இந்தியாவை பொருத்தவரை கொரோனாவை எதிர்கொள்ள இரண்டாவது பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்ளும் தேவையில்லை என ANI அளித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் நோக்கமும் மக்கள் முதல் ஊசியை வெற்றிகரமாக அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்பதே. அப்படி இந்தியாவில் 90% மக்கள் தடுப்பூசி செலுத்தியதால் சீனாவைப் போல் இந்தியாவில் கொரோனா தாக்குதல் அதிமாக இல்லை.
அதனால்தான் இப்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வகை தொற்றின் எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாகவே உள்ளது.
Covid-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டதே கொரோனா தாக்கம் குறைந்ததற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஏனெனில் மக்கள் தடுப்பூசி செலுத்த செலுத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தது. எனவேதான் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த வரிசையில் இந்தியாவும் களம் இறங்கி வெற்றி கண்டது. எனவே தான் ஆராய்ச்சி குழு உருமாறும் கொரோனாவுக்கு எதிராக போராட பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரித்துக்கொண்டிருக்கிறது.
இஸ்ரேல் கொரோனாவுக்கு எதிரான தனது முதல் நான்காவது பூஸ்டரை அங்கீகரித்துள்ளது. Pfizer-BioNTech என்னும் இந்த நான்காவது பூஸ்டர் கடுமையான நோய் தாக்குதலுக்கு எதிராக 6 வாரங்கள் மட்டுமே உங்களை பாதுகாக்கிறது. பின் நான்கு வாரங்களிலேயே அதன் வீரியம் குறைந்துவிடும்.
உலக சுகாதார அமைப்பு கூற்றுப்படி “ கூடுதலான பூஸ்டர் என்பது வயதானவர்கள், கர்ப்பிணிகள், சுகாதாரதுறையில் பணிபுரிவோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், நோய் பாதிப்பு கொண்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே தேவைப்படும்.
அதேபோல் வருடத்திற்கு ஒரு முறை பூஸ்டர் ஊசி தேவையா என்னும் விவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. காரணம் இந்த பூஸ்டர் ஊசிகள் நீண்ட நாட்களுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாக்காது. எனவே இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு சாத்தியமாகாது என்கின்றனர்.
Also Read : கொலஸ்ட்ரால் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... பூண்டின் 7 நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!
இது எல்லாம் ஒரு புறம் இருக்க பல நாடுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கை வழிகளை நோக்கி படை எடுத்தனர். அதில் இந்தியாவும் ஒன்று. தடுப்பூசிகள், பூஸ்டர் ஊசிகள் வந்தாலும் நீண்டகால ஆரோக்கியத்திற்கு இயற்கையான வழியே சிறந்தது என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19