இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் எடை என்பது பலருக்கும் அதிகரித்தவண்ணம் உள்ளது. உடல் பருமனை குறைக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் அவற்றில் சில மட்டுமே எதிர்பார்த்த பலன்களைத் செய்கிறது. அதே போன்று ஒவ்வொருவரின் உடலுக்கும் ஏற்றவாறு இந்த செயல்பாடுகள் மாறுபடும். எதுவாக இருந்தாலும், தினமும் சாப்பிடும் உணவில் இருந்து தான் இவையெல்லாம் தொடங்குகிறது. நீங்கள் ஒவ்வொரு வேளையிலும் எவ்வளவு அளவு உணவு எடுத்து கொள்கிறீர்கள், அதில் உள்ள கலோரிகள் போன்றவற்றை அவசியம் குறித்து கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது போன்று பின்பற்றி வந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
எடை குறைக்க வேண்டுமானால், இதற்காக தினமும் 15 நிமிடம் ஒதுக்கியே ஆக வேண்டும் என்று கூறுகின்றனர். தினசரி 15-நிமிடம் செலவழித்தால், தொடர்ந்து உங்கள் உடல் எடை குறைவதை நீங்கள் உணரலாம். மேலும் உங்களின் குறிக்கோளை அடைவதற்கான வாய்ப்புகளை இது அதிகரிக்கலாம். ஒரு நாளில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நீங்கள் ஏன் குறித்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி இனி விரிவாக பார்ப்போம்.
உணவு பற்றிய குறிப்பு
உணவு நாட்குறிப்பு அல்லது சாப்பிடும் உணவுகளை குறிப்பு எடுத்து கொள்ளுதல் ஒரு நல்ல பழக்கமாகும். நீங்கள் ஒரு நாளில் உண்ணும் ஒவ்வொரு உணவும் குறித்தும் அதில் தேதியுடன் குறிப்பிட்டு விடுங்கள். இதைப் பொறுத்து ஒரு நாள் அதிகமான கலோரிகள் உள்ள உணவை எடுத்து கொண்டால் மறுநாள் அதை விட குறைவாக நீங்கள் சாப்பிட இது உதவும்.
ஒர்க்அவுட் முடித்து அடுத்த 30 நிமிடத்திற்குள் இந்த விஷயங்களையெல்லாம் உடனே செஞ்சிடனும்..!
அதே போன்று நீங்கள் தினமும் சாப்பிடும் உணவு பற்றிய குறிப்புகள் உங்களின் உணவியல் நிபுணர்கள் அல்லது ஊட்டச்சத்து நிபுணருக்கு உங்கள் உணவுப் பழக்கத்தைப் புரிந்து கொள்ள இது உதவும். அதன் அடிப்படையில் உங்கள் உணவு அட்டவணையைத் திட்டமிடவும் இது வழி செய்கிறது.
ஆய்வுகளின் முடிவுகள்
எடை குறைப்புக்கான உணவு குறிப்பேடு என்பது நன்றாக உதவுவதாக பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. உடல் பருமன் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின்படி, 15 நிமிடம் உங்களின் உணவு பழக்கம் குறித்து குறிப்பு எடுத்து வைத்து வந்தால் அது தொடர்ச்சியாக பல மாற்றங்களை தரும் என்று அறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 150 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்களின் உணவுப் பழக்கத்தை சரியாக கண்காணித்தவர்களே அதிகபட்ச எடையை குறைதுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தினசரி குறிப்பு
வெர்மான்ட் பல்கலைக்கழகம் மற்றும் தென் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் 10 சதவீத உடல் எடையை குறைத்தவர்கள், முதல் மாதத்தில் சராசரியாக 23 நிமிடங்கள் தங்கள் உணவுப் பழக்கத்தைப் பதிவு செய்வதாகக் கூறுகின்றனர். ஆறு மாதங்களின் முடிவில், சராசரி நேரம் 14.6 நிமிடங்களாகக் இது குறைந்திருந்தது. எனவே தினமும் குறைந்தது 15 நிமிடம் உங்களின் உணவு பழக்கத்தின் குறிப்பிற்காக செலவு செய்தால் பல மடங்கு நன்மைகள் உண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.