Home /News /lifestyle /

வயிற்றுக் கொழுப்பை குறைக்க இந்த 5 ஆரோக்கியமான பானங்களை ட்ரை பண்ணுங்க..

வயிற்றுக் கொழுப்பை குறைக்க இந்த 5 ஆரோக்கியமான பானங்களை ட்ரை பண்ணுங்க..

ஆரோக்கிய பானம்

ஆரோக்கிய பானம்

உங்கள் பெல்லியில் சேரும் கொழுப்பை குறைக்க இந்த ஆரோக்கியமான பானங்களை வீட்டிலேயே செய்து குடிங்க கட்டாயம் நல்ல முடிவினை நீங்கள் காண்பீர்கள்.

சிறிய குழந்தையில் தொடங்கி, பெரியவர்கள் வரை உருவ அமைப்பையே மாற்றி விடும் ஒரு பிரச்சனையாக தொப்பை (Belly Fat) உருவெடுத்திருக்கிறது. முன்பெல்லாம் தொப்பை பிரச்சனை மிகக்குறைந்த நபர்களுக்கே வந்தது. ஆனால் இன்றைக்கு பள்ளி செல்லும் சிறுவன் கூட தொப்பையுடன் இருப்பதை காண முடிகிறது. இதற்கு காரணம்  உணவு பழக்கத்தில் தொடங்கி, வாழ்க்கை முறையே மாறி இருப்பது தான். தொப்பை என்பது வயிற்றின் உள்ளேயும், அடிவயிற்று பகுதியிலும்  கொழுப்பு சேர்வதால் உண்டாகிறது. தொப்பை என்றால் அழகு சார்ந்த பிரச்னையாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது  ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்சனைகளின் ஆதாரமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

உடலில் சேரும் கொழுப்பை குறைப்பதில் உடற்பயிற்சிகள் எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறதோ அதே அளவுக்கு சரியான உணவுகளை சரியான வழியில் சாப்பிடுவதும் மிக முக்கியம். உடல் எடையை குறைப்பதற்கான பாதையில், நம்முடைய உணவு மற்றும் பான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு நல்ல சூடான பானத்துடன் உங்கள் நாளைத் தொடங்கும் போது உங்கள் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். அந்த வகையில் உங்கள் பெல்லியில் சேரும் கொழுப்பை குறைக்க இந்த ஆரோக்கியமான பானங்களை வீட்டிலேயே செய்து குடிங்க கட்டாயம் நல்ல முடிவினை நீங்கள் காண்பீர்கள்.

எலுமிச்சை, தேன் குடிநீர்: (Lemon, honey in lukewarm water)

பல சுகாதார நன்மைகளுக்காக பரவலாக அறியப்பட்ட ஆரோக்கியமான பானம் தான் இது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுக் கொழுப்பு கட்டாயம் குறையும்.ஏனெனில் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பெக்டின் ஃபைபர், வைட்டமின் சி ஆகியவை நிறைந்திருக்கும். இந்த பானம் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிற்று கொழுப்பை குறைப்பதில் நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்பதை உறுதி செய்யும் ஒரு குணப்படுத்தும் அமுதமாக இது கருதப்படுகிறது.

வெந்தய நீர்: (Fenugreek drink)

வெந்தயம் அதிக ஊட்டச்சத்து நிறைந்த ஒரு விதை ஆகும். இது எடை இழப்பை எளிதாக்குகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மேலும் கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்மபடுத்துகிறது.வெந்தயம் உடலில் வெப்பத்தை உருவாக்கி கொழுப்பு இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு அறியப்பட்ட ஒன்றாகும். அதன் அசாதாரண நன்மைகளைப் பெற தூங்கும் போது சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் காலையில் ஊறவைத்த பானத்தை உட்கொள்வதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

சீரக குடிநீர்: (Cumin water)

சீரக நீர் செரிமானத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இது மிகக் குறைந்த கலோரி பானமாகும். மேலும் இது பசி வேதனையை கட்டுப்படுத்துகிறது. இதனை குடிப்பதால் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்புகள் விரைவில் குறைவதை நீங்கள் காணலாம்.

கிரீன் டீ மற்றும் புதினா பானம்: (Green tea and mint)

கிரீன் டீ மற்றும் புதினா இலைகள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு சக்திவாய்ந்த பொருட்களின் கலவையும் உங்கள் எடை இழப்புக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும். புதினா காரணமாக உங்கள் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, கொழுப்பை கரைக்கக்கூடிய சக்தியாக மாறுகின்றன.கிரீன் டீ கூட கொழுப்பை கரைக்க உதவுவதோடு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இந்த பானத்தில் ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல் பண்புகள் உள்ளன.

இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம் (Ginger and lemon drink)

அதிக உடல்பருமனை கொண்டவர்களில் கொழுப்பை கரைக்க உதவும் பானங்களில் ஒன்று தான் இஞ்சி மற்றும் எலுமிச்சை கலவை. இதன் பண்புகள் நரம்புகளை அமைதிப்படுத்துகிறது.உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. அதில் உள்ள மருத்துவ குணங்கள், வலி நிவாரணி, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த பண்புகள் காரணமாக, வயிற்று கொழுப்பை குறைப்பதில் சிறந்த பானமாக இது கருதப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Belly fat, Health Benefits, Health tips

அடுத்த செய்தி