பள்ளி மாணவர்களின் புத்தகப் பை முதுகு தண்டு வடத்தை பாதிக்குமா? அதிர்ச்சியடைய வைக்கும் ஆய்வு முடிவுகள்

மாணவர்களின் எடையை விட புத்தகப்பை 10 சதவீதம் அதிகமாக இருந்தால் தீவிரமான முதுகுத் தண்டுவட பாதிப்புகளை சந்திக்க நேரும்

பள்ளி மாணவர்களின் புத்தகப் பை முதுகு தண்டு வடத்தை பாதிக்குமா? அதிர்ச்சியடைய வைக்கும் ஆய்வு முடிவுகள்
புத்தகப் பை
  • News18
  • Last Updated: July 11, 2019, 4:02 PM IST
  • Share this:
பள்ளித் துறையில் எந்த விஷயத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள்,  மாணவர்கள் என எவரிடம் கேள்வி எழுப்பினாலும்,பலரது பதில் பள்ளி புத்தக பையின் சுமையைக் குறைக்க வேண்டும் அல்லது மாற்று வழி வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு சுமை மிகுந்தது அந்த பை. வகுப்புகள் நடக்கிறதோ இல்லையோ எல்லா புத்தகங்கள், நோட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயம்.

இந்நிலையில் Journal of Applied Ergonomics ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்களின் புத்தகப் பையானது அவர்களின் எடையை விட 10 சதவீதம் அதிகமாக இருந்தால் தீவிரமான முதுகுத் தண்டுவட பாதிப்புகளை சந்திக்க நேரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சக்கரங்கள் கொண்டு தள்ளிக் கொண்டு செல்லப்படும் ட்ராலி பேக்குகள் பயன்படுத்துவோர் எடையிலிருந்து 20 சதவீதத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தினாலும் தண்டு வடப் பிரச்னை வரும் என்று எச்சரிக்கிறது.
இந்த ஆய்வில் 49 நடுநிலைப் பள்ளி மாணவர்களை உட்படுத்தியுள்ளது. கினிமேட்டிக் ஆய்வு படி அவர்களுக்கு எடை நிறைந்த பைகளை மாற்ற வைத்து அவர்களின் உடல்வாகு எந்த அளவிற்கு வளைகிறது, அவர்களால் எவ்வளவு எடை வரைத் தாங்க முடிகிறது. அதை மாட்டிக் கொண்டு எவ்வாறு நடக்க முடிகிறது என்பன போன்ற பல கோணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவில் பள்ளி மாணவர்கள் தங்கள் எடையிலிருந்து 10 சதவீதம் அதிகமான எடையில் பள்ளி பைகளை அணிந்து சென்றால் முதுகுத் தண்டு வளைவு, முதுகு தோள்பட்டை வலி , நுரையீரல் பிரச்னை மற்றும் அதைத் தொடர்ந்து பல பிரச்னைகளை சந்திக்க நேரும் என்று எச்சரிக்கிறது. இது உடனே தெரியாது. நாளடைவில் அதன் தீவிரம் அதிகரிக்கும்போதுதான் தெரியும் என ஆய்வில் கூறியுள்ளது.இது தவிர Indian Medical Association எடுத்த மருத்த ஆய்வில் அவர்களின் உடல் வளர்ச்சியும் பாதிக்கும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமன்றி அவர்களின் தோள்பட்டை அமைப்பு, முதுகுத் தண்டவடும் என உடல் அமைப்புகளில் மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்