• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Menopause Symptoms : மெனோபாஸ் அறிகுறிகளுக்கு குங்குமப் பூவில் நிவாரணம் கிடைக்கும் என ஆய்வில் தகவல்..!

Menopause Symptoms : மெனோபாஸ் அறிகுறிகளுக்கு குங்குமப் பூவில் நிவாரணம் கிடைக்கும் என ஆய்வில் தகவல்..!

மெனோபாஸ் அல்லது மாதவிடாய் நிறுத்தம்

மெனோபாஸ் அல்லது மாதவிடாய் நிறுத்தம்

கண், தோல், சுவாசம் மற்றும் வாயுப் பிரச்சனைகளுக்கு குங்குமப் பூவை வீட்டு வைத்தியத்தில் ஏற்கனவே பயன்படுத்தி வருகிறோம்.

  • Share this:
மெனோபாஸ் அல்லது மாதவிடாய் நிறுத்தம் என்பது மாதவிடாய் சுழற்சி முடிவுக்கு வருவது. வயது அதிகரிக்கும்போது பெண்களின் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்காது. இதனால், மாதவிடாய் சுழற்சி நிற்கும். இந்தியாவில் இருக்கும் பெண்கள் பொதுவாக 45 வயது முதல் 50 வயதுகளில் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகிறது. பெண்களுக்கான மாதவிடாய் சுழற்சியின் நிறுத்தம் தொடங்கும்போது ஹார்மோன்களில் மாற்றம் உண்டாகும்.

தலைவலி, தூக்கிமின்மை, பாலுணர்ச்சி இழப்பு, யோனி வறட்சி ஆகியவற்றை எதிர்கொள்வார்கள். சில பெண்களுக்கு எலும்பு பிரச்சனைகள் கூட இருக்கும். மன அழுத்தம், சோர்வு ஆகியவையும் இருக்கும். இந்த பிரச்சனைகள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இதில் இருந்து விடுபடுவதற்கு மருத்துவ ரீதியில் சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள்.

குங்கும பூ

மெனோபாஸ் நிலையானது ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். அவரவர் உடலின் நிலையை பொறுத்து மாதவிடாய் சுழற்சி முடிவுக்கு வரும். ஆனால், அப்போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சோர்வில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை மருத்துவத்தில் ஏதேனும் வழி இருக்கிறதா? என ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஹார்மோன் மாற்றங்களில் எந்தவித இடையூறு விளைவிக்காமல், மன அழுத்தம் மற்றும் சோர்வில் இருந்து விடுபட வைப்பதற்கு குங்குமப்பூ உதவுகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



மெனோபாசல் மெடிசன் (Menopausal Medicine,) என்ற இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வில், மாதவிடாய் நிறுத்தம் அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுழற்சி முறையில் 12 வாரங்களுக்கு குங்குமப் பூவை கொடுத்துள்ளனர். ஆய்வின் முடிவில், மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வில் அவர்களிடம் இல்லை. நெகடிவ் எண்ணங்கள் தோன்றுவதும் குறைந்துள்ளது.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையா? இந்த ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்

கண், தோல், சுவாசம் மற்றும் வாயுப் பிரச்சனைகளுக்கு குங்குமப் பூவை வீட்டு வைத்தியத்தில் ஏற்கனவே பயன்படுத்தி வருகிறோம். தற்போது மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் அறிகுறிகளை கட்டுபடுத்துவதிலும் உபயோமாக இருக்கிறது என்பது ஆய்வாளர்களுக்கு கூடுதல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆய்வு முடிவுகள்

இந்த ஆய்வின்போது இரண்டு விதமாக குங்குமப் பூவை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். குங்குமப் பூ மற்றும் பார்மாக்டிவ் பயோடெக் குங்குமப் பூவின் சாறு இரண்டையும் பெண்களுக்கு சுழற்சி முறையில் கொடுத்துள்ளனர். அதில், குங்குமப் பூவின் சாறு நல்ல விளைவுகளை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மெனோபாஸ் நிறுத்தத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளால் அவர்கள் அவதிப்படுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு எனத் தெரிவித்துள்ள அவர்கள், இயற்கை மருத்துவத்தின் மூலம் பெண்கள் நிவாரணம் பெற முடியும் என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், மற்ற மூலிகைகளில் குங்குமப் பூவில் கிடைத்த முடிவுகள் போல் கிடைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: