செலினாவின் ஒரு மணி நேர உடற்பயிற்சிக்கான செலவு எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் அமெரிக்கப் பாடகி செலினா கோம்ஸ் தன் உடல் ஃபிட்னஸிற்காக ஒரு மணி நேரத்திற்கு செலவிட்ட தொகை ஜஸ்ட் 300 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 20,989).

செலினாவின் ஒரு மணி நேர உடற்பயிற்சிக்கான செலவு எவ்வளவு தெரியுமா?
செலினா கோம்ஸ்
  • News18
  • Last Updated: January 3, 2019, 11:02 PM IST
  • Share this:
இன்றைய வாழ்க்கை முறையில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது டிரெண்டாகி வருகிறது. இதற்காக செலவிடும் விலையும் அதிகமாகவே இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்கப் பாடகி செலினா கோம்ஸ் தன் உடல் ஃபிட்னஸிற்காக ஒரு மணி நேரத்திற்கு செலவிட்ட தொகை ஜஸ்ட் 300 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 20,989).

26 வயதான செலினா கடந்த ஆண்டு லூபஸ் நோய் காரணமாக சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்பட்டு பதட்டமாகவே காணப்பட்டார். பின் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒரு மாத காலம் குடும்பத்தோடும், நண்பர்களுடனும் தன் நேரத்தைச் செலவிட்டார். இதனால் உடலளவிலும் மனதளவிலும் முன்னேறிய நிலையில் தன் இயல்பு வாழ்கைக்கு அவர் திரும்பினார்.

அச்சமயத்தில் தன் உடல் ஃபிட்னஸ் குறித்தும் அவர் அதிக அக்கறை செலுத்தி வந்தார். அவர் ‘ஹாட் பிலாடிஸ்’ எனப்படும் கடுமையான பயிற்சிகளைக் கொண்ட ஒர்க் அவுட்டுகளை பின்பற்றினார். இந்த ஒர்க் அவுட் 95 டிகிரி வெப்பம் நிறைந்த அறையில்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால் உடல் எடை எளிதில் குறைந்து தசைப்பகுதிகள் சீராகிறதாம். இதனால் உடலமைப்பும் ஃபிட்டாக அமைகிறதாம்.
அறையின் வெப்பமானது உடலின் நச்சுத் தன்மையை நீக்கி மன அழுத்தத்தை போக்குகிறது. தசைகள் வெப்பத்தை உள்ளிழுப்பதால் உடலுக்கு இலகுத் தன்மையை அளிக்கிறது. செலிபிரிட்டி ஃபிட்னஸ் டிரெய்னரான எமி ரோசாஃப் டேவிஸ்தான் செலினாவிற்கு பயிற்சிகள் அளிக்கிறார்.

இந்தப் பயிற்சியானது செலினாவிற்கு மட்டும் தனியான அறையில் கூடுதல் கவனத்துடன்  அளிக்கப்படுவதால் 300 டாலர் ஆகிறதாம். மற்ற வாடிக்கையாளர்களுக்கு 125 டாலர் மட்டுமே ஆகிறதாம். இதில் செலினாவிற்குப் பிடித்த ஒர்க் அவுட் ஸ்குவாட்ஸ் பயிற்சிதானாம். செலினாவின் இந்த ஃபிட்னஸ் முயற்சியானது அவரின் ரசிகர்களிடையேயும் தற்போது டிரெண்டாகி வருகிறது.Also watch

First published: January 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading