உலகம் இன்னமும் கொரோனாவிலிருந்து விடுபடாமல் தவித்து வரும் நிலையிலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மிகப்பெரிய நாடுகளே எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்து வரும் நிலையிலும், ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற இன்னொரு வைரஸ் உலகை அச்சுறுத்தக் காத்திருக்கிறது என்று எபோலா வைரஸைக் கண்டுப்பிடித்த விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.
இந்த வைரஸுக்கு இப்போதைக்கு டிசீஸ் எக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுவும் கோவிட்-19 போல் வேகமாகப் பரவக்கூடியது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இப்போதுதான் கொரோனா தடுப்பூசிகள் வெளிவந்து உலகம் சற்று நிம்மதியடைந்துள்ள நிலையில் கொரோனாவின் உருமாறிய புதிய வகையின் அச்சுறுத்தலினால் இங்கிலாந்து மீண்டும் முழு அடைப்புக்குள் சென்று விட்டது. வைரஸ் அடுத்தடுத்து அதன் வரிசைமுறையை மாற்றிக் கொண்டே போனால் வாக்சினும் வேலை செய்யுமா என்பது பற்றி நிபுணர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
1976-ல் முதல் முதலாக எபோலா எனும் கொலைகார வைரஸை ஐடிஎம் ஆய்வாளர்கள் கைடோ வான் டெர் குரோயென் மற்றும் பீட்டர் பயட் ஆகியோர் கண்டுப்பிடித்தனர்.
எபோலா வைரஸை கண்டுப்பிடிக்க உதவிய பேராசிரியர் ஜான் ழாக் முயம்பே டாம்ஃபம் என்ற இந்த விஞ்ஞானிகளில் ஒருவர்தான் தற்போது ஆப்பிரிக்க மழைக்காடுகளிலிருந்து புதிது புதிதாக கொலைகார வைரஸ்கள் உலகம் பூராவும் பரவும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். காங்கோவில் ஒரு பெண்ணுக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிஎன்என் செய்திகளின்படி இந்தப் பெண்ணிக்கு பல சோதனைகள் நடத்தப்பட்டு எபோலா உட்பட இல்லை என்று வந்தது, ஆனால் காய்ச்சல் நிற்கவில்லை. இதனால்தன இது டிசீஸ் எக்ஸ் வைரஸாக இருக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
டிசீஸ் எக்ஸ் என்பதில் எக்ஸ் என்பது ‘எதிர்பாராதது’ என்ற பொருளைக் குறிப்பதாகும். இப்போதைக்கு இது பற்றி அனுமானமாகவே கூறப்பட்டு வருகிறது.
இது பற்றி பேராசிரியர் முயம்பே டாம்ஃபம் சிஎன்என் ஆங்கில ஊடகத்துக்குக் கூறும்போது, “தற்போது புதிய நோய்க்கூறு வைரஸ்கள் நம்மைத் தாக்கும் அச்சுறுத்தல் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இதுவும் மனிதகுலத்துக்கு அச்சுறுத்தல்தான்” என்றார். இதுவும் கோவிட்-19-ஐ விடவும் கொடியதாகவே இருக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.
மேலும் விலங்குகளிலிருந்து மனிதனிடத்தில் பரவும் வைரஸ்கள், நுண் கிருமிகளும் அதிகரிக்கும் என்கிறார் அவர். காடுகளை அழிப்பதால் வன விலங்குகள் பறவைகள் இருக்குமிடங்களை இழந்து மனிதர்கள் வாழும் இடங்களை நோக்கி வருவதுதான் பிரச்சினை என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Disease, Ebola virus, Health, Virus