உடல் திரவங்கள் மூலம் மனிதர்களுக்கிடையே பரவும் வைரஸ்.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன? தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

உடல் திரவங்கள் மூலம் மனிதர்களுக்கிடையே பரவும் வைரஸ்.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன? தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: November 20, 2020, 11:30 AM IST
  • Share this:
எபோலா வைரஸ் நோய் முன்னதாக எபோலா காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது. இந்த நோய் வந்தால் 90 சதவீதம் மரணத்தில் முடியும். இந்த நோய் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவக்கூடியது. இதை ஒத்த மற்றுமொரு வைரஸ் பற்றிய ஒரு ஆய்வு தான் இணையத்தில் உலவுகிறது. பொலிவியாவில் அடையாளம் காணப்பட்ட அரிய நோயான 'சப்பரே ரத்தக்கசிவு காய்ச்சலை' (Chapare hemorrhagic fever) ஏற்படுத்தும் வைரஸ் மனிதர்களிடையே பரவக்கூடும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கடந்த திங்களன்று அறிவித்தது.

நடைமுறையில் இல்லாத நோய்க்கு எதிராக பாதுகாப்பான மற்றும் சாத்தியமான தடுப்பூசியை கண்டறிவது அவசியமாகியுள்ளது. நடந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த செய்தி வருகிறது. இதற்கு முன்னர் வைரஸின் ஒரு சிறிய பரவல் 2004ல் ஆவணப்படுத்தப்பட்டது. இது பொலிவியாவில் லா பாஸுக்கு கிழக்கே அமைந்துள்ள சப்பரே பகுதியில் இருந்தது. இது எபோலா போன்ற ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும்.

ஆனால் விஞ்ஞானிகள் இப்போது 2019ம் ஆண்டில் லா பாஸில் உள்ள மூன்று சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டு நோயாளிகள் வைரஸைப் பரப்பியுள்ளனர் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். நோயாளிகளில் 2 மருத்துவ பணியாளர்கள் உட்பட மூவர் இறந்துள்ளதாக Guardian தெரிவித்துள்ளது. CDC தொற்றுநோயியல் நிபுணர் கெய்ட்லின் கோசாபூம் கூறுகையில், ஒரு இளம் மருத்துவ குடியிருப்பாளர், ஆம்புலன்ஸ் மருத்துவர் மற்றும் ஒரு இரைப்பைக் குடலியல் நிபுணர் என அனைவரும், பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்த பின்னர் அவர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் "சுகாதாரப் பணியாளர்களில் இருவர் இறந்த பின்னர், பல உடல் திரவங்கள் வைரஸைக் கொண்டு செல்லக்கூடும் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்," என்று அவர் கூறினார், அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் டிராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜீனின் (ASTMH) வருடாந்திர கூட்டத்தில், இத்தகைய கண்டுபிடிப்புகள் முன்வைக்கப்பட்டன. இந்த வைரஸ் எலிகளால் பரவுகிறது என்று சந்தேகிக்கப்படுகிறது, எலிகள் அதை மனிதர்களுக்கு பரப்பியிருக்கலாம். பொதுவாக, கோவிட் -19 போன்ற சுவாச வைரஸ்களைக் காட்டிலும் உடல் திரவங்கள் மூலம் பரவும் வைரஸ்கள் எளிதில் நோயை பரப்புகின்றன.

கோப்புப் படம்

நோயாளிகளுக்கு காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, ஈறுகளில் இரத்தப்போக்கு, தோல் சொறி, கண்களுக்கு பின்னால் வலி ஏற்பட்டதாக கோசாபூம் கூறினார். நோய்க்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை, அதாவது நோயாளிகளுக்கு நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிற திரவங்கள் போன்ற ஆதரவான பராமரிப்பை மட்டுமே வழங்க முடியும். CDCன் நோயியல் நிபுணரான மரியா மரியா மோரல்ஸ்-பெட்யுல், இவை அனைத்திற்கும் சப்பரே வைரஸ் தான் அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டபோது அந்த அணி "மிகவும் ஆச்சரியமாக இருந்தது" என்றார்.மனச்சோர்வைத் தடுக்க முக்கியமானது போதிய தூக்கம் : ஆய்வில் தகவல்

"நாங்கள் வைரஸை தனிமைப்படுத்தி, பொதுவான நோயைக் கண்டுபிடிப்போம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக அவர் கூறினார். இதே போன்ற அறிகுறிகளைக் கொண்ட வைரஸ், டெங்கு என எளிதில் தவறாகக் கண்டறியப்படலாம் என்பதால், இந்த வைரஸ் பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் புழக்கத்தில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நோய் பரவலை ஏற்படுத்தும் அதன் திறனைப் புரிந்து கொள்ள, விஞ்ஞானிகள் தொடர்ந்து வைரஸை ஆராய்ச்சி செய்ய விரும்புவதாகவும் அவர் கூறினர்.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading