ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மலேரியா தடுப்பூசிக்கு கொசுக்களையே நேரடியாகப் பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டம் : எப்படி சாத்தியம்..?

மலேரியா தடுப்பூசிக்கு கொசுக்களையே நேரடியாகப் பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டம் : எப்படி சாத்தியம்..?

கொசு

கொசு

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மலேரியாவில் பாதிக்கப்பட்ட 26 பங்கேற்பாளர்களில் 14 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மலேரியா மனிதர்களுக்கு கொசுக்கள் மூலம் பரவக்கூடிய கொடிய தொற்று நோய் ஆகும். பொதுவாக ப்ளாஸ்மோடியம் என்கிற ஒட்டுண்ணியை எடுத்துச் செல்லும் பாதிக்கப்பட்ட அனாஃபெலிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவும் ஒட்டுண்ணி நோயாகும். இதன் மூலம் இந்த ஒட்டுண்ணிகள் உங்கள் இரத்த ஒட்டத்தில் கலந்து சிவப்பு இரத்த அணுக்களைப் பாதிக்கும். இதோடு உடலில் புகுந்து பல்கிப் பெருகுவதற்காக ரத்த அணுக்களை ஆக்கிரமித்து அழிக்கும் கொடிய ஒட்டுண்ணி என்பதோடு பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது.

கொசுக்களின் மூலம் மனிதர்களுக்குப் பரவும் மிகப்பெரிய தொற்று என்றாலும் இதை தடுப்பதற்கு இதுவரை எவ்வித தடுப்பூசிகளும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. அதே சமயம் மலேரியா கிருமியைக் கொல்லும் மருந்துகள், கொசுக்கள் கடிப்பதைத் தடுக்கும் வகையிலான படுக்கை வலைகள், கொசுக்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லிகள் போன்றவை மலேரியாவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த சூழலில்தான் மலேரியாவுக்கு தடுப்பூசிக்குக் கொசுக்களை நேரடியாகப் பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கலந்துக் கொண்ட தன்னார்வலர் ஒருவர் அவரின் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் சுமார் 200 கொசுக்கள் நிரப்பப்பட்ட ஒரு அட்டைப் பெட்டியின் மீது தன் கையை வைத்ததாகவும், கொசுக்கள் கடித்து கை முழுவதும் வீங்கி கொப்புளங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை கேட்கும் போது நம்மில் பலருக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். எனவே இந்நேரத்தில் இந்த ஆய்வுக்குறித்து விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? என்பது குறித்து இங்கே நாமும் அறிந்துக்கொள்வோம்.

மலேரியா தடுப்பூசிக்கு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு..?

மலேரியா தொற்று நோய்க்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக கொசுக்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். இதில் மாற்றியமைக்கப்பட்ட ஒட்டுண்ணிகள் சில பங்கேற்பாளர்களை மலேரியா நோய்த் தொற்றிலிருந்து சில மாதங்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க உதவியுள்ளது. ஆனால் தடுப்பூசிகளை வழங்குவதற்கு கொசுக்களைப் பயன்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை இதன் செயல்திறன் மட்டும் தான்.

Also Read : துளசி டீ குடித்தால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மலேரியாவில் பாதிக்கப்பட்ட 26 பங்கேற்பாளர்களில் 14 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பூச்சிகள் மலேரியாவை உண்டாக்கும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளை நேரடியாக வழங்குகின்றன, அவை மக்களுக்கு நோய்வாய்ப்படாமல் இருக்க மரபணு மாற்றப்பட்டவையாக உள்ளது என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில் மருத்துவரும் விஞ்ஞானியுமான டாக்டர் சீன் மர்பி. மேலும் கொசுக்கள் கடிக்கும் போது மலேரியாவிற்கானத் தடுப்பூசிகளை வழங்க விஞ்ஞானிகள் ஒட்டுண்ணிகளை மரபணு ரீதியாக மாற்ற முடிந்தது என்றும் இதற்காக சிரிஞ்சுக்களை போன்று கொசுக்களைப் பயன்படுத்தியாகவும் தெரிவித்துள்ளனர்.

இதே போன்ற செயல்முறைகளை விஞ்ஞானிகள் கடந்த காலத்தில் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். இருப்பினும் CRISPR இதை நிறைவேற்றுவது இதுவே முதல் முறையாகும். இதில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களின் திரள்களை வெளியிட விஞ்ஞானிகள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக தான் தடுப்பூசிகளை வழங்க கொசுக்களைப் பயன்படுத்த விரும்புகிறோம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி ஒரு நாள் உலகின் முதல் மலேரியா தடுப்பூசியை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் உலக சுகாதார அமைப்பு கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் இதன் செயல்திறன் 30-40 சதவீதம் மட்டுமே என்பதால் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே இதன் செயல்திறனை எப்படி அதிகரிக்கலாம் என்பது குறித்தும் சோதனைகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Malaria, Mosquito, Vaccin