• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புதிதாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் : முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்ன..?

புதிதாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் : முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்ன..?

ஸ்க்ரப் டைபஸ்

ஸ்க்ரப் டைபஸ்

தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஸ்க்ரப் டைபஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது.

  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மர்மக் காய்சல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா, டெங்கு என சந்தேகப்பட்ட நிலையில், வைரஸின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்குட்படுத்தியபோது, புதிய வைரஸான ‘ஸ்க்ரப் டைபஸ்’ என தெரியவந்தது. மதுரா மாவட்டத்தில் உள்ள கோ (Koh) கிராமத்தில், அதிகமானோர் ஸ்க்ரப் டைபஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் தாக்கும் இந்த பாக்டீரியா, உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து ஆக்ரா கமிஷ்னர் அமித் குப்தா பேசும்போது, இது வெக்டார் போர்ன் வகை நோய் எனத் தெரிவித்தார். மேலும், இது வைரஸ் அல்ல, பாக்டீரியாவால் பரவும் நோய் என்றும் விளக்கம் அளித்தார். ஸ்க்ரப் டைபஸ் குறித்து மும்பை குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் ஹரீஸ் சாஃபில் (Dr Harish Chafle) பேசும்போது, ‘ஓரியன்டியா சுட்சுகாமுஷி’ (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் பரவும் நோய் எனக் கூறியுள்ளார். ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள ’லார்வா பூச்சிகள்’ கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஸ்க்ரப் டைபஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் நாகாலாந்து வரை 2003 -04 காலகட்டங்களிலும், 2007 ஆம் ஆண்டிலும் இந்த வைரஸ் பரவல் இருந்ததாக தெரிவித்துள்ளது. ஸ்க்ரப் டைபஸ் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், சில நேரங்களில் சொறி. நோயின் தாக்கம் தீவிரமான நிலையை எட்டியிருந்தால் நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம் அல்லது கோமா, இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம். மருத்துவர் ஹரீஸ் சாஃபில் பேசும்போது, கடுமையான தொற்றுக்குள்ளானவர்களுக்கு உறுப்புகள் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.



சிகிச்சை:

ஸ்க்ரப் டைபஸ் அறிகுறிகள் தெரியத் தொடங்கியதும் ஆன்டிபாடிகள் எடுத்துக்கொள்வது சிறந்தது என அவர் கூறியுள்ளார். குறிப்பாக, டாக்ஸிசைக்ளின் (doxycycline) ஆன்டிபாடிகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து வயதினருக்கும் இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம். நோய் தாக்கத்திற்கு முன்பு இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்கள், ஒருவேளை ஸ்க்ரப் டைபஸால் பாதிக்கப்பட்டாலும் விரைவில் குணமடைந்துவிடுவார்கள் என மருத்துவர் ஹரீஸ் சாஃபில் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உருவாகியுள்ள புதிய கொரோனா மாறுபாடு C.1.2.. தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?

முன்னெச்சரிக்கை

இந்த பாக்டீரியா தொற்றுக்கு தடுப்பூசிகள் எதுவும் நடைமுறையில் இல்லை. கொசு மற்றும் லார்வா பூச்சிகள் கடிப்பதில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஸ்க்ரப் டைபஸ் பாதிப்புள்ள ஏரியாக்களுக்கு பயணம் மேற்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தாவரக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், புதர் நிறைந்த இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். அந்தப் பகுதிகளில் லார்வா கொசுக்கள் அதிகம் இருக்கும்.



வெளியில் செல்ல நேர்ந்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட DEET பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அரசு கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். லார்வா கொசுக்களின் கடியில் இருந்து தப்பிக்க நடைமுறையில் இருக்கும் மருந்துகளை அப்ளை செய்து கொள்ளுங்கள். குழந்தைகள் வீட்டில் இருந்தால் கை, கால்கள் வெளியே தெரியாத வகையில் உடையணிந்து, கொசு வலைக்குள் அவர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பூச்சி தடுப்பு மருந்துகளை குழந்தைகளின் முகம், கை, கால் மற்றும் கண்களில் படக்கூடாது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: