Home /News /lifestyle /

தேனீக்களின் நினைவாற்றலை மேம்படுத்துவது இதுதானா..? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பில் கிடைத்த ஆச்சரியம்

தேனீக்களின் நினைவாற்றலை மேம்படுத்துவது இதுதானா..? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பில் கிடைத்த ஆச்சரியம்

தேனீக்கள்

தேனீக்கள்

Bumblebees வகை தேனீக்களின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை குறிப்பிட்ட வகை குடல் பாக்டீரியாக்கள் மேம்படுத்தும் அதே நேரத்தில் தங்களது இந்த கண்டுபிடிப்பு மனிதர்களுக்கும் பொருந்தும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

தேனீக்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகை குடல் பாக்டீரியா, நினைவாற்றலை மேம்படுத்தும் என்பதை ஒரு சர்வதேச ஆய்வு குழு தங்களது சமீபத்திய ஆய்வின் போது கண்டுபிடித்து உள்ளது. பல பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த சர்வதேச ஆய்வின்படி, குறிப்பிட்ட வகை குடல் பாக்டீரியாக்கள் Bumblebees எனப்படும் வண்டு தேனீக்களின் அறிவாற்றல் தன்மையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.

Bumblebees வகை தேனீக்களின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை குறிப்பிட்ட வகை குடல் பாக்டீரியாக்கள் மேம்படுத்தும் அதே நேரத்தில் தங்களது இந்த கண்டுபிடிப்பு மனிதர்களுக்கும் பொருந்தும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

சீனாவின் ஜியாங்னான் பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகம், பின்லாந்து நாட்டின் Oulu பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றின் ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வானது 'லாக்டோபாகிலஸ் அபிஸ்' (Lactobacillus apis) எனப்படும் குடல் பாக்டீரியா இனம், Bumblebees-களின் மேம்பட்ட நினைவாற்றலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. கூடு மற்றும் மகரந்தச் சேர்க்கை சூழல்கள், செயல்பாடுகள், சமூக தொடர்புகள் மற்றும் நோய்க்கிருமிகளின் வேறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்து இந்த பாக்டீரியா பல்வேறு Bumblebees-களில் பல்வேறு விகிதங்களில் காணப்படுகிறது.

குறைவான லாக்டோபாகிலஸ் அபிஸ் பாக்டீரியாவை கொண்ட தேனீக்களை விட குடலில் இந்த வகை பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள தேனீக்கள் சிறந்த மற்றும் மேம்பட்ட நினைவாற்றலை கொண்டதாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள். Lactobacillus apis வகை குடல் பாக்டீரியாக்கள் அடங்கி இருக்கும் உணவுகளை உண்ணும் Bumblebees தேனீக்கள் சாதாரண உணவை உண்ணும் தேனீக்களை விட நீண்ட கால நினைவுகளை கொண்டிருப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.



இந்த ஆய்வு முடிவு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) இதழில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த முடிவு குடலில் வாழும் டிரில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் விலங்குகளின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான வளர்ந்து வரும் ஆதாரங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து உள்ளது.

இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான டாக்டர் லி லி கூறுகையில் (Dr Li Li), ஒரு குறிப்பிட்ட குடல் பாக்டீரியத்தின் அளவு இயற்கையான மாறுபாடு நினைவகத்தை பாதிக்கிறது என்பது மட்டுமல்லாமல், ஒரு காரண இணைப்பையும் காட்டுகிறது. அதே பாக்டீரியா இனத்தை ஒரு தேனீயின் உணவில் சேர்ப்பதன் மூலம் அவற்றின் நினைவுகளை மேம்படுத்த முடியும் என்று எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன என்று கூறி இருக்கிறார்.

தினமும் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..? யாரெல்லாம் குடிக்கக் கூடாது?

இது தொடர்பாக இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்ட டாக்டர் லி லி, ஆனால் போதுமான ஆராய்ச்சி மூலம், மனிதர்களுக்கும் இதே விளைவை உருவாக்கும் நுண்ணுயிரிகளையும் கண்டுபிடிக்க முடியும் என்றார்.



இந்த ஆராய்ச்சியின் போது தேனீக்களின் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்களை சோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு வண்ண செயற்கை பூக்களை உருவாக்கினர். இதில் 5 நிறங்கள் இனிப்பு சுக்ரோஸ் கரைசலுடனும் மற்ற 5 குயினின் கொண்ட கசப்பான சுவை கரைசலுடனும் தொடர்புடையது.

சமைக்கும்போது 2 மலைப்பூண்டையும் சேர்த்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்..!

சர்க்கரை சுவையுடன் எந்த நிறங்கள் தொடர்புடையவை என்பதை தேனீக்கள் எவ்வளவு விரைவாக அறிந்து கொள்ள முடிந்தது என்பதையும், 3 நாட்களுக்குப் பின் ஒரு பின்தொடர்தல் சோதனையில் இந்த தகவலை அவற்றால் நினைவு வைத்து கொள்ள முடிந்ததா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். இதன் அடிப்படையில் தான் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
Published by:Sivaranjani E
First published:

Tags: Bee

அடுத்த செய்தி