கோவிட்-19 வைரஸ் தடயங்கள் வெளிப்படும் போது ஒளிரும் மாஸ்க்குகளை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஜப்பானில் உள்ள கியோட்டோ ப்ரிஃபெக்ச்சுரல் பல்கலைக்கழக (Kyoto Prefectural University) ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய கேம் சேஞ்சிங் தொழில்நுட்பத்தை உருவாக்கி அசத்தி உள்ளனர்.
மேலும் இந்த கண்டுபிடிப்பு வீட்டிலேயே குறைந்த விலையில் வைரஸை பரிசோதிக்க உதவும். மேற்கு ஜப்பானில் அமைந்துள்ள கியோட்டோ ப்ரிஃபெக்ச்சுரல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் யசுஹிரோ சுகமோட்டோ (Yasuhiro Tsukamoto) மற்றும் அவரது குழுவினரால் இந்த புதிய மாஸ்க் கண்டுபிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள இந்த புதிய மாஸ்க் கோவிட்-19 தடயங்களுடன் (Covid-19 traces) தொடர்பு கொள்ளும்போது, மிக பிரகாசமாக மாறும். அப்படி மாஸ்க் பிரகாசமாக ஒளிர்ந்தால் வைரஸ் இருப்பதை மாஸ்க் குறிக்கிறது என்று அர்த்தம். இந்த புதிய மாஸ்க்கானது கோவிட்-19 தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை சரி பார்ப்பதற்கான அடையாள மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை பொறிமுறைக்கு பெரும் பங்களிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த மாஸ்க் ஒளிர்ந்தால் அதை அணிந்திருக்கும் நபர்கள் தொற்று பாதிப்புகள் தீவிரமாவதற்கு முன் விரைவில் சிகிச்சை பெறலாம். மேலும் தீவிர நோய் அபாயத்தை குறைத்து, புதிய க்ளஸ்டர்கள் உருவாவதையும் தடுக்கலாம்.
இந்த ஸ்பெஷல் மாஸ்க்கில் 2 தனித்துவமான பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களில் நெருப்புக்கோழி முட்டையின் ஆன்டிபாடிகள் (ostrich egg antibodies) மற்றும் ஒளிரும் நிறமாக செயல்படும் ஃப்ளோரசன்ட் டை (fluorescent dye) ஆகியவை அடங்கும். தனித்துவ கண்டறியும் நுட்பம் கொண்ட இந்த கோவிட்-கண்டறியும் ஃப்ளோரசன்ட் மாஸ்க்குகள் தொடர்பான வேலைகள் அனைத்தும் சரியாக நடந்து மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறப்பட்டால் 2022-க்குள் மார்க்கெட்டில் புழக்கத்திற்கு வரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒமைக்ரான் வேரியண்ட்.. மருந்துகளும் சிகிச்சைகளும் பயன் தருமா?
உடலில் படையெடுக்கும் உயிரினங்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிபாடிகளை உருவாக்க கூடியது சிறப்புப் பறவைகள் என்பதால் தான் இந்த மாஸ்க்கில் ostrich egg antibodies பயன்படுத்தக் காரணம் ஆகும். விஞ்ஞானிகள் நெருப்புக்கோழி முட்டைகளில் இருந்து பெறப்பட்ட கோவிட்-19 ஆன்டிபாடிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட ஃபில்டரை பயன்படுத்தி மாஸ்க்கில் இருந்து அகற்ற கூடிய ஃப்ளோரசன்ட் டையை உள்ளடக்கிய ஒரு ஸ்ப்ரேவை உருவாக்கி உள்ளார்கள்.
மாஸ்க் எப்போது கோவிட்-19 உடன் தொடர்பு கொள்கிறதோ அப்போது அது புற ஊதா ஒளியின் (UV light) கீழ் ஒளிரும். நெருப்புக்கோழி முட்டைகளைப் பயன்படுத்தி மேலும் அற்புதமான தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்று சுஹிரோ சுகமோட்டோ நம்புகிறார். Covid-19-க்கான சுய-பரிசோதனை கருவிகளை இதே போன்ற எளிதான மற்றும் திறமையான முறைகளை உருவாக்கும் வழிமுறையை பயன்படுத்தத்' தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Mask, Covid-19, Omicron