் சேர்க்கை விகிதங்கள், தீவிர சிகிச்சை தேவை மற்றும் இறப்பு உள்ளிட்ட தரவுகளை கொரோனா பாதித்த 48,440 இளம் வயதினரோடு ஒப்பிட்டது. அதன்படி சராசரி வயது 47 கொண்ட நோயாளிகளில், மூன்றில் இரண்டு பங்கு பெண்களாக (62 சதவீதம்) இருந்தனர். அவர்களின் சராசரி எடை (பிஎம்ஐ) 31 ஆக இருந்தது.

இது பருமனாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு, சிஓபிடி, இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்ற எந்த ஒரு அடிப்படை பாதிப்பு நிலைகளும் இல்லை. கிட்டத்தட்ட 5 ல் 1 பங்கு (18 சதவீதம்) மக்களுக்கு ஏதேனும் ஒரு மருத்துவ நிலை மட்டுமே இருந்தது. அதேபோல கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு (32 சதவீதம்) மக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுகாதார நிலைமைகளைக் கொண்டிருந்தனர்.



அதோடு பாலினம், வயது மற்றும் அடிப்படை மருத்துவ நிலைமைகள் போன்ற காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டனர். அதன்படி கொரோனா நோயாளிகளில், ஒவ்வொரு வாரமும் 150 நிமிடங்களுக்கு மேல் உடல் செயல்பாடுகளைக் மேற்கொள்ளும் நபர்களை காட்டிலும், தொடர்ச்சியாக உடலுக்கு எந்த வேலைகளையும் கொடுக்காமல் செயலற்ற நிலையில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இத்தகைய நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்பு 73 சதவீதம் அதிகம் என்றும், தொற்றுநோயால் இறப்பதற்கு 2.5 மடங்கு அதிகம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசி மற்றும் சமூக விலகல், முகக்கவசங்களை பயன்படுத்துதல் போன்ற பொது சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது ஆகியவை கடுமையான கொரோனா தோற்று தீவிரத்தையும், இறப்பையும் தடுக்க தனிநபர்கள் எடுக்கக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார அதிகாரிகள் மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published: