• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • HIV-யிலிருந்து இயற்கையான முறையில் குணமடைந்த இரண்டாவது நபரை கண்டறிந்த விஞ்ஞானிகள்!

HIV-யிலிருந்து இயற்கையான முறையில் குணமடைந்த இரண்டாவது நபரை கண்டறிந்த விஞ்ஞானிகள்!

எச்ஐவி

எச்ஐவி

அவரிடம் நடத்தப்பட்ட சமீபத்திய சோதனையில் 1.19 பில்லியனுக்கும் அதிகமான ரத்த அணுக்கள் மற்றும் 500 மில்லியன் திசு செல்களில் HIV இருப்பது கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • Share this:
எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV (human immunodeficiency virus)-யிலிருந்து, வைரஸ் தடுப்பு மருந்துகள் எடுத்து கொள்ளாமல் இயற்கையாக குணமாகி இருக்கும் இரண்டாவது நபரை கண்டறிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் HIV-யால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது ஒருநாள் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி தொடர்ந்து ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளை எடுத்து கொள்ளாத போதும் அவரது உடல் தானாகவே HIV-ஐ அகற்றியுள்ளது. HIV-யிலிருந்து இயற்கையாக குணமாகி இருக்கும் உலகின் இரண்டாவது நபர் இவர் என்பதை அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இயற்கை முறையில் தானாகவே HIV-யிலிருந்து குணமாகி இருக்கும் உலகின் இரண்டாவது நபர் ஒரு பெண் ஆவார். இவர் அர்ஜென்டினாவின் எஸ்பரான்ஸாவை சேர்ந்தவர். அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் சமீபத்தில் வெளியானஅறிக்கையின் படி, கடந்த 2013-ஆம் ஆண்டில் HIV நோய் கண்டறியப்பட்ட 31 வயதான பெண், தனது கர்ப்ப காலத்தில் மட்டுமே ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளை எடுத்து கொண்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட சமீபத்திய சோதனையில் 1.19 பில்லியனுக்கும் அதிகமான ரத்த அணுக்கள் மற்றும் 500 மில்லியன் திசு செல்களில் HIV இருப்பது கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு முன் கலிபோர்னியாவை சேர்ந்த 67 வயது மூதாட்டியான லோரீன் வில்லன்பெர்க் என்பவரே தானாகவே HIV-யிலிருந்து குணமான நபராக இருந்தார். தற்போது இரண்டாவது நபராக 31 வயதான பெண் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.



HIV நோயாளியின் ரத்தத்தில் எச்.ஐ.வியின் மரபணு ஆதாரங்களைத் தேடும் பல அதிநவீன சோதனைகள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் 31 வயதான பெண்ணின் உயிரணுக்களில் எவ்வித வைரஸும் கண்டறியப்படவில்லை என்று ஆராய்ச்சி குழுவை வழிநடத்திய டாக்டர் சூ யூ (Dr.Xu Yu) கூறி இருக்கிறார். தற்போதைய HIV எதிர்ப்பு மருந்துகள் வைரஸ் அளவை கண்டறிய முடியாத அளவிற்கு குறைக்கலாமே தவிர, வைரஸை உடலில் இருந்து முழுமையாக அகற்ற முடியாது.

ஆனால் எங்களது ஆய்வில் குறிப்பிட்ட பெண் நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு பல வருடங்கள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வைரஸின் தேக்கங்களை அழித்துள்ளது என்றார். நோயாளியிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான உயிரணுக்களை பகுப்பாய்வு செய்த பிறகு இந்த பெண் நோயாளியின் உடலில் ஒரு வைரஸ் கூட இல்லை என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என்று சொல்ல முடியாது.

உங்களுக்கு வெளிர்ந்த நிறத்தில் சிறுநீர் வருவதற்கு இந்த 7 உணவுகள் தான் காரணம்..!

ஆனால் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தின் மூலம் சோதனை செய்தும் வைரஸ் கண்டறியப்படாததால், நோயாளி தனது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியால் குணமாகி இருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என்றுள்ளார் Xu Yu. HIV கேஸ்களின் இது போன்ற அரிதான நிகழ்வுகள் நோயெதிர்ப்பு மறுமொழிகளை இன்னும் ஆழமாக பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கும். மேலும் இந்த நிலைக்கு எந்த நோயெதிர்ப்பு காரணிகள் அதிகம் பங்களிக்கின்றன என்பதை கண்டறிந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்குப் பயன்படுத்த முடியும் என்றும் கூறி இருக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: